இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை வந்திருந்த சுப்பிரமணிய சுவாமி சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதன்போது, இலங்கையில் இன அழிப்பு இடம் பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் கூட அவ்வாறு கூறவில்லை. லண்டனிலும், நோர்வேயிலும், இருக்கும் தமிழ் அடிப்படைவாதிகள் மட்டுமே இலங்கையில் இன அழிப்பு இடம் பெற்றது எனக் கூறுகின்றனர். இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றும் நான் கருதுகின்றேன். பிரித்தானியரால் நாம் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளோம். அதனாலேயே இனம் என்ற விடயத்தை முன்வைத்து செயற்படுகின்றோம். இந்தியாவில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் அனைவருக்கும் ஒரே மரபணுக்கள் காணப்படுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தான் இலங்கையிலும், அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்திருந்தார்.
இதனைவிட இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாக குற்றம் சுமத்தி இலங்கை மீது விரல் நீட்டுபவர்கள் யார் என்பதை பார்க்கவேண்டும். இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டமானது போதுமான அளவிற்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதில் சில ஏற்பாடுகளே மீதமாக உள்ளன. தனிப்பட்ட ரீதியில் நாம் அவ் விடயம் குறித்து விளக்கமளிக்க முடியும். ஆனால் உடனடியாக அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சர்வாதிகாரப் போக்கில் அழுத்தங்களை வழங்க முடியாது என்றும் சுவாமி சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கைக்கும் எமக்குமிடையில் அடிப்படையிலான முரண்பாடுகள் எவையும் இல்லை. ஆனால் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகள் தற்போது வேறு வழியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரிவினைக்கோ அல்லது தனியான ஈழம் அமைப்பதற்கோ ஒருபோதும் எமது நாடு அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சுப்பிரமணிய சுவாமியின் இவ்வாறான கருத்துக்கள் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை விளக்கியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சுப்பிரமணிய சுவாமியின் கருத்துக்கள் அவர் அரசசார்புடையவர் என்பதை எடுத்துக்காட்டுகின்றது என்று கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் விசனம் தெரிவித்திருந்தார். இலங்கையின் விடயங்களை எவ்வாறு புரிந்துவைத்துள்ளார் என்பது சுப்பிரமணிய சுவாமியின் பேச்சில் தெளிவாக தெரிகின்றது. மேடையில் வார்த்தைகளை விடுவதற்கு முன்னர் வடக்கிற்கு வந்து பார்த்தால் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்னவென்பது அவருக்கு தெரிந்திருக்கும்.
இலங்கை அரசாங்கத்திற்கு விசுவாசமான ஒருவராகவே சுப்பிரமணிய சுவாமி இருந்து வருகின்றார். யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமையையும் இராணுவ கொடுமைகளையும் சரியென விவாதிக்கக்கூடிய ஒருவராகவே அவர் காணப்படுகின்றார். எனவே, அவரின் கருத்துக்களை நாம் பெரிதுபடுத்தப்போவதில்லை. யுத்த கால கட்டத்தில் உறக்கத்தில் இருந்தவர் இன்னமும் நித்திரையை விட்டு எழும்பவில்லை என்று தெரிகின்றது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
அன்று வழங்கப்பட்ட மாகாணசபை முறையில் பல விடயங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே இன்று மாகாணசபை செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. உண்மை நிலையினை தெ ளிவாக புரிந்து கொள்ள இவர்கள் முனையவேண்டும் என்றும் சுரேஷ் எம்.பி. தனது விசனத்தை தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை வந்திருந்த சுப்பிரமணிய சுவாமி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜ
பக் ஷ, அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உட்பட பலரையும் சந்தித்து பேசியிருந்தனர். சர்வதேச கற்கைகளுக்கான பண்டார நாயக்க நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட பெருமளவான அரசியல் தலைவர்களும் இராஜதந்திரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹாவோ அல்லது தூதரக அதிகாரிகளோ பங்கேற்றிருக்கவில்லை.
இதிலிருந்து சுப்பிரமணிய சுவாமி தலைமையிலான தூதுக்குழுவினரின் விஜயம் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம் பெற்றதல்ல என்பதை உறுதிப்படுத்த முடியும். ஏனெனில் இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்த விஜயம் இடம் பெற்றிருந்தால் இந்த வைபவத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிச்சயமாக கலந்துகொண்டிருப்பார்.
இந்திய மத்திய ஆட்சியினை பாரதீய ஜனதா கட்சி கைப்பற்றுவதற்கு முன்னரே சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் செய்திருந்தார். அந்த விஜயங்களின் போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையே அவர் தெரிவித்திருந்தார். தற்போது இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவர் 13ஆவது திருத்தச் சட்டமானது போதுமான அளவிற்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று கொழும்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆனால் நாடு திரும்பிய அவர் புதுடில்லியில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த போது இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கும் அந்த நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இலங்கை அரசு அக்கறைகாட்டவேண்டும். அதற்குத் தேவையான யோசனைகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று இலங்கைத் தலைவர்களிடம் எடுத்துக்கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து சுப்பிரமணிய சுவாமி இலங்கையில் ஒருகருத்தையும், இந்தியாவில் மற்றொரு கருத்தையும் தெரிவித்துள்ளமை நிரூபணமாகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் இந்திய மத்திய அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. இந்தியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நரேந்திரமோடியின் பதவியேற்பு வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொண்டார். இதன் போது நடைபெற்ற சந்திப்பில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் அவசியம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்திலும் இதே கொள்கையினையே இந்தியா கடைப்பிடித்திருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் புதுடில்லிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண தயார் என்று உறுதியளித்திருந்தார். இவ்வாறு உறுதிகள் வழங்கப்பட்டிருந்தபோதிலும், இன்னமும் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை நிலைவரமாக உள்ளது.
இத்தகையதொரு சூழலில் 13 ஆவது திருத்தச் சட்டம் போதுமான அளவிற்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இனப்பிரச்சினை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்றும் இனப்படுகொலை இடம் பெறவில்லை என்றும் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதனையே கூட்டமைப்பும் எடுத்துக் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக