செவ்வாய், 29 ஜூலை, 2014

எக்ஸெல்: ஒர்க் ஷீட்களில் ஹெடர் மற்றும் புட்டர்

எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்களை அமைத்த பின்னர், நாம் மேற்கொள்ளும் நகாசு வேலைகளில் ஒன்று, அதன் ஹெடர்களையும் புட்டர்களையும் (headers and footers) அமைப்பது.

ஒன்று அல்லது இரண்டு ஒர்க் ஷீட்களை ஒரு ஒர்க்புக்கில் அமைத்திருந்தால், இது மிகவும் எளிமையான வேலையாக இருக்கும்.


அதுவே, பல ஒர்க் ஷீட்கள் அடங்கிய ஒர்க்புக்காக அமைந்து, அவை அனைத்திலும் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பதாக இருந்தால், அந்த வேலை சற்று நேரம் எடுக்கும் செயலாக அமையும். இதனை எப்படிச் சந்திப்பது எனப் பார்க்கலாம். இது ஒன்றும் கடினமான வேலை அல்ல. அனைத்து ஒர்க் ஷீட்களையும் ஒரு குழுவாக எண்ணி செயல்பட்டால், இது மிகவும் எளிதாக அமையும்.

1. முதலில் எந்த ஒர்க் ஷீட்களில் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பது என்பதனை முடிவு செய்து கொள்ளவும்.

2. அந்த வரிசையில் உள்ள முதல் ஒர்க் ஷீட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. பின்னர், கடைசி ஒர்க் ஷீட்டினைத் தேர்ந்தெடுக்கும் வரை ஷிப்ட் கீயை அழுத்திப் பிடிக்கவும். இப்போது பல ஒர்க் ஷீட்கள் தேர்ந்தெடுக்கப்படும். இதனை உணர்த்திக் காட்ட, எக்ஸெல் புரோகிராம், Group என்ற சொல்லை தன் டைட்டில் பாரில் காட்டும்.

4. இனி, நீங்கள் விரும்பியபடி, ஹெடர் அல்லது புட்டரை அமைக்கவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த ஒர்க் ஷீட்கள் அனைத்தும் அதே போல் அமைக்கப்படுவதனைக் காணலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல