விபத்தில் துண்டிக்கப்பட்ட இளைஞனின் கையை சீன மருத்துவர்கள் கணுக்காலில் ஒட்டவைத்து வளர்த்து பின்னர் அதை மீண்டும் பொருத்தி வெற்றி யடைந்துள்ளனர். ஜியாவோ வெய் என்ற இளைஞனின் வலது கை கடந்த நவம்பரில் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
இவ்வாறு துண்டான கையை காப்பாற்றுவது கடினம் என்று ஷாங்டேவில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரைப்படி மண்டல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜியாவோ வெய்யின் மணிக்கட்டை அப்போதைய சூழலில் கையில் பொருத்த முடியாது என உணர்ந்த மருத்துவர்கள் அதனை கணுக்காலில் ஒட்டி இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உயிரூட்டி உள்ளனர்.
சுமார் ஒரு மாதத்துக்குப் பின் துண்டான கையின் அனைத்து செல்களும் உயிர்பெற்றதைத் தொடர்ந்து காலில் வளர்ந்திருந்த மணிக்கட்டை மீண்டும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றி வலது கையில் பொருத்தப்பட்டுள்ளது. பொருத்தப்பட்டிருக்கும் அவரது கை முழு இயக்கத்தையும் பெற மேலும் பல சிகிச்சைகள் வழங்க வேண்டியிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செயற்பாடு அரிதான செயல்முறை என விபரித்திருக்கும் இங்கிலாந்து சத்திரசிகிச்சை நிபுணர் கைரியன் ஹிலிதாம் இதனை நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக