மலையக மக்களிடையே 7 பேர்ச் சஸ் காணி மற்றும் தனித்தனி வீடுகள் அமைத்துக்கொடுக்க ப்பட வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது. மக்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்பதற்கு இந் தக் கோஷம் முன்னுதாரணமாகும். இனிமேலும் மலையக மக்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் அமைகிறது.
காணி, தனி வீடு என்பவற்றுக்காக மக்கள் போராட்டம் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற போதிலும், அதைப் பற்றி மலையகத் தலைவர்கள் கண்டுகொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர். மக்கள் எழுச்சிக்கு வழிகாட்டி அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தலைமைகள் மெளனம் சாதிப்பது குறித்து இன்று எல்லோரும் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேவேளை, இந்தத் தலைமைகளின் மெளனத்தில் பல மர்மங்கள் இருப்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை. மக்களை மெளனத்தால் ஏமாற்றி விடலாம் என்று நினைத்தால் அது தப்புக்கணக்கா கவே இருக்கும் என்பதை தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.
காணி மற்றும் தனித்தனி வீடுகள் ஏன் அவசியம் என்பது பற்றிய காரணங்களும், விளக்கங்களும், அவசியமும் சமூக ஆர்வலர்கள், நிபுணர்கள், மனித உரிமை ஆர்வ லர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். மனித உரிமைகளில், 'ஒரு மனிதன் தாம் வசிப்பதற்கு வீடொன்றைப் பெறுவ தற்கான உரிமையை கொண்டுள்ளான்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மலையக இந்திய வம்சாவளியினருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன?
2013ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட த்தினை சமர்ப்பித்த ஜனாதிபதித் மலையகத்தில் சுமார் 38 ஹெக்டேயர் தரிசு நிலம் உள்ளதாகவும், அவற்றை தோட்ட மக்களுக்கு குறிப்பாக தொழில் இல்லாத இளைஞர், யுவதிகளுக்குப் பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். அந்தத் திட்டம் அறிவிப்புடன் நின்றுவிட்டது.
2014ஆம் ஆண்டுக்கான வரவு-– செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு 50 ஆயி ரம் மாடி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு உள்ளி ட்ட எந்தவொரு ஏற்பாடும் முன்னெடுக்கப்படாத நிலையில் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இவ்வாறு இந்தத் திட்டங் கள் கிடப்பில் போடப்படுவதற்கு யார் காரணம்?
மலையக மக்களால் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் என்ன செய்கிறார்கள்? எதற்காக அவர்களை மக்களை தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள்? வெறுமனே அமர்ந்திருக்கவா? அல்லது அரசின் சலுகைகளைப் பெற்று சுகமாக இருப்பதற்காகவா?
தமக்கான உரிமைகளுக்காக குரல் கொடு க்கவும், அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்காகவுமே மக்களை தமது வாக்குகள் மூலம் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பினர்.
அந்த வகையில் இந்த மலையகத் தலை வர்கள் மலையக மக்களுக்காக காணி, தனித்தனி வீடுகள் போன்றவற்றை கேட்டுப்பெறுவதற்கு குரல் கொடுக்காவிட்டா லும் அரசாங்கம் தாமாக அறிவித்த திட்ட ங்களை விரைந்து முன்னெடுப்பதற்கு குரல் கொடுத்திருக்கலாமல்லவா? குறிப்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மலையக மக்களின் நலன்கருதி இந்தத் திட்டங்களை அறிவித்திருந்தார்.
மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால் அல்லது அவர்க ளுக்கு காணி, தனி வீடுகள் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று உளப்பூர்வமாக நினைத்திருந்தால் மலையகத் தலைவர்கள் பாராளுமன்றத் தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்திருப்பார்கள். அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். அல்லது ஜனாதிபதியிடம் குறித்த திட்டங்களை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு எதனையும் செய்யவில்லை.
உண்மையில் காணி மற்றும் தனி வீடுகளை மலையக மக்கள் பெற்றுக்கொள்வதிலோ அல்லது பெற்றுக்கொடுப்பதிலோ மலையக தலைவர்களுக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை என்பதையே இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
ஆரம்ப காலம் முதல் சில மலையகத் தலைவர்கள் மலையக சமூகத்துக்கு காணி மற்றும் தனித்தனி வீடுகள் வழங்குவதில் விருப்பமில்லாதவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு இவர்கள் சொல்லும் கார ணம் என்ன?
'தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்கினால் அதை வெளியாருக்கு விற்று விடுவார்கள். அதேபோன்று தனித்தனி வீடு கள் அமைத்துக்கொடுக்கப்பட்டால் அதை யும் வெளியாருக்கு விற்றுவிடுவார்கள். அவர்களுக்கு காணியோ அல்லது தனித்தனி வீடுகளோ அமைத்துக்கொடுக்கக்கூடாது. தொடர்ந்தும் காணியுரிமையற்றவர்களாகவும், லயன் காம்பிறாக்களிலுமே அவர்கள் இருக்க வேண்டும்' என்பதே இந்த மலையகத் தலைவர்கள் கூறும் காரணமாகும்.
அப்படியானால் இதுவரை எவ்வளவு பேருக்குத் காணித்துண்டுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கின்றன? எத்தனை பேரு க்கு தனித்தனி வீடுகள் அமைத்துக்கொடு க்கப்பட்டிருக்கின்றன? இது தொடர்பான விபரங்களை தெரிவிப்பார்களா? சில வேளை ஓரிருவர் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வீடுகளை விற்றிருக்கக்கூடும். அதை வாங்கியவர்கூட ஒரு வீடில்லாத தோட்டப்புற தமிழராக இருக்கக்கூடும்.
ஓரிருவர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதைக் காரணம் காட்டி முழு மலையக சமூகத்துக்கும் காணி மற்றும் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கக்கூடாது என்று கார ணம் கூறும் இந்தத் தலைவர்களின் செயற்பாட்டை என்னவென்று சொல்வது?
மறுபுறத்தில் உண்மையான காரணம் இதுவா? இல்லை! தோட்ட மக்கள் தொட ர்ந்து லயன் காம்பிராவிலேயே இருக்க வேண்டும். தனித்தனி வீடோ அல்லது காணியோ வழங்கினால் அவர்கள் சிந்தி க்கத் தொடங்கி விடுவார்கள். அரசியல் தெளிவு பெற்று விடுவார்கள். அதனால் தமக்கு அரசியல் செய்ய முடியாமல் போய்விடும் என்ற பயமே இதற்குக் காரணமாகும்.
எனவே, தொடர்ந்து இந்த மக்களை லயன் காம்பிராக்குள் அடைத்து வைப்பதே இந்த மலையகத் தலைவர்களின் திட்டமாகும். இதனை மாற்றிக்கொள்ள அவர் கள் தயாராக இல்லை.
ஆனால், மலையக மக்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கி விட்டனர். தம்மை தொடர்ந்து அடிமைகளாகவே வைத்திரு க்க நினைக்கும் தலைவர்களின் செயற்பாடுகளை நன்கு புரிந்து கொண்டிருக்கின்ற னர் என்பதை இந்தத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனை மக்கள் நன்றாக உணர்ந்துள்ள னர். எனவே, பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்பது நிச்சயம். இதனை மலையகத் தலைமைகள் என்றும் நினைவில் வைத்தி ருக்க வேண்டும்.
என்னென்ஸி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக