எல்லாம் முடியும், எதுவும் முடியும் என உள்மனம் கூறுமாக இருந்தால் இந்த உலகில் முடியாதது எதுவுமே இல்லை என்பதை உணர்த்த முடியும்.
இதற்கு சிறந்த உதாரண கர்த்தாக்களாக விளங்குபவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
இரண்டு கைகளை இழந்தவர்கள், இரண்டு கால்களை இழந்தவர்கள் பலர் தங்களாலும் எதையாவது சாதிக்க முடியும் என்பதை இவ்வுலகில் நிரூபித்தவண்ணம் உள்ளனர்.
அத்தகையவர்களது மன உறுதி, விடா முயற்சி, தன்னம்பிக்கை என்பன சில தேகாரோக்கியமிக்கவர்களிடம் இல்லாதது வேதனைக்குரியதும் வெட்கத்துக்குரியது மாகும்.
அந்த வகையில் 37 வயதான பார்பி தோமஸ் என்ற பெண்மணி முழு உலகுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார் என்று கூறினால் மிகையாகாது.
பார்பி தோமஸ் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது தனது இரண்டு கைகளையும் துரதிர்ஷ்டவசமாக இழந்தார்.
டெக்சாஸ் மாநிலத்தில் தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த பார்பி, மின்பிறப்பாக்கி ஒன்றின்மீது ஏறியபோது மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியதால் அவரது இரண்டு கைகளும் கருகிப்போயின. இதனை அடுத்து தோற்பட்டையிலிருந்து கைகள் இரண்டும் சத்திர சிகிச்சை மூலம் முற்றாக அகற்றப்பட்டன.
அந்த விபத்தை அடுத்து அவர் உயிர் வாழ்வார் என யாருமே நினைக்கவில்லை. அவரால் எவ்வித பிரயோசனமும் இல்லை என எண்ணியவர்களுக்கு எதுவும் சாத்தியம் என்பதை அவர் புரிய வைத்துள்ளார்.
பார்பி தோமஸ் இன்று உடற்கட்டழகியா கவும் நாகரிக நங்கையாகவும் அனைவர் மத்தியிலும் வலம் வருகின்றார்.
"விபத்திலிருந்து நான் மீள்வேன் என யாரும் நினைத்திருக்கவில்லை. நான் ஆரோக்கியமடைந்தபோது வைத்தியர்க ளால்கூட நம்பமுடியவில்லை. நான் அணிந்திருந்த இறப்பர் பாதணிகள்தான் என்னைக் காப்பாற்றியதாக அவர்கள் நம் பினர். ஆனால், கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார் என்பதை நான் அறிவேன். ஏனெனில் எனக்காக கடவுள் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்" என 37 வயது நிறைந்த இரு கைகளுமில்லாத உடற்கட்டழகி பார்பி கூறுகின்றார்.
2003இலிருந்து உடற்கட்டழகிப் போட்டி களில் பங்குபற்றிவரும் இவர், 13 மற்றும் 17 வயதுகளை உடைய இரண்டு மகன்மாருடன் ஃபீனிக்ஸில் வாழ்ந்து வருகின்றார்.
அண்மையில் நடைபெற்ற உடற்கட்டழகிப் போட்டியில் கலந்துகொண்ட பார்பி தோமஸ், "நான் சீவிப்பதையிட்டு இறை வனுக்கு நன்றி கூறுகின்றேன். நான் ஒரு போதும் எதிர்மறையாக சிந்திப்பதை அனுமதித்ததில்லை. அதேபோன்று என் னால் முடியாது எனச் .ெசால்வதையும் நான் தவிர்த்துக் கொண்டேன். முடியாது என்பது ஒரு காரணமல்ல. முடியாதது என்று எதுவுமே இல்லை. துணிந்தால் எதையும் சாதிக்கலாம். அதுவே எனது வாழ்க்கைப் பயணத்திற்கு வெற்றிப்படியாக அமைந்தது" என்கிறார் பார்பி தோமஸ்.
ஆரம்பவியலாளர்களுக்கான பல்வேறு உடற்கட்டழகிப் போட்டிகளில் பங்கேற்று இவர் வெற்றியும் பெற்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற உடற்கட்டழகி மற்றும் உடற்பயிற்சிப் போட்டிகளில் பார்பி தோமஸ் முறையே ஐந்தாம், ஆறாம் இடங்களைப் பெற்று அனைவரையும் பிமிக்கவைத்தார்.
பார்பியின் ஆற்றல்களைக் கண்டு வியப்படைந்த உடற்கட்டழகர்களுக்கான சர்வதேச சம்மேளனத்தின் அங்கத்துவ அமைப்பான தேசிய உடற்கட்டமைப்பு குழு, பார்பி தோமஸுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர் என்ற பெயரிலான விருது ஒன்றை முதல்தடவையாக கடந்த வருடம் வழங்கி கௌரவித்தது.
"அவர் மிகவும் கடுமையான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரால் எவ்வாறு இத்தகைய பயிற்சிகளை அன்றாடம் செய்யமுடிகின்றது என நாங்கள் வியந்து போனோம். ஆனால் அவரது துணிச்சல் மிக்க ஆற்றல்களினால் எங்களது இதயங்களில் ஆழப் பதிந்துவிட்டார்" என தேசிய உடற்கட்டமைப்புக் குழுவின் அரிசோனா தலைவர் மைல்ஸ் நெஸ்ல் கூறினார்.
"அவர் அழகானவரும்கூட. அவர் மேடையில் துள்ளிக் குதிக்கும் விதமும் அவர் புரியும் உடற்கலை சாகசங்களும் எங்களை மெசிலிர்க்கவைத்தன. அவர் புரிந்த சாகசங்களில் அரைவாசியை என் னால் விபரித்துக் கூற முடியவில்லை. அவரது அசைவுகள் கவர்ச்சிகரமாக மட்டு மல்ல விளையாட்டு வீராங்கனைக்கே உரிய பாணியில் அமைந்துள்ளதுடன் வேடிக் கையாகவும் உணர்ச்சி ததும்புவதாக வும் இருக்கின்றன" என மைல்ஸ் நெஸ்ல் குறிப்பிட்டார்.
பார்பி தோமஸ் இவ்வுலகில் ஒரு வித்தியாசமான துணிச்சல்மிக்க பெண் என்பதை நிரூபித்து வருகின்றமை மாற் றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல தேகா ரோக்கியமிக்கவர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
- -டோனி விக்டர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக