செவ்வாய், 31 டிசம்பர், 2013

உலோக செயற்கை கரத்தை பயன்படுத்தி சமையலில் அசத்தும் சமையல்கலை நிபுணர்

விபத்தொன்றில் தனது இடது கரத்தை இழந்த அமெரிக்க சமையல் கலை நிபுணர் ஒருவர், தனக்கு பொருத்தப்பட்ட உலோக செயற்கை கரத்தைப் பயன்படுத்தி திறமையாக சமையலை மேற்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.



ஒரேகன் மாநிலத்தில் போர்ட்லாண்ட் எனும் இடத்தைச் சேர்ந்த எடுவார்டோ கார்சியா (32வயது) என்ற மேற்படி சமையல் கலை நிபுணர், இரு வருடங்களுக்கு முன் வேட்டையாடும் செயற்பாட்டின் போது இடம்பெற்ற விபத்தில் தனது இடது கரத்தை இழந்தார்.

எனினும் உடலில் ஏற்பட்ட குறைபாடு அவரது சமையல் கலைக்கு ஒரு தடையாக கருதாது அதனை தனக்குச் சாதகமாக அவர் பயன்படுத்திக் கொண்டார்.

அவர் தீயில் கருகுவது, கத்தியால் வெட்டப்படுவது தொடர்பில் எதுவித கவலையுமின்றி தனது இரும்புக் கரத்தால் சமையல் பணிகளை துரிதமாக செய்து வருகிறார்.

எடுவார்டோ கார்சியா வேட்டைக்கு சென்ற போது காட்டில் மின்சாரத்தால் தாக்குண்டு உயிரிழந்திருந்த கரடியொன்றை தவறுதலாக தொட்ட போது மின்சாரத்தால் தாக்குண்டார்.

இதனையடுத்து 48 நாட்கள் மருத்துவமனை அவசர கிசிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற அவருக்கு அவரது இடது கரத்தின் 10 அங்குல அளவான பகுதி வெட்டி அகற்றப்பட்டது.

இந் நிலையில் தனக்கு பொருத்தப்பட்ட செயற்கை உலோக கரத்தின் உதவியுடன் அவர் சமையல் கலையை திறமையாக மேற்கொள்ள சுயமாக கற்றுக்கொண்டார்.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல