செவ்வாய், 29 ஜூலை, 2014

வேர்ட்: குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த டெக்ஸ்ட் தேட

வேர்ட் புரோகிராமில் சொல் தேடுவதில் மிகவும் சக்தி வாய்ந்த வழிகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல் மட்டுமின்றி, குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த சொற்களை மட்டும் தேடி அறியலாம். அதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.



1. நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், Ctrl+F கீகளை அழுத்தவும். வேர்ட் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பனில் ஹோம் டேப் காட்டப்பட வேண்டும். இங்கு Editing group ல் Find tool அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். பின் Advanced Find என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Find and Replace என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும். அதில் Find என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

2. More என்ற பட்டன் இருந்தால், அதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Find and Replace என்ற டயலாக் பாக்ஸின் விரிவான தோற்றத்தினைக் காட்டும். Find What கட்டத்தில் உள்ள எதனையும் நீக்கிவிடவும். No Formatting பட்டன் இருந்தால் அதில் கிளிக் செய்திடவும்.

3. அடுத்து Format பட்டனில் கிளிக் செய்து, பின்னர், Font என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Find Font என்ற டயலாக் பாக்ஸினைக் காட்டும். இப்போது, Effects என்ற பிரிவில் Superscript, Subscript போன்றவை ஷேட் செய்யப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். அதாவது, இந்த பண்புகள் எல்லாம், தேடலில் ஒரு அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பொருள்.

4. அடுத்து நீங்கள் தேடும் டெக்ஸ்ட்டில் இருக்க வேண்டிய பண்புகள் (character attributes) எவை என்று தேர்ந்தெடுக்கவும். இந்த பண்புகளின் பெயர்கள் அடுத்து இருக்க வேண்டிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்க மறக்க வேண்டாம்.

5. தொடர்ந்து ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்திடவும்.

வேர்ட்: ஹைபன்

வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை.

ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது.

எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.

இதற்கு அந்த ஹைபன் அல்லது டேஷ் அமைக்கையில் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளை ஒரு சேர அழுத்திக் கொண்டு அமைக்க வேண்டும்.
பிரிக்க முடியாத ஹைபன்களை வேறு ஒரு வகையிலும் அமைக்கலாம்.

1. இன்ஸெர்ட் மெனு சென்று சிம்பல் என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்ஸெர்ட் சிம்பல் டயலாக் பாக்ஸைக் கொடுக்கும்.

2. இந்த சிறிய விண்டோவில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் டேப்பில் கிளிக் செய்திடவும்.

3. இதன் பின்னர் Non breaking ஹைபன் கேரக்டரை ஹைலைட் செய்திடவும்.

4. பின்னர் இன்ஸெர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.

5. அடுத்து கேன்சல் என்பதில் கிளிக் செய்வதன் மூலம் டயலாக் பாக்ஸை மூடவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல