வெள்ளி, 20 டிசம்பர், 2013

தேவ்யானி வழக்கு வாபஸோ, மன்னிப்போ இல்லை: யு.எஸ்.

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவ்யானி மீதான வழக்கை திரும்பப் பெறவும் மாட்டோம் மன்னிப்பும் கோரமாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவ்யானி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்காவில் பதிவு செய்துள்ள விசா முறைகேட்டு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேலும் மிகவும் மோசமான முறையில் அவர் நடத்தப்பட்டதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரிஹார்ஃப் கூறுகையில், தேவ்யானி மீதான வழக்கை மிக திரும்ப பெறும் வாய்ப்பு இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகளை மிக தீவிரமானதாக கருதுகிறோம். இது ஒரு சட்ட அமலாக்க பிரச்சனை, வழக்கை திரும்ப பெற இயலாது.

இவரது வழக்கு தொடர்பாக ஆஜராக இந்தியாவில் இருந்து ஒரு வழக்கறிஞரை அனுப்ப இந்திய அரசு முன் வந்தது, ஆனால் தேவ்யானி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் மன்னிப்பு எதுவும் கோரப்போவதில்லை என்றார்.


Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல