முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தொடங்கி ஏகப்பட்ட இந்திய பிரபலங்களை கிள்ளு கீரைபோல அவமதித்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவில் தூதரக பணியாளர் தேவ்யானி விவகாரம், இந்தியாவுடனான உறவில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு உரைக்கும் வகையில் பாதுகாப்பு குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
இந்திய பிரபலங்களை இப்படியெல்லாம் அமெரிக்கா அவமதிப்பது ஒன்றும் புதியதும் அல்ல. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமையே அவமானப்படுத்தியது அல்லவா அமெரிக்கா
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை அமெரிக்க விமான நிலையத்தில் ஷூவை கழற்றச் சொல்லி சோதனையிட்டு அமெரிக்கா அவமானப்படுத்தியது, இது நாட்டில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸையும் அக்குவேறாக ஆணிவேறாக சோதனை நடத்தி அவமானப்படுத்தியது அமெரிக்கா.
இதேபோல் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ஷாருக்கானும் அமெரிக்காவின் அதிதீவிர விசாரணை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்திய தூதர் மீரா சங்கரும் கூட அமெரிக்க விமான நிலையத்தில் தோளில் தட்டி உட்கார வைக்கப்பட்டார்.
2010ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சர் பிரபுல் படேலும் இத்தகைய அவமானகரமான சோதனைக்குள்ளானவரே.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் ஹர்தீப் புரியின் டர்பனை கழற்றச் சொல்லி அவரை தடுத்தும் வைத்து அவமதித்தனர் அமெரிக்கர்கள்.
2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய கீர்த்திகா பிஸ்வாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.
இந்தப் பட்டியலில்தான் அமெரிக்க தூதரக பணியாளர் தேவ்யானி கைது செய்யப்பட்டு கைவிலங்கு போட்டு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக