செவ்வாய், 31 டிசம்பர், 2013

சூரியகுமாரனின் மகன் கடத்தப்பட்டரா தலைமறைவானாரா மர்மங்கள் தொடர்கின்றன

காணாமல் போனதாக கூறி பொலிஸாரை தவறாக வழி நடத்திய சூரியகுமாரன் தமிழமுதன் என்ற இளைஞர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பருத்தித்துறை இம்பிருட்டியை சேர்ந்தவரும் வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளருமான கந்தவனம் சூரியகுமாரனின் மகன் 22 வயதான தமிழழமுதன் கடந்த 26 ஆம் திகதி இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இளைஞர் முல்லைத்தீவு பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது தாம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி பஸ் ஒன்றில் ஏறி நண்பனின் வீட்டுக்கு சென்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.
ஆனால் இது புலனாய்வு பிரிவினரின் நாடகம் என்றும் மறு தரப்பு கூறுகின்றது. இந்த இளைஞரை கடத்தி சென்று விட்டு பின்னர் அவர் ஒஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரும் நோக்கில் இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காரணம் காட்ட தனது தந்தை ஊடாக காணாமல் போனதாக பொய்யான முறைப்பாட்டை செய்தாக குற்றம் சாட்டி கைது செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தனது மகன் இனந்தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாகவும் புதன்கிழமை இரவு வழமைபோல சகோதரியின் வீட்டில் படுப்பதற்காக தனது மகன் சென்றதாகவும், மறுநாள் வியாழக்கிழமை காலை 6.45 மணியளவில் தனது கைத்தொலைபேசிக்குத் தனது மகன் அனுப்பியிருந்த குறுந்தகவல் ஒன்றில் தான் நான்கு பேர் கொண்ட குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் அனுப்பியிருந்ததாகவும் சூரியகுமாரன் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

கடத்திச் சென்ற நான்குபேரில் ஒருவர் தமிழ் பேசியதாகவும், அவரே தன்னுடைய கைத்தொலைபேசியைக் கொடுத்து வீட்டிற்குக் குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்துமாறு கூறியிருந்ததாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அந்த பொய் முறைப்பாட்டில் விவரித்தார். இந்த குறுந்தகவலை ஆதாரமாகக் காட்டி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சூரியகுமாரன் முறைப்பாடு செய்திருந்தார்.

தனது மகன் கடத்தப்படுவதற்கு முதல் நாள், புலனாய்வாளர்கள் தமது ஊரில் வந்து தனது மகனைப் பெயர் குறிப்பிட்டு தெரிவித்து அவர் எங்கு இருக்கின்றார், என்ன செய்கின்றார் என்பது பற்றி விசாரித்துச் சென்றதாக ஊர்வாசிகள் தெரிவித்திருப்பதனால், இந்தக் கடத்தலுக்கும் புலனாய்வாளர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுந்திருப்பதாகவும் சூரியகுமாரன் தெரிவித்திருந்தார்.
ஆனால் இவை அனைத்தும் பொய் என்றும் முல்லைத்தீவு சென்று அங்கிருந்து படகு மூலம் அவர் ஒஸ்ரேலியாவிற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஓஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி அகதி அந்தஸ்த்தை பெறுவதற்கு ஆதாரமான இக்கடத்தல் விடயத்தை பயன்படுத்துவதற்கும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதில் யார் கூறுவது உண்மை? விரைவில் தெரியவரும்.


தினக்கதிர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல