திங்கள், 28 ஜூலை, 2014

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும், ஆனா வெளிப்படையாக சொல்லாத 8 விஷயங்கள்!

தன் காதலியிடம் அல்லது மனைவியிடம் பல விஷயங்களை ஆண்கள் விரும்புவார்கள் அல்லது எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவற்றை பெண்களிடம் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.

ஏன்? பயமாக இருக்குமோ? தயக்கமாக இருக்குமோ? சங்கடமாக இருக்குமோ? அல்லது அலட்சியமாக இருக்குமோ? பெண்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை சொல்லத் தேவையில்லை என்று தான் ஆண்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள்.



இவற்றையெல்லாம் சொல்லாமலேயே பெண்கள் தெரிந்து கொள்வார்கள் என்பதில் அவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. பெரும்பாலும் இது உண்மை தான். தன்னுடைய ஆண் துணையின் மனமறிந்து அல்லது குறிப்பறிந்து நடந்து கொள்வதில் பெண்கள் கில்லாடிகள் தான் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி, பெண்களிடம் ஆண்கள் விரும்பும்/எதிர்பார்க்கும், ஆனால் அவர்களிடம் வெளிப்படையாக சொல்லாத 8 விஷயங்கள் பற்றிப் பார்ப்போமா...

மரியாதை
இவ்வுலகில் பெரும்பாலான ஆண்கள், வாழ்க்கையில் தங்களுக்கு பெண்கள் மரியாதை தர வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் சொல்ல மாட்டார்கள். எப்போதாவது, பிரச்சனைகள் வரும் போது தான் அது தெரிய வரும். அப்போது, "ஆம்பிளைன்னு கொஞ்சமாவது மரியாதை கொடுக்குறியா?" என்று ஆண்கள் கத்துவார்கள். ஆனாலும் ஆண்கள் அவ்வாறு சொல்லாமலேயே அவர்களுக்கு பெரும்பாலான பெண்கள் மரியாதை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆண்களின் எண்ணங்களுக்கும். உணர்வுகளுக்கும் மரியாதை அளித்துக் கொண்டு தான் உள்ளனர்.

புகழ்ச்சி
புகழ்ச்சிக்கு மயங்காத மனிதர்களை இந்த உலகில் பார்ப்பதே அரிது. இதை பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்ப்பதும் சகஜம் தான். தங்களைப் பற்றிப் பெண்கள் எப்போதும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பதால், அவர்களிடமிருந்து இந்தப் புகழ்ச்சியை ஆண்கள் எதிர்பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். சிறிதாகப் புகழ்ந்தால் கூட அவர்களுக்கு உச்சி குளிர்ந்து விடும்.

தோழமை
தன்னுடைய பெண் துணை தன்னிடம் மிகவும் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பெரும்பாலான ஆண்கள் எதிர்பார்ப்பார்கள். எத்தனை நண்பர்கள் உடன் இருந்தாலும், தன் பெண் துணையும் எப்போதும் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்றும் ஆண்கள் நினைப்பதுண்டு.

இனிமையான பேச்சு
பெண்கள் தங்களிடம் இனிமையாகப் பேச வேண்டும் என்று தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புவார்கள். பெண்களும் பெரும்பாலும் ஆண்களிடம் அவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். சில பெண்கள், கண்டிப்பு என்ற பேரில் குரலை உயர்த்துவதுண்டு. அது ஆண்களுக்குப் பிடிப்பதில்லை.

உற்சாகமூட்டுதல்
பெண்கள் தங்களை உற்சாகமூட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தான் எந்த ஆணும் நினைப்பான். அதற்காகத் தான் 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்' என்று பலரும் அடிக்கடி கூறுவதைக் கவனித்திருக்கிறோம். பெண்கள் சிறிது உற்சாகப்படுத்தினாலும் கூட போதும், எப்பேற்பட்ட மலையும் ஆண்களுக்குக் கடுகு தான்! அந்த அளவுக்கு பெண்கள் மேல் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை!

பாராட்டுதல்
தங்களைப் பெண்கள் எப்போதும் பாராட்ட வேண்டும் என்றும் எல்லா ஆண்களும் நினைப்பதுண்டு. ஒரு பெண், தன்னுடைய ஆண் துணையின் ஒரு சிறிய செயலைக் கூட பாராட்டிப் பேசினால் போதும், ஆண்கள் விழுந்து விடுவார்கள். அடுத்த பாராட்டுக்குத் தேவையான அடுத்த செயலை ஆரம்பித்து விடுவார்கள்.

சுதந்திரம்
பொதுவாகவே ஆண்கள் கொஞ்சம் சுதந்திரமாக இருப்பதை விரும்புவார்கள். அதிலும் இந்தக் காலப் பெண்களிடம் இதைக் கட்டாயம் எதிர்பார்ப்பார்கள். ஆனால் எப்போதும் உங்களை விட்டுத் தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். சில டென்சன்களிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கும் போது மட்டும் தான். பெண்கள் விட்டுக் கொடுத்தால், சிறிது நேரத்திலேயே ஆண்கள் டென்சனை விட்டு வெளியேறி விடுவார்கள்.

ஆதரவு
ஆதரவு என்பது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்று தான். ஆனாலும் தன் பெண் துணையின் ஆதரவு எப்போதும் ஒரு ஆணுக்குத் தேவைப்படும். அந்த ஆணின் எல்லா முயற்சிகளுக்கும் பெண் ஆதரவு கொடுத்தால், அவர்களுடைய வாழ்க்கையே சொர்க்கமாக மாறும். அவளுடைய ஆதரவு எப்போதும் இருக்கும் என்ற அவனுடைய நம்பிக்கையே அவனுக்கு முக்கால்வாசி வெற்றியைத் தேடித் தரும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல