செவ்வாய், 29 ஜூலை, 2014

டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த விளக்கம்.

டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பதன் சுருக்கமே டாஸ் ஆகும் (DOS - Disk Operating System).இது பெரும்பாலான நேரங்களில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே (MS-DOS or Microsoft Disk Operating System) குறிக்கிறது.


முதன் முதலில், மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கிய ஐ.பி.எம். நிறுவனக் கம்ப்யூட்டர்களை ஒத்த கம்ப்யூட்டர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்கியது. பல ஆண்டுகளுக்கு முன்னால், இது ஒன்றுதான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் இயங்கியது.

இது முற்றிலும் டெக்ஸ்ட் மற்றும் கட்டளைகள் மட்டுமே அடங்கிய சிஸ்டமாகும். கம்ப்யூட்டர் பயன்படுத்திய சாதாரணமானவர்களுக்கு இது அவ்வளவு எளிதானதாக இல்லை. இதனை இயக்கியவுடன் இது ஒரு கட்டளையை எதிர்பார்க்கும். பின் நாளில், இதன் மீது அமர்ந்து இயங்கும் சிஸ்டமாக விண்டோஸ் உருவெடுத்தது. இப்போது இயங்கும் அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது.

சில தனி சிறப்பு செயல்பாடுகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. டாஸ் சிஸ்டம், நம் ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஒரு காலத்தில் ஹார்ட் டிஸ்க் இல்லாமல், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ப்ளாப்பி டிஸ்க்கில் வைத்து இயக்கி, ராம் மெமரியில் ஏற்றிவிட்டு, லோட்டஸ் மற்றும் பேசிக், வேர்ட் ஸ்டார் போன்ற புரோகிராம்களை அடுத்தடுத்த பிளாப்பி டிஸ்க்கில் வைத்து செலுத்தி பயன்படுத்தி வந்தனர்.

விண்டோஸ் 7 சிஸ்ட்த்தில், Start, All Programs, Accessories எனச் சென்று Command Prompt தேர்ந்தெடுத்தால், டாஸ் சிஸ்டத்தின் கட்டளைப் புள்ளி கிடைக்கும்.

பின்னர் டாஸ் சிஸ்டம் கட்டளைகளைக் கொடுக்கலாம். விண்டோஸ் 8 மற்றும் 8.1ல், command prompt எனத் தேடல் கட்ட த்தில் கொடுத்தால், டாஸ் இயக்கம் கிடைக்கும்.

இதன் கட்டளைகள் எளிதாக நினைவில் கொள்ளும் வகையில் உள்ளன. டிஸ்க் கிராஷ் ஆனால், பார்மட் செய்யப்பட வேண்டும் என்றால், நாம் டாஸ் இயக்க கட்டளைகள் மூலம் எளிதாக வேலைகளை மேற்கொள்ளலாம்.

உங்கள் ஆர்வத்திற்காக, சில டாஸ் கட்டளைகளை இங்கு தருகிறேன்.

CD - அப்போதைய டைரக்டரியை மாற்ற
COPY - பைல்களை காப்பி செய்திட
DEL - பைல்களை அழித்திட
DIR - டைரக்டரியில் உள்ள அனைத்தையும் பட்டியலிடும்
HELP - எம்.எஸ். டாஸ் கட்டளைகள் குறித்து விளக்கம் தரும்
MKDIR - புதிய டைரக்டரி உருவாக்க
RD - டைரக்டரியை நீக்க
REN - பைலுக்கு புதிய பெயர் அளிக்க.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல