புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் புகைப்பிடிக்கும் போது புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையால் பாதிக்கப்படுவதை போலசூவ நேரடியாகவும் புகைப்பதால் பாதிப்புக்குள்ளாகிறோம்.
கர்ப்பிணி பெண்கள் தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் நபர்களுடன் இருக்கும் போது, அது அவர்கள் வயிற்றில் தங்கியிருக்கும் சிசுவின் இயல்பான வளர்ச்சியை பாதிக்கும். கர்ப்பிணி பெண்கள் எந்தளவுக்கு புகைப்பிடிக்கும் நபர்களுடன் இருக்கிறார்களோ அந்தளவு அவர்கள் வயிற்றில் உள்ள சிசு பிறக்கும் போது பாதிக்கப்படும்.
இப்படி தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் நபர்களுடன் ஒரு கர்ப்பிணி இருப்பதால் பிறக்க போகும் குழந்தைக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் புகைப்பிடிப்பவர்களின் அருகில் அடிக்கடி இருக்க நேரிட்டால் அது சிசுவிற்கு மரபியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். கை, கால்கள், விரைகளில் அல்லது மூளையில் ஊனம் போன்ற பல பிரச்சனைகளுக்கு பாஸிவ் ஸ்மோகிங்கால் சிசுக்கள் பாதிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களின் அருகில் கர்ப்பிணி பெண்கள் இருக்க நேரிடும் போது கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
கர்ப்ப காலத்தில் புகைப்பிடிப்பவர்களின் அருகில் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் நூற்றில் 23 சதவீத பெண்களுக்கு அவர்கள் வயிற்றிலேயே சிசு மடிந்து விடுகிறது.
தங்கள் தாயின் வாயிலாக நச்சுத்தன்மை கலந்த புகையை சிசு உள்வாங்கும் போது அதன் இயல்பு வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படுகிறது. புகைப்பிடிப்பவர்களின் அருகில் ஒரு கர்ப்பிணி பெண் இருக்க நேரிட்டால் அவர்களின் தொப்புள் கொடியின் செயல்பாடு குறைந்து விடும்.
நிகோடின் என்ற நச்சு தொப்புள் கொடி வழியாக சென்று சிசுவிற்கு கிடைக்க வேண்டிய இரத்த ஓட்டத்தை குறைத்து விடும். இது சிசுவின் இதயக்குழாய் அமைப்பு, இரையக குடலிய அமைப்பு மற்றும் மத்திய நரம்பியல் அமைப்பு போன்றவற்றை பாதித்து விடும்.
புகைப்பதால் ஒரு கர்ப்பிணி பெண் பாதிக்கப்படும் போது அவர்கள் வயிற்றில் உள்ள சிசுவிற்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். பிறந்த பின் அவர்கள் மூச்சு விடுவதில் சிரமப்படுவார்கள்.
ஆஸ்மா போன்ற பிரச்சினைகளை எல்லாம் அவர்கள் எதிர் கொள்ள நேரிடும்.
கர்ப்ப காலத்தில் புகைப்பதால் பாதிப்படைந்திருந்தால் ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்றாக விளங்குகிறது குறைப்பிரசவம்.
அதனால் குழந்தையின் இயல்பு வளர்ச்சி பாதித்து வருங்காலத்தில் பல மருத்துவ சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக