திங்கள், 23 செப்டம்பர், 2013

நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கு Fundoplication சிகிச்சை

வாய் முதல் ஆசன வாய்ப் பகுதி வரையான உள்ளுறுப்புக்களில் வரக்கூடிய அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக் கும் துறையே ‘கேஸ்ட்ரோ என்ட்டரோலஜி’. அண்மைக்காலமாக, இந்தத் துறை தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் பெரும்பாலான நோயாளர்களைக் காண முடிகிறது. காரணம், மாறி யிருக்கும் நமது உணவுப் பழக்கவழக்கம். முன்னைய காலங்களில், நமது மண்ணில் விளைந்த இயற்கையான தானியங்கள், காய்கறிகளை உணவாகக் கொண்ட நாம், மேற்கத்திய நாகரிகத்தின் ஊடுருவலால், அவர்களது உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம். விலை குறைந்த வீதியோரக் கடைகளில் உணவருந்த ஆரம்பித்திருக்கிறோம். ஏற் கனவே பயன்படுத்திய எண்ணெய்யை மறுநாளும் பயன்படுத்தும் பழக்கமும் வந்துவிட்டது. இவையனைத்தும் குறி வைப்பது சமிபாட்டுத் தொகுதியையே என்று மிகத் தெளிவாகக் கூறினார் டாக்டர் ஜி.ராஜரத்தினம். இவர், திருச்சி, தில்லைநகரில் இயங்கிவரும் ‘சிதார்’ அதிநவீன பல்சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர். மேலைத்தேய மருத்துவமனை போன்ற மிகச்சிறந்த உட்கட்டமைப்புடன், அமைக் கப்பட்டிருக்கும் இம்மருத்துவமனையில், வாசகர்களுக்காக அவரைச் சந்தித்தோம்.

சமிபாட்டுத் தொகுதியில் பிரதானமாக வரக்கூடிய வியாதிகளாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்? அவற்றுக்கான சிகிச் சைகள் எவை?

முதலில் சிகிச்சைகள் பற்றிச் சொல்லிவிடுகிறேன். இந்தத் துறையைப் பொறுத்தளவில், சமிபாட்டுத் தொகுதியின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு மருத்துவர் என்ற அளவிற்கு இத்துறை முன்னேறியுள்ளது. ‘ரொபோட்டிக் சேர்ஜரி’ மூலமும் இத்துறைசார்ந்த சிகிச்சைகளைச் செய்துகொள்ளலாம். இன்னும் சில மாதங் களில் திருச்சியில் ரொபோட்டிக் சிகிச்சை யையும் சிதார் மருத்துவமனையில் அறிமுகப் படுத்தவிருக்கிறோம்.

முன்னைப்போல், வயிற்றை வெட்டிச் செய்யப்படும் சத்திர சிகிச்சைகள் மிக மிகக் குறைந்துவிட்டன. ‘லேபராஸ்கோப்பி’ எனப்படும் நுண்துளை சிகிச்சை முறை மூலமாக, தழும்பே இல்லாத வகையில் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். அதுமட் டுமன்றி, அந்நாளில், சிகிச்சை முடிந்தபின் ஓரிரு மாதங்கள் மருத்துவமனையில் தங்கு வதோ அல்லது வீட்டில் ஓய்வெடுப்பதோ கட்டாயமாக இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. சிகிச்சை முடிந்த இரண்டாம், மூன்றாம் நாளே நோயாளர்கள் வீடு செல்ல முடியும். இந்த சிகிச்சைகள், சமிபாட்டுத் தொகுதிக்கும் பொதுவானதே. இனி, சமி பாட்டுத் தொகுதியில் தோன்றக்கூடிய பிரச் சினைகள் பற்றிப் பார்க்கலாம்.

நெஞ்செரிச்சல்: உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஒரு ‘வால்வு’ப் பகுதி இருக்கிறது. எமது இன்றைய உணவுப் பழக்கம் மற்றும் புகைபிடித்தல் போன்ற இன்னும் சில காரணங்களால், இந்த வால்வு தளர்ந்து விடுகிறது. உணவைக் கூழாக்குவதற்கு ஒருவகை அமிலம் இரைப்பையில் சுரக்கும். வால்வு தளர்ந்துவிடுவதால், கூழாக்கும் நடைமுறையின்போது, அந்த அமிலம் உணவுக்குழாய்க்குள் பாய்கிறது. இதுவே நெஞ்செரிச்சலுக்குக் காரணம். இதனால் ஆஸ்துமா கூட வரலாம். இதை குணப்படுத்தாவிடின், உணவுக்குழாயில் புற்றுநோயைத் தோற்றுவிப்பதற்கும் இடம் உண்டு. மருந்துகள் மூலம் குணமாகாவிடில், ‘லேபராஸ்கோப்பி ஃபன்டோப்ளிகேஷன்’ (Fundoplication) என்ற சிகிச்சை மூலம், அந்த வால்வை இறுக்கிவிடுவோம். இதனால் மீண்டும் நெஞ்செரிச்சல் தோன்ற வாய்ப்புகள் இருக்காது.

வயிற்றுப்புண்: வயிற்றுப்புண் பிரதான இடம் வகிக்கிறது. இத்தனை நாட்களாக, சரியான நேரத்திற்குச் சாப்பிடாத தால், சமிபாட்டுக்காக வயிற்றினுள் சுரக்கப் படும் ஒருவித அமிலமே வயிற்றுப் புண்ணுக்குக் காரணம் எனக் கருதப்பட்டது. அந்த அமிலத்தைக் குறைப்பதற்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டன. ஆனால் தற்போது, ‘ஹெலி கோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனப்படும் ஒரு வகை பக்டீரியாவும் வயிற்றுப்புண்ணுக்குக் காரணமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவுவகைகளை உட்கொள்ளும்போது அதில் இருக்கும் இந்த பக்டீரியா, வயிற்றில் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனால், வயிற்றுப்புண்ணுக்காக வருபவர்களுக்கு, இந்த பக்டீரியாவை எதிர்க்கும் தன்மையுடைய ‘என்டிபயோட்டிக்’ மருந்துகளும் கொடுக்கி றோம்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளைக் கொண்டு, உங்களுக்கு வந்திருப்பது வயிற்றுப்புண்தான் என்று எண்ணிக் கொண்டு, அதற்கான மாத்திரைக ளையும் நீங்களே தெரிவுசெய்து எடுத்துக் கொள்ளக்கூடாது. இப்போதெல்லாம், வயிற்றுப்புண்ணுக்காக வருபவர்களுக்கு என்டோஸ்கோப்பி பரிசோதனை செய்கி றோம். இதனால், நோயாளிக்கு வந்திருப்பது வெறும் வயிற்றுப்புண்தானா அல்லது புற்றுநோயா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால், வயிற்றில் புற்று நோய் வந்திருப்பதை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால்கூட, சத்திர சிகிச்சை செய்தபின் சில மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்திவிடலாம்.

கல்லீரல்: மஞ்சட்காமாலையால் பாதிக் கப்படும் பிரதான உறுப்பு கல்லீரல். நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆனவுடன் கல்லீரலுக்குத்தான் செல்லும். கல்லீரல் என்பது ஒரு பெருந்தொழிற்சாலை போன்றது. உண்ணும் உணவில் உள்ள நச்சுப் பொருளைப் பித்தநீர் வழியாகவும் (மலம் மூலம்) சிறுநீரில் உப்பாகவும் மாற்றி வெளியேற்றுவது, குளுக்கோஸ் மற்றும் புரதம் போன்ற உட லுக்குத் தேவையான சத்துக்களை, அதைப் பயன்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பி வைப்பது, உடலுக்குத் தேவையான அல்புமின் எனும் புரதச்சத்தை உற்பத்தி செய்வது, இரத்தம் உறைதலுக்குத் தேவை யான விற்றமின்களை உற்பத்தி செய்வது என்பன போன்ற பல வேலைகளைக் கல்லீரல் செய்கிறது. மஞ்சட்காமாலை மூலம் கல்லீரல் பாதிக்கப்படுவதால் இவ்வியக்கங்கள் தடைப்படுகின்றன. வெளியேற்றப்படவேண்டிய பித்த நீர் உடலில் தேங்கிவிடும். பித்த நீர் மஞ்சள் நிறமாக இருப்பதனால், உடலும் மஞ்சள் நிறமாகிவிடும். வயிறு வீங்கிவிடும். கல்லீரல் சுருங்கிவிடுவதால் அதன் இரத்த ஓட்டம் தடைப்படும். இதனால் இரத்த நாளங்கள் வீங்கி, வெடித்து இரத்த வாந்தியும் ஏற்படும். உயிராபத்து ஏற்படவும் வாய்புள்ளது.

மஞ்சட்காமாலைக்கு முக்கிய காரணம் மதுப்பழக்கம். மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்படைவதனால் மஞ்சட்காமாலை உண்டாகலாம். அடுத்து, ‘ஹெப்படைட்டிஸ்’ ஏ முதல் ஈ வரையான ஐந்து வகைக் கிருமிகள் மூலமும் மஞ்சட்காமாலை வரலாம். இது, எயிட்ஸ் போலவே, இரத்தம் மூலம் பரவக்கூடியது. இதில், ஹெப்படைட்டிஸ் ஏ மற்றும் பி வைரஸ்களுக்கு இப்போது தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எம் போன்ற மத்திய ஆசிய நாடுகளில், இவ்விரு கிருமிகள் மூலமே பெரும்பாலும் மஞ்சட்காமாலை வரும். இவை தவிர, சுயமருத்துவம் செய்து கொள்பவர்கள் அதிகளவில் மாத்திரைகளை உட்கொள்வதாலும் மஞ்சட்காமாலை வரலாம். பூஞ்சை படர்ந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதாலும் மஞ்சட்காமாலை வரலாம். இவ்வாறான காரணங்களால் முழு மையாகப் பாதிப்படைந்த கல்லீரலுக்கும் இப்போது கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை செய்துகொள்ளலாம். இந்த சிகிச்சையை, திருச்சியில் வழங்கும் ஒரே மருத்துவமனை சிதார் மருத்துவமனைதான்.

கணையம்: மஞ்சட்காமாலையால் கணையமும் பாதிக்கப்படலாம். இது தவிர கணையப் புற்றுநோய் ஏற்படலாம். அதிகமாக மது அருந்துவதால் கணையம் அழுகியும் போய்விடலாம். கணையப் பாதிப்பினால் உண்டாகக்கூடிய மிகக் கடுமையான நோய், நீரிழிவுதான். காரணம், இன்சுலினைச் சுரப்பதே கணையத்தின் முக்கிய வேலை. இது பாதிக்கப்பட்டால், இன்சுலின் சுரப்ப திலும் கோளாறுகள் ஏற்பட்டு நீரிழிவு நோய் வந்துவிடும். கணையம் பாதிக்கப் பட்டிருப்பதை, முதுகுவலி, பசியின்மை, உடலில் அரிப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டு அறியலாம். இவ்வாறான நோய்க ளுக்கும் மருந்துகள் மூலமே குணப் படுத்த லாம் என்றாலும், தேவையான ஸ்கேன் பரிசோ தனைகளைச் செய்து, கணையப் பாதிப்பின் அளவை அறிந்துகொண்டு, அதன்படி சத்திர சிகிச்சையைச் செய்துகொள்ளலாம்.

மேலும், கணையத்தில் கற்கள் அல் லது கட்டி என்பனவும் தோன்றலாம். கணை யத்தில் கற்கள் இருந்தால் கணையம் சீராகச் செயற்படாது. இதனால், நீரிழிவு ஏற்படும்; வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இதையும் சத்திர சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

பெருங்குடல்: மலச்சிக்கலே பெருங் குடலில் ஏற்படக்கூடிய பிரதான நோய். இதற்கு முக்கியமான காரணம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் அதிகளவில் உட் கொள்ளாமையே. மலச்சிக்கலால், கழிவுகள் குடலினுள்ளேயே நீண்டநாட்கள் தேங்கி இருப்பதால், குடல் புற்றுநோய் தோன்றவும் வாய்ப்புகள் உண்டு. ஆகையால், நார்ச்சத்து உடலில் தேவையான அளவு இருந்தால், குடல் புற்றுநோய் தோன்றும் வாய்ப்பு அரிது.

அதுமட்டுமன்றி, மலச்சிக்கல் நோய் உள்ளவர்கள் மலங்கழிப்பதற்கு அதிக சிரமம் எடுத்துக்கொள்வதால், ‘பைல்ஸ்’ எனப்படும் மூலநோயும் ஏற்படலாம். தற் போது மூலநோய்க்கு லேசர் சிகிச்சைகள் அறிமுகமாகியுள்ளன. வலியே இல்லாமல், இரத்தக் கசிவுகள் இல்லாமல் சில நிமிட நேரங்களில் முடித்துக்கொள்ளக்கூடிய வகை யில் இந்த சிகிச்சைகளை நாம் செய்து வரு கிறோம்.

அதிக உடல் எடையும் உங்கள் துறை யுடன் தொடர்புகொண்டதுதானே? அவ் வாறானவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கு கிறீர்கள்?

ஆம். உடல் எடை என்பது, பல நோய் களுக்கு மூல காரணமாக இருக்கிறது. இரை ப்பை பெரிதாக இருப்பதால், அந்த இரைப்பை நிரம்பும் வரையில் உணவு உண்ட திருப்தி ஏற்படாததால்தான் அதிகளவில் உணவு உட் கொள்கிறார்கள். இவர்களுக்கு ‘ஒபிசிட்டி சேர்ஜரி’ எனப்படும் அறுவை சிகிச்சையை வழங்குகிறோம். லேபராஸ்கோப்பி மூலம் வழங்கப்படும் சிகிச்சையில், அதிக உடல் எடை கொண்டவரின் இரைப்பையைச் சுருக்கி விடுகிறோம். இதன் மூலம், அவர்களுக்கு உணவு உண்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலதிகமாக உணவு உண்பதைத் தவிர்த்துக்கொள்ள முடியும். வயதானவர்கள் பலர் இப்போது இந்த சிகிச்சையைச் செய்துகொள்கிறார்கள். காரணம், வயதான காலத்தில் உடல் எடை அதிகரித்திருந்தால், மூட்டு வலி, நீரிழிவு, இதயநோய் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரலாம். அந்த வாய்ப்புகளைத் தவிர்க்கவே இந்த சிகிச்சையைச் செய்து கொள்கிறார்கள். இந்த சிகிச்சையை, சமிபாட்டுத் தொகுதி தொடர்பான மருத்துவத்தின் அதி உன்னத வளர்ச்சி என்றே நான் சொல்வேன்.

இயற்கையாக உள்ள இரைப்பையை சுருக்குவதன் மூலம், அவர்களின் நாளாந்த இயக்கத்தில் பிரச்சினைகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்படாதா?

ஏற்படாது. தேவைக்கு அதிகமாக உட லில் சேரும் சத்துப்பொருட்கள், உடல் எடை குறைப்பு சிகிச்சைக்குப் பின் உடல் இயக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும். அதேநேரம், சிகிச்சைக்குப் பின், தமது உடல் இயக்கத்திற்குத் தேவையான அளவு உணவை அவர்கள் உட்கொள்வதால், இந்த சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படாது.

இயற்கையான உணவுகளை சரியான நேரத்தில், போதுமான அளவு மட்டும் உண்டு, உடற்பயிற்சிகள் செய்து, மது, புகைப்பழக்கம் என்பவற்றைத் தவிர்த்து வாழந்தால் குடல் சம்பந்தமான நோய்கள் எம்மை அண்டாது.

சந்திப்பு : ஏ.எஸ்.தேவராஜன்

தொலைபேசி: 0091 431 2751101-5

அலைபேசி: 0091 95970 89102

மின்னஞ்சல்: drrajatrichy@gmail.com

இணையம்: www.cetharhospitals.com
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல