சனி, 26 ஜூலை, 2014

அவுஸ்­தி­ரே­லியாவின் தற்காலிக விசா நிபந்­த­னை­களும் திணறும் தமிழ் அக­தி­களும்

அவுஸ்­தி­ரே­லி­யாவில் புக­லிடம் கோரு­வோ­ருக்கு மூன்று நிபந்­த­னை­க­ளுடன் தற்­கா­லி­க­மான விசா வழங்­கப்­ப­ட்டுள்ள­தானது புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உயி­ரி­ருந்தும் நட­மாட முடி­யாத நிலைமையை ஒத்ததாக உள்ளது என்பதே உண்மை நிலையாகும்.



புக­லிட கோரிக்­கை­யா­ளர்கள் தொழில் செய்ய முடி­யாது, குடும்­பத்தை அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எடுக்க முடி­யாது மற்றும் பணம் அனுப்­ப­மு­டி­யாது ஆகிய மூன்று நிபந்­த­னை­க­ளு­ட­னேயே தற்­கா­லிக விசா வழங்­கப்­படு­கின்­றது.

2012.08.13ஆம் திக­திக்கு பின்னர் அவுஸ்­தி­ரே­லி­யா­விற்குள் நுழைந்­த­வர்­க­ளுக்கே இவ்­வா­றான நிபந்­த­னை­க­ளுடன் தற்­கா­லிக விசா வழங்­கப்­ப­டு­கின்­றது என்றும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இலங்­கையில், தமிழ் மக்கள் சொந்த நாட்­டி­லேயே இடம்­பெ­யர்ந்து வாழ்­வ­தற்­கான உரிமை மறுக்­கப்­பட்டு, தனது தாய்­நாட்டை விட்டு அக­தி­க­ளாக இடம்­பெ­யர்ந்து வரு­கின்­றனர். இவற்றில் ஒன்­றுதான் இந்த கடல் வழி­யான அவுஸ்­தி­ரே­லியா பய­ண­மாகும் என்றும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

கடல் மார்க்­க­மாக பய­ணிப்­பது என்­பது ஒரு மனி­தனின் மரணப் பய­ண­மா­கவே அமை­கின்­றது. தமிழ் அக­திகள் தமது உயிரைப் பாது­காக்கும் நோக்­கத்­தி­லேயே இவ்­வா­றான பாது­காப்­பற்ற இந்த கடல் பய­ணத்தை தொடர்­கின்­றனர் என்றும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

ஆனால், தற்­போது அவுஸ்­தி­ரே­லிய குடி­வ­ரவுத் திணைக்­க­ள­மா­னது தனது சட்­டத்தில் பாரிய திருத்­தங்­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இந்த திருத்­தங்­க­ளுடன் வழங்­கப்­படும் தற்­கா­லிக விசா­வா­னது தமி­ழர்­க­ளுக்கு உயி­ரி­ருந்தும் நட­மா­ட­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது என்றும் அவர்கள் சுட்­டிக்­காட்­டினர்.

ஆனால், இந்த சட்­டங்கள் தெரிந்தும் ஆட்­க­டத்தல் தர­கர்கள் இலங்­கையில் உள்ள தமிழ் மக்­களின் விகி­தா­சா­ரத்தை குறைக்கும் நோக்­குடன் பாது­காப்­பற்ற கடல் பய­ணத்தை ஏற்­பாடு செய்­கின்­றனர். இவற்றில் பல பட­குகள் நடுக்கடலில் சங்­கமம் ஆகிய சந்­தர்ப்­பங்­களும் உள்­ளன.

எவ்­வ­ளவோ பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யிலும் பல இலட்­சக்­க­ணக்­கான பணத்தை கட­னாகப் பெற்று இன்று ஒரு சந்­தோ­ச­மற்ற சூழ்­நி­லையில் குடும்­பத்தார் நடுத்­தெ­ருவில் நிற்கும் நிலையே ஏற்­பட்­டுள்­ளது.

எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான பாது­காப்­பற்ற கடல் பய­ணத்­தினை எவரும் மேற்­கொள்­ளா­தி­ருப்­பது சிறந்த செய­லாகும் என்­பதே எமது அனு­ப­வத்தின் மூலம் பெற்­றுக்­கொண்ட நல்ல படிப்­பி­னை­யாகும் என்றும் அவர்கள் மேலும் சுட்­டிக்­காட்­டினர்.

ஆட்­க­டத்­தலை முறி­ய­டிப்­ப­தற்­கான முயற்­சி­க­ளுக்கு உதவும் வகையில், அவுஸ்­தி­ரே­லிய மற்றும் இலங்கை ஆட்­க­டத்தல் சம்­பந்­த­மான சட்­டங்­களை ஒருங்­கி­ணைப்­பது பற்­றிய மாநா­டொன்று அண்­மையில் இடம்­பெற்­றது.

இதன்­போது, இலங்­கையின் குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வுச் சட்­டத்தில், ஆட்­க­டத்தல் பற்­றிய திருத்­தங்­களின் நிலைமை, ஆட்­க­டத்­த­லுக்கு எதி­ரான சட்ட அமு­லாக்கல் அனு­ப­வங்­களைப் பகிர்ந்­து­கொள்ளல், ஆட்­க­டத்தல் சட்­டங்­களை மேலும் ஒருங்­கி­ணைப்­ப­தற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவும், இலங்­கையும் இணைந்து பணி­யாற்­றக்­கூ­டிய பகு­தி­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளித்தல் போன்ற விட­யங்கள் குறித்து இரு நாடு­க­ளி­னதும் முக்­கி­யஸ்­தர்கள் கலந்­து­ரை­யா­டினர்.

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கைச்­சாத்­தி­டப்­பட்ட இடம்­பெ­யர்­வோரைக் நாடு கடத்­து­வ­தற்­கெ­தி­ரான ஒத்­து­ழைப்பு பற்­றிய அவுஸ்­தி­ரே­லிய -– இலங்கை புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தின் கீழான சட்ட அமைப்­புக்­களில் உள்ள குறை­பா­டு­களை உப­யோ­கிப்­பதைத் தடுக்கும் பொருட்டு, ஆட்­களைக் கடத்­து­வ­தற்­கெ­தி­ரான சட்­ட­வரை­பு­களை பலப்­ப­டுத்தி ஒருங்­கி­ணைக்­க­வென அவுஸ்­தி­ரே­லி­யாவும் இலங்­கையும் இணைந்து பணி­யாற்றி வரு­கின்ற நிலை­யிலும் ஆட்­க­டத்தல் நடை­மு­றைகள் அதி­க­ரித்து வரு­வ­தாக அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் அண்­மையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது

ஒரு செல்­லத்­தக்க விசா இல்­லாமல் பட­கு­மூ­ல­மாக வந்த மக்­களில் சிலர் அவுஸ்­தி­ரே­லிய சமூகத்தில் வாழலாம் என அவுஸ்­தி­ரே­லிய அரசு முடி­வு­செய்­துள்­ளது.

ஆனால் அவுஸ்­தி­ரே­லிய சமூ­கத்­தில வாழும் இவர்­க­ளு­டைய வழக்­குகள் தொடர்­பாக எந்த நேரமும் 3ஆம் தரப்பு நாடான பப்­புவா நியு­கி­னியா அல்­லது நவுறு போன்றதொரு பிராந்­திய செய­லாக்க நாட்­டிற்கு மாற்­றப்­ப­டலாம்.

சமூ­கத்தில் வாழ்­வ­தற்கு இணைப்­பு­ விசா வழங்­கப்­ப­டு­கின்­றது. இது ஒரு தற்­கா­லிக விசா­வாகும் இந்த இணைப்பு விசா­வா­னது பாது­காப்பு கோரிக்­கையில் ஒரு வித்­தி­யா­சத்­தையும் ஏற்­ப­டுத்­தாது.

இந்த இணைப்பு விசா, தற்­கா­லி­க­மாக குடி­யேற்றத் தடுப்புக் காவ­லுக்கு வெளியே வாழ்­வ­தற்கு மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த இணைப்பு விசா நிபந்தனைகளைச் சரிபார்க்கும் வரை படிப்பதற்கு கூட முடியாது அப்படி படிக்க வேண்டுமானால் சொந்தப் பணத்திலேயே படிக்க வேண்டும். வேலை செய்ய முடியாது. யாரும் சட்டவிரோதமாக வேலை செய்வது கண்டறியப்பட்டால் அவர்களுடைய விசா ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்படும்.

இப்படியான பல நிபந்தனைகளுக்கு மத்தியில் அகதிகளாகச் செல்பவர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் உண்மை நிலை தெரியாமல் இலங்கை தமிழர்களை ஆசைவார்த்தை கூறி ஆட்கடத்தும் தரகர்கள் ஏமாற்றுகின்றனர் . ஆகவே, தமிழர்கள் இனிமேலும் ஏமாறாது இருக்கவேண்டும். இதுதான் இலங்கை யிலிருந்து புகலிடக் கோரிக்கையுடன் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளின் இன்றைய நிலை.

சசிகரன் புண்ணியமூர்த்தி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல