நாம் அன்றாடம் வாழும் வாழ்வில் நமக்கு ஏற்படும் உடல் நலக்குறைவில் சிறிது கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக, நமது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அல்லது வலிகள் போன்றவற்றை கண்காணித்துவரவேண்டும். இவற்றை அலட்சியம் செய்துவந்தால் அது நம்மை தீராத நோய்க்கு வழிவகுத்து விடும்.
உடம்பு வலிகள் பொதுவானதாக இருந்தாலும் அதனை அலட்சியப் படுத்தக்கூடாது. அடிக்கடி ஏற்படும் வலிகள் மற்றும் எப்பொழுதும் இருக்கும் வலிகள் போன்றவை உங்கள் உடலின் பயன்பாட்டை பெரிதும் பாதிக்கும். உதாரணமாக, சிலர்க்கு தலைவலி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், இது நீண்ட காலம் நீடித்து வந்தாலோ அல்லது அடிக்கடி வந்தாலோ, மைக்ரேன் என்னும் மூளை நோயைக் குறிக்கும்.
நீங்கள் அலட்சியப்படுத்தக்கூடாத உடம்பு வலிகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் சில வலிகளை பற்றி இப்பொழுது படிக்கலாம்.
எப்பொழுதாவது ஏற்படும் நெஞ்சு வலி யானது உடல் அழுத்தம் அல்லது ஊட்டச்சத்து இல்லாத உணவினால் இருக்கலாம். ஆனால், நெஞ்சு வலி என்பது ஹார்ட் அட்டாக் நோயின் முக்கிய அறிகுறி என்பதை மறந்துவிடக்கூடாது. ஹார்ட் அட்டாக்கின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் நெஞ்சு வலி வருவதை தவிர்க்க முடியாது. நெஞ்சு வலியை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது குறிப்பாக சோர்வுடன் ஏற்படும் சுவாச குறைப்பாட்டை அலட்சியம் செய்யக்கூடாது.
முன்பு கூறியது போல், தலைவலி ஏற்படக் காரணமாக இருப்பது அழுத்தம், தூக்கமின்மை, மூளையில் இறுக்கம் ஆகியவைதான். ஆனால், இந்த தலை வலி நீட்டித்தாலோ அல்லது அதிகரித்தாலோ உடனே டாக்டரை அணுகவேண்டும். சுவாச ஒழுங்கின்மையுடன் கூடிய தலைவலி மைக்ரேன் அட்டாக்காக இருக்கலாம். இது அனுரிசம் எனப்படும் நமது மூளையில் டைம் பாம் போன்று எப்பொழுதுவேண்டுமானாலும் வெடித்து சிதறி நமது மூளை திசுக்களை பாதிக்ககூடியதாகவும் இருக்கலாம். அதனால், தலைவலியை அலட்சியம் செய்யாதீர்கள்.
வயிற்று வலி என்பது எல்லா வயதினர்க்கும் இருபாலர்க்கும் வரக்கூடிய ஒன்றாகும். இதற்கு காரணம் தவறான டயட், தீவிரமான உடல் இறுக்கம் அல்லது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் ஆகும். ஆனால், இவை நீட்டித்து மற்றும் வீக்கம் ஏற்பட்டால், உங்களுக்கு குடல் நோய்பிடிப்பு, வயற்று நோய்பிடிப்பு,கல்லீரல் கற்கள் பிரச்சனை அல்லது பெண்களில் ஓவரியன் தொற்றுநோய் இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதனால், அடிவயிற்று வலியை அலட்சியம் செய்யாதீர்கள்.
அதிக அழுத்தம், ஒழுங்கின்மையான டயட் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் கால்களிலும் முட்டிகளிலும் வலி ஏற்படும். சில சமயங்களில், பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் கால் வலி ஏற்படும். ஆனால், இதனுடன் சேர்ந்து வீக்கம் ஏற்பட்டால் அது இரத்த கட்டு நோய் அல்லது மூட்டு நோயாகவும் இருக்கலாம். மேலும், தொடர் மூட்டு வலியினால் மூட்டு ஒழுங்கின்மை அல்லது தசைநார் பிரச்சனை யாகவும் இருக்ககூடிய வாய்ப்பு அதிகம். கால்கள் நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது அதனால்,கால் வழியை அலட்சியம் செய்யாதீர்கள்.
வயது காரணமாகவும்,ஒழுகின்மையான உட்காரும் நிலைகளாலும், அல்லது உறங்கும் நிலைகளாலும் கொழுப்பு அடுக்கு சேருவதாலும் மேலும் பல காரணங்களாலும் முதுகு வலி ஏற்படும். ஆனால் இவை அடிக்கடி ஏற்பட்டால் ஸ்பாண்டலிசிஸ் மற்றும் முதுகெலும்பு ஒழுங்கின்மை போன்றவை ஏற்படலாம். முதுகு வலி மிகவும் வலியுள்ளதாக இருக்கும். மேலும் அது பக்கவாதப் படுத்தி நம்மை படுத்தபடுக்கையாக்கி விடும்.
நாம் அலட்சியம் செய்யாக்கூடாத சில முக்கிய உடம்பு வலிகள் இருக்கின்றன. மற்ற வலிகளான கழுத்து வலி, பல் வலி, கண் வலி, எலும்பு மற்றும் தசை வலி போன்றவைகளையும் அலட்சியம் செய்யக்கூடாது. வலி அதிகரிக்கும் போது கவனம் கொண்டு டாக்டரை அணுக வேண்டும். ஊட்டச்சத்துடன் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து, எதிர்காலத்தில் இந்த வலிகளில் இருந்து விடுபடுங்கள்.
Thatstamil
பெரும்பாலோருக்கு உடல்நலக் குறைவால் உடல் வலி ஏற்படுவது என்பது பொதுவான ஒன்றாகும். இந்த வலிகளுக்கான காரணங்கள் உடல் அழுத்தம், இறுக்கம், ஊட்டச்சத்து இல்லாத உணவுபழக்கம், வாழ்க்கைமுறை மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகும். நமது உடல் சரிவர இயங்காமல் இருந்தால் தான் உடம்பில் வலிகள் ஏற்படும்.உடம்பு வலிகள் பொதுவானதாக இருந்தாலும் அதனை அலட்சியப் படுத்தக்கூடாது. அடிக்கடி ஏற்படும் வலிகள் மற்றும் எப்பொழுதும் இருக்கும் வலிகள் போன்றவை உங்கள் உடலின் பயன்பாட்டை பெரிதும் பாதிக்கும். உதாரணமாக, சிலர்க்கு தலைவலி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், இது நீண்ட காலம் நீடித்து வந்தாலோ அல்லது அடிக்கடி வந்தாலோ, மைக்ரேன் என்னும் மூளை நோயைக் குறிக்கும்.
நீங்கள் அலட்சியப்படுத்தக்கூடாத உடம்பு வலிகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் சில வலிகளை பற்றி இப்பொழுது படிக்கலாம்.
நெஞ்சு வலி
எப்பொழுதாவது ஏற்படும் நெஞ்சு வலி யானது உடல் அழுத்தம் அல்லது ஊட்டச்சத்து இல்லாத உணவினால் இருக்கலாம். ஆனால், நெஞ்சு வலி என்பது ஹார்ட் அட்டாக் நோயின் முக்கிய அறிகுறி என்பதை மறந்துவிடக்கூடாது. ஹார்ட் அட்டாக்கின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் நெஞ்சு வலி வருவதை தவிர்க்க முடியாது. நெஞ்சு வலியை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது குறிப்பாக சோர்வுடன் ஏற்படும் சுவாச குறைப்பாட்டை அலட்சியம் செய்யக்கூடாது.
தலை வலி
முன்பு கூறியது போல், தலைவலி ஏற்படக் காரணமாக இருப்பது அழுத்தம், தூக்கமின்மை, மூளையில் இறுக்கம் ஆகியவைதான். ஆனால், இந்த தலை வலி நீட்டித்தாலோ அல்லது அதிகரித்தாலோ உடனே டாக்டரை அணுகவேண்டும். சுவாச ஒழுங்கின்மையுடன் கூடிய தலைவலி மைக்ரேன் அட்டாக்காக இருக்கலாம். இது அனுரிசம் எனப்படும் நமது மூளையில் டைம் பாம் போன்று எப்பொழுதுவேண்டுமானாலும் வெடித்து சிதறி நமது மூளை திசுக்களை பாதிக்ககூடியதாகவும் இருக்கலாம். அதனால், தலைவலியை அலட்சியம் செய்யாதீர்கள்.
அடிவயிற்று வலி
வயிற்று வலி என்பது எல்லா வயதினர்க்கும் இருபாலர்க்கும் வரக்கூடிய ஒன்றாகும். இதற்கு காரணம் தவறான டயட், தீவிரமான உடல் இறுக்கம் அல்லது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் ஆகும். ஆனால், இவை நீட்டித்து மற்றும் வீக்கம் ஏற்பட்டால், உங்களுக்கு குடல் நோய்பிடிப்பு, வயற்று நோய்பிடிப்பு,கல்லீரல் கற்கள் பிரச்சனை அல்லது பெண்களில் ஓவரியன் தொற்றுநோய் இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதனால், அடிவயிற்று வலியை அலட்சியம் செய்யாதீர்கள்.
கால் வலி
அதிக அழுத்தம், ஒழுங்கின்மையான டயட் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் கால்களிலும் முட்டிகளிலும் வலி ஏற்படும். சில சமயங்களில், பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் கால் வலி ஏற்படும். ஆனால், இதனுடன் சேர்ந்து வீக்கம் ஏற்பட்டால் அது இரத்த கட்டு நோய் அல்லது மூட்டு நோயாகவும் இருக்கலாம். மேலும், தொடர் மூட்டு வலியினால் மூட்டு ஒழுங்கின்மை அல்லது தசைநார் பிரச்சனை யாகவும் இருக்ககூடிய வாய்ப்பு அதிகம். கால்கள் நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது அதனால்,கால் வழியை அலட்சியம் செய்யாதீர்கள்.
முதுகு வலி
வயது காரணமாகவும்,ஒழுகின்மையான உட்காரும் நிலைகளாலும், அல்லது உறங்கும் நிலைகளாலும் கொழுப்பு அடுக்கு சேருவதாலும் மேலும் பல காரணங்களாலும் முதுகு வலி ஏற்படும். ஆனால் இவை அடிக்கடி ஏற்பட்டால் ஸ்பாண்டலிசிஸ் மற்றும் முதுகெலும்பு ஒழுங்கின்மை போன்றவை ஏற்படலாம். முதுகு வலி மிகவும் வலியுள்ளதாக இருக்கும். மேலும் அது பக்கவாதப் படுத்தி நம்மை படுத்தபடுக்கையாக்கி விடும்.
மற்ற வலிகள்
நாம் அலட்சியம் செய்யாக்கூடாத சில முக்கிய உடம்பு வலிகள் இருக்கின்றன. மற்ற வலிகளான கழுத்து வலி, பல் வலி, கண் வலி, எலும்பு மற்றும் தசை வலி போன்றவைகளையும் அலட்சியம் செய்யக்கூடாது. வலி அதிகரிக்கும் போது கவனம் கொண்டு டாக்டரை அணுக வேண்டும். ஊட்டச்சத்துடன் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து, எதிர்காலத்தில் இந்த வலிகளில் இருந்து விடுபடுங்கள்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக