தனது நிறை காரணமாக பெறாமகன் மூச்சுத்திணறி இறந்த விபரீத சம்பவத்தையடுத்து நடவடிக்கை
தனது சின்னஞ்சிறு பெறா மகன் மீது உருண்டு விழுந்து அவன் மூச்சுத்திணறி உயிரிழக்கக் காரணமாயிருந்த உலகின் அதிநிறை கூடிய பெண் தனது 1000 இறாத்தல் நிறையை 5 வருடங்களில் 600 இறாத்தலால் குறைத்துள்ளார்.
அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மேரா ரொஸலெஸ் (32 வயது) என்ற மேற்படி பெண், தனது 2 வயது பெறா மகனான எலிஸியோ மீது உருண்டு விழுந்து அவனைக் கொன்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தார்.
அவரின் சகோதரியான ஜமி உணவை உண்ண மறுத்த தனது மகனான எலிஸியோவை திரும்ப திரும்ப தூரிகையொன்றால் மோசமாக அடித்துள்ளார்.
இதன்போது தனது சகோதரி பாலகனை அடிப்பதைத் தடுக்க முயன்ற மேரா, தவறுதலாக பாலகன் மீது உருண்டு விழுந்துள்ளார்.
இந்நிலையில் பாலகன் மூச்சுத் திணறி உயிரிழந்தான். ஆரம்பத்தில் மேரா திட்டமிட்டு படுகொலை செய்ததாக கருதப்பட்டது.
எனினும், 2008 ஆம் ஆண்டு மேரா படுகொலை செய்யவில்லை எனவும் சிறுவனின் மரணத்துக்கு அவரது அளவு கடந்த நிறையே காரணம் எனவும், அதனால் மேரா குற்றவாளியல்ல எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், அவரது சகோதரி ஜமி சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 15 வருட சிறைத் தண்டனை விதிப்புக்குள்ளானார்.
இந்நிலையில், தனது பெறா மகனின் மரணத்துக்கு காரணமான தனது நிறையை குறைக்க தீவிரமாகப் போராடிய மேரா, தனது நிறையை 600 இறாத்தலால் குறைத்துள்ளார். தற்போது அவரது நிறை 400 இறாத்தலாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக