சனி, 26 ஜூலை, 2014

சீரக சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயத் தாள் - 4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
சிக்கன் ஸ்டாக் - 1 கப் (250 மி.லி)
தக்காளி - 1 கப் (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
வெள்ளை வெங்காயம் - 1 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - அலங்கரிக்க தேவையான அளவு
WERBUNG


செய்முறை:

முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் சீரகப் பொடி, மிளகாய் தூள், வெங்காயத் தாள், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி விழுது சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உப்பு மற்றும் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

அடுத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து, சிக்கன் ஓரளவு வேகும் வரை கிளறி விட வேண்டும்.

பின் தக்காளியை சேர்த்து கிளறி, சிக்கன் ஸ்டாக் ஊற்றி பிரட்டி, சிக்கன் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி, மிளகு தூள், கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா தூவி கிளறிவிட்டால், சுவையான சீரக சிக்கன் குழம்பு ரெடி!!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல