செவ்வாய், 31 டிசம்பர், 2013

அறிமுகமில்லாத ஆணிடம் பேச்சை தொடங்குவதற்கான அருமையான வழிகள்!

அறிமுகமாகாத சில ஆண்கள் உங்களை மிகவும் கவர்ந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்களிடம் பேச வேண்டும் என்று பல முறை நீங்கள் யோசித்திருக்கலாம். ஆனால் அவரிடம் எப்போது பேச வேண்டும் என்றும் எப்படி பேச்சை தொடங்க வேண்டும் என்பதிலும் உங்களுக்கு திணறல் ஏற்படலாம். பேச்சை எப்படி தொடங்குவது என்று தெரியாததால் சுவாரசியமான பல ஆண்களிடம் உரையாடும் சந்தர்ப்பத்தை நீங்கள் இழந்திருப்பீர்கள். பொதுவாக அறிமுகமாகாத பெண்கள் ஆண்களை முதலில் அணுகினால், ஆண்கள் அதனால் பெரிதும் ஈர்க்கப்படுவார்கள். பெண்களே, அசத்தலான ஒரு ஆணை பார்க்கும் போது, உரையாடலை முதலில் நீங்கள் ஆரம்பிப்பதே புத்திசாலித்தனம். அப்படி செய்வதால் நீங்கள் அந்த ஆணால் கவனிக்கப்படுவீர்கள்.

எந்த ஒரு அறிமுகமில்லாத ஆணிடமும் உரையாடலை தொடங்குவதற்கு பல வழிகள் உள்ளது. ஆரம்பமே அவரை ஈர்க்கும் வகையில் அமைந்து விட்டால் அவர் வெகு விரைவிலேயே உங்களிடம் நெருக்கமாக ஆகி விடுவார். நல்ல அழகுடன் கொஞ்சம் அறிவுடன் விளங்கும் பெண்களை தான் ஆண்கள் அதிகமாக விரும்புகின்றனர். நீங்கள் அறிமுகமில்லாத ஆணிடம் வலிய சென்று பேசினால் அது உங்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை எடுத்துக்காட்டும். ஆனால் உங்கள் உரையாடலை எப்படி தொடங்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். வழக்கமாக எல்லோரும் அரைக்கும் அதே மாவை நீங்களும் அரைக்காதீர்கள். அறிமுகமில்லாத ஆணிடம் நல்ல முறையில் பேச்சை தொடங்குவதற்கு பல வழிகள் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

அறிமுகமில்லாத ஆணிடம் ஒரு பெண் எப்படி பேச்சை தொடங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்காக நாங்கள் சில உதாரணங்களை தொகுத்துள்ளோம். இந்த டேடிங் டிப்ஸ்களை பின்பற்றினால் அந்த ஆணின் கவனத்தை ஈர்க்க கண்டிப்பாக இவைகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

பிரச்சனையில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் தான் ஒரு ஹீரோவாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு ஆணுடைய விருப்பமாக இருக்கும். அறிமுகமில்லாத ஆணிடம் உங்கள் உரையாடலை தொடங்க அவரிடம் உங்கள் பிரச்சனையை சொல்லி பேச்சை ஆரம்பியுங்கள். உங்கள் பைகளை தூக்குதல், ஒரு இடத்துக்கு வழி கூறுதல், பழுதான உங்கள் வண்டியை சரி செய்ய உதவுதல் போன்ற பல வகையான உதவிகள் இதற்கு உதாரணம். ஆனால் அவரிடம் பேச்சை வளர்ப்பதற்காகவே அவரின் உதவியை நாடுகிறீர்கள் என்பது அவருக்கு தெரியும் படி நடந்து கொள்ளாதீர்கள். இது மிகவும் முக்கியமான டேடிங் டிப்ஸாகும்.

நீங்கள் மது அருந்தகத்தில் இருக்கும் போது அறிமுகமில்லாத ஆணுடன் பேச விரும்பினால் மார்டினி எனப்படும் ஒரு வகை காக்டெயில் பானத்தை வாங்கி அவருக்கு அனுப்புங்கள். சொல்லப் போனால் இது தான் என்றில்லாமல் எந்த ஒரு நல்ல பானத்தையும் அவருக்கு கொடுக்கலாம். இந்த கவனிப்பை பயன்படுத்தியும் அவரிடம் நீங்கள் பேச்சை தொடங்கலாம். முக்கியமாக, பெண்களுக்கு ஆண்களுடன் பேச்சை தொடங்க இது ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. ஆனால் நீங்கள் பானம் அனுப்பும் நபர் தனியாக வந்துள்ளாரா அல்லது குடும்பத்துடன் வந்துள்ளாரா என்பதில் கவனம் தேவை. உங்களால் ஒரு குடும்பத்துக்குள் பிரச்சனை வந்து விட கூடாது அல்லவா?

நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் அல்லது உங்களை சுற்றியுள்ளவர்களில், உங்களுக்கு அறிமுகமில்லாத ஆணிடம் பேச்சை தொடங்க விரும்பினால் எந்த ஒரு குறிப்பின்றி ஏதாவது சொல்லி பேச்சை தொடங்குங்கள். பேருந்தில் உங்கள் அருகில் அவர் இருந்தால் நாளுக்கு நாள் அதிகமாகும் போக்குவரத்து நெரிசலை பற்றிய பேச்சை தொடங்கலாம். இப்படி ஆரம்பிக்கும் போது உங்கள் பேச்சு இயல்பாகவும் எதேட்சையாகவும் இருக்கும். இப்படி ஆரம்பிக்கும் பேச்சு கூட ஒரு சிறந்த வழியாக பரிந்துரைக்கப்படுகிறது.

அறிமுகமில்லாத ஆண்களிடம் உரையாட நினைக்கும் பெண்கள் பொதுவான விருப்பங்களை பற்றி பேச தொடங்கலாம். அவர் அணிந்திருக்கும் ஆடையின் ப்ராண்ட், அவர் பயன்படுத்தியுள்ள வாசனை திரவியம் அல்லது அவர் கையில் வைத்திருக்கும் புத்தகம் போன்றவைகளில் இருந்து உங்கள் பேச்சை ஆரம்பிக்கலாம். உங்கள் இருவருக்கும் இடையே அமைந்துள்ள பொதுவான விஷயங்கள் பலவற்றை நீங்கள் கவனிக்கலாம். அவைகளை பயன்படுத்தி உங்கள் உரையாடலை தொடங்குங்கள்.

இப்போதுள்ள பல ஆண்கள் காட்ஜெட்ஸ் என்றால் பைத்தியமாக இருக்கிறார்கள். அதனால் அறிமுகமில்லாத ஆணிடம் பேச்சை தொடங்க காட்ஜெட்ஸை மையமாக வைத்து உரையாடலை தொடங்குங்கள். ஆனால் அவர் முன், உங்களை முட்டாள் போல் காட்டும் சில கேள்விகளை கேட்டு விடாதீர்கள். உங்களுக்கு நன்றாக விவரம் தெரிந்த காட்ஜெட்ஸ் பற்றி மட்டுமே பேசுங்கள்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல