திங்கள், 28 ஜூலை, 2014

அவுட்லுக் அஞ்சல் தளம் வழியாக ஜிமெயில் அஞ்சல்களையும் பெற்றுப் படிக்க

முதலில், ஜிமெயில் அக்கவுண்ட் பக்கம் சென்று, உங்கள் அக்கவுண்ட்டிற்கான இன்பாக்ஸ் பெறவும். இதில் வலது புறம் மேலாக, உங்கள் பெயருக்குக் கீழாக உள்ள Settings ஐகானில் கிளிக் செய்திடவும்.



இங்கு Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து, Forwarding and POP/IMAP என்பதில் கிளிக் செய்திடவும்.

இனி கிடைக்கும் ஆப்ஷன்களில், Enable POP for all mail அல்லது Enable POP for mail that arrives from now என்பதைக் கிளிக் செய்திடவும்.

பின்னர் அதே பக்கத்தின் கீழாகத் தோன்றும் Save Changes என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

இப்போது உங்கள் மின் அஞ்சல்களுக்கு, POP வழியை அமைத்துவிட்டீர்கள்.

அடுத்து அவுட்லுக் இமெயில் புரோகிராமினை செட் செய்திட வேண்டும்.
அதற்கான வழிகள்: அவுட் லுக் திறந்து, கிடைக்கும் மெனுவில் Tools என்பதில் கிளிக் செய்து Account Settings பிரிவு செல்லவும்.

புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். அடுத்து E-mail டேப் சென்று, New என்பதில் கிளிக் செய்திடவும்.

அடுத்து கிடைக்கும் விண்டோவில், Microsoft Exchange, POP3, IMAP அல்லது HTTP ரேடியோ பட்டன் எனத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து Next என்பதில் கிளிக் செய்திடவும்.

அவ்வளவுதான். இனி உங்கள் ஜிமெயில் மெயில்களை, அவுட்லுக் அக்கவுண்ட்டில் பெற்றுப் படிக்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல