வியாழன், 19 டிசம்பர், 2013

தேவயானி விவகாரம்: வருத்தம் தெரிவித்தால் போதாது அமெரிக்கா மன்னிப்பு கேட்கணும்- கமல்நாத்

இந்திய துணை தூதரை கைது செய்து அவமானப்படுத்தியதற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்தால் போதாது மாறாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே விசா மோசடி வழக்கில் நியூயார்க் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரின் ஆடைகளை களைந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அவமானம் தாங்காமல் அவர் கதறியும் போலீசார் விடவில்லை.

இந்த சம்பவத்தை கண்டித்து மத்திய அரசு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு வழங்கப்பட்ட ஏர்போர்ட் பாஸை வாபஸ் பெற்றது. மேலும் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பு இருந்த தடுப்புகளை இந்தியா அகற்றியது.

இதையடுத்து தேவயானி கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்தது.

இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் கமல்நாத் கூறுகையில்,

வருத்தம் தெரிவிப்பது போதாது மாறாக அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டு தாங்கள் செய்தது தவறு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது தான் இந்தியா திருப்தி அடையும் என்றார்.

எனது மகள் கைதுக்கு அமெரிக்கர்களின் இனவெறியே காரணம்.... தேவ்யானி தந்தை புகார்

எனது மகள் கைதில் பெரும் சதி அடங்கியுள்ளது. இனவெறியுடன் நடந்து கொண்டுள்ளனர் அமெரிக்கர்கள் என்று அமெரிக்காவில் கைது செய்யப்ப்ட்ட இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்கரடேவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

தேவ்யானியின் தந்தை உத்தம் கோப்கரடே, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவைச் சந்தித்து தனது மகள் விவகாரம் குறித்துப் பேசினார்.

பின்னர் அவர் கூறுகையில், எனது மகளை இனவெறியுடன் நடத்தியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். இனவெறியுடன் நடந்துள்ள செயல் இது. இதற்காக அமெரிக்க காவல்துறையும், அரசும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

எனது மகளின் பெயரைக் கெடுக்கும் வகையிலும், இந்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமெரிக்கர்கள் நடந்து கொண்டுள்ளனர். இது மிகப் பெரிய சதிச் செயல்.

இனவெறிச் செயல் இது என்பதில் சந்தேகமே இல்லை. மிக மிகத் தெளிவாக இது அனைவருக்கும் புரியும். இந்தியர்களுக்கு எதிரான இனவெறி நடவடிக்கை இது.

இந்திய அரசு இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மிக மிக கடுமையாக இதை அணுக வேண்டும் என்றார் அவர் கோபமாக




Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல