ஞாயிறு, 21 டிசம்பர், 2014

மலை­ய­கத்­திற்கு தேவை தனி மனித முன்­னேற்­ற­மல்ல சமூக விடு­த­லையே

எவ்­வ­ளவு மோச­மான சமூகப் பகு­தி­யி­ன­ராக இருந்­தாலும் மிகக் குறைந்த வீதத்தில் ஒரு குறிப்­பிட்ட அள­வானோர் கல்வி கற்று உயர் தொழில் பெற்று அல்­லது வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு நல்ல வாழ்க்கை வாழ்­வ­தையும் செல்­வந்­தர்­களாய் வாழ்­வ­தையும் காண்­கிறோம். இப்­படி முன்­னே­றி­ய­வர்கள் பாராட்­டப்­பட வேண்­டி­ய­வர்­க­ளா­வார்கள். இவ்­வாறு விதி விலக்­காக சிலர் முன்­னே­று­வது இச்­ச­மூக அமைப்பின் நிய­தி­யே­யாகும்.



இவ்­வாறு சிலர் முன்­னே­றி­யி­ருப்­ப­தனால் ஒரு சமூ­கமே அபி­வி­ருத்தி அடைந்து விட்­ட­தாகக் கருதி விட முடி­யாது. இவ்­வாறு முன்­னே­றிய சிலரும் கூட பல்­வேறு கார­ணி­க­ளினால் மீண்டும் தாம் இருந்த மோச­மான நிலைக்கு இழுத்து விடப்­ப­டக்­கூ­டிய ஆபத்தும் இந்த சமூக அமைப்­பி­லேயே அடங்­கி­யுள்­ளது.

தமது சமூ­கத்­திற்குத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்­டிய பொறுப்பும் கட­மையும் இவ்­வாறு முன்­னே­றி­ய­வர்­க­ளுக்கே உண்டு. இதற்­காக அவர்கள் தமது சமூகம் பின்­ன­டைவு கண்­டுள்­ள­தற்­கான உண்­மை­யான கார­ணங்­களைப் புரிந்து கொண்டு அவற்றை நீக்­கு­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­க­ளுக்குத் தமது பங்­க­ளிப்பை வழங்க வேண்டும்.

ஆனால் இவ்­வாறு முன்­னே­றி­ய­வர்­களில் மிகப் பெரும்­பா­லானோர் தமது சமூ­கத்தின் உண்­மை­யான பிரச்­சி­னை­களைப் புரிந்து கொள்­ளாது அவற்றை நீக்­கு­வ­தற்­கான வழி வகை­களை ஆரா­யாது விதி­வி­லக்­காகத் தாம் முன்­னே­றி­யுள்­ள தால் ஏனை­ய­வர்­களும் இவ்­வாறு முன்­னே­றுதல் சாத்­தி­ய­மென்றும் அக்­க­றையும் ஆர்­வமும் முயற்­சியின்­மையும் சோம்­ப­லுமே ஏனையோர் முன்­னே­றா­தி­ருப்­ப­தற்­கான காரணம் என்றும் மத்­திய தர வர்க்கக் கருத்­துக்­களை வெளி­யிட்டு ஏனை­யோ­ருக்கு அறி­வுரை கூற முற்­ப­டு­கின்­றார்கள்.

மலை­ய­கத்தில் இன்று நடந்து கொண்­டி­ருப்­பது இது­வேதான். தனி மனித முன்­னேற்றம் சமூக விடு­த­லைக்குக் கார­ண­ மா­காது என்­கிற சமூக விஞ்­ஞான உண்­ மையை இவர்கள் புரிந்து கொள்­வ­தே­யில்லை. அல்­லது புரிந்து கொள்ள மறுக்­கின்­றார்கள். மலை­யக சமூ­கத்தை மோச­மாக்கி வைத்­தி­ருக்­கின்ற ஆதிக்க சக்­தி­க­ளுக்கு இவர்கள் துணை போகின்­றார்கள். விசு­வா­ச­மான ஊழி­யர்­க­ளா­யி­ருக்­கி­றார்கள்.

ஒப்­பீட்­ட­ளவில் ஏனைய சமூ­கங்­களைப் போன்று போது­மான அளவில் மலை­ய­கத்தில் மனித வள அபி­வி­ருத்தி ஏற்­ப­டா­மைக்குக் கார­ணமே மலை­யக சமூகம் பின்­ன­டைவு கண்ட ஒரு சமூ­க­மா­யி­ருப்­பது தான் என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பின்­ன­டைவு கண்ட நிலை­யினை ஒரு சமூக மாற்­றத்­தினால் போக்க முடி­யுமே தவிர தனி மனித முன்­னேற்­றத்­தினால் அல்ல. கால் நூற்­றாண்­டுக்கு முன்பு இந்த சமூகம் எப்­ப­டி­யி­ருந்­தது? இன்று தனி மனி­தர்கள் சிலர் முன்­னே­றி­யி­ருக்­கின்­றார்கள். சமூ­கத்தில் அடிப்­படை மாற்­றங்­க­ளேதும் ஏற்­ப­ட­வில்லை. சமூக மாற்றம் ஒன்று ஏற்­ப­டா­விட்டால் இன்னும் கால்­நூற்­றாண்டு காலத்­திற்குப் பின்னும் இச் சமூ­கத்தின் நிலை இவ்­வா­றேதான் தொடரும். தனி மனி­தர்கள் சிலர் முன்­னே­றி­யி­ருப்­பார்கள் சமூ­கத்தில் அடிப்­படை மாற்­றங்­க­ளே­தையும் காணக் கிடைக்­காது.

தனி மனி­தர்கள் முயன்று முன்­னே­றலாம் என்ற கிளிப்­பிள்ளை பாடத்தை இச் சமூ­கத்தை நோக்கி இச்­ச­மூ­கத்­தி­லி­ருந்து வந்­த­வர்­களே கற்­றுக்­கொ­டுக்க முயலும் போது ஒன்று மட்டும் தெளி­வா­கின்­றது. அவர்கள் இச் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை ஒரு போதும் புரிந்து கொண்­ட­வர்கள் அல்லர் என்­பது தான் அது.

ஆகவே இந்த சமூ­கத்தின் அடிப்­படைப் பிரச்­சி­னைகள் என்­ன­வென்று பார்ப்போம்.

அன்­றைக்கும் இன்­றைக்கும் இலங்­கையில் ஒப்­பீட்­ட­ளவில் மிகக் குறை­வான வருவாய் பெறுவோர் பெருந்­தோட்­டத்­துறைத் தொழி­லா­ளர்­க­ளே­யா­வார்கள். தம்மை போஷித்துக் கொள்­வ­தற்கும் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கும் போது­மான வரு­வாயை இவர்கள் ஒரு போதும் பெறு­வ­தில்லை.

இதன் கார­ண­மாக இவர்­க­ளி­டையே போஷாக்­கின்மை அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றது. போஷாக்­கின்­மை­யினால் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­களில் மிக அதி­க­ள­வானோர் காணப்­ப­டு­வது பெருந்­தோட்டத் துறை­யி­லேயே என்­பது சமீப கால புள்­ளி­வி­ப­ரங்­க­ளி­லி­ருந்தும் தெரிய வந்­துள்­ளது.

இதனால் இவர்கள் ஆரோக்­கி­ய­மான உடல் உள வளர்ச்சி உடை­ய­வர்­களாய் இருப்­ப­தில்லை. பல்­வேறு உடற்­கு­றை­பா­டுகள் உடை­ய­வர்­க­ளா­கவும் அடிக்­கடி நோயினால் பாதிக்­கப்­ப­டு­கி­ற­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றார்கள். போதி­ய­ள­வான மருத்­துவ வச­திகள் இன்­மை­யி­னாலும் பொரு­ளா­தார வச­தி­யின்­மை­யி­னாலும் முறை­யான சிகிச்சை பெற்­றுக்­கொள்­வது இவர்­க­ளுக்கு சாத்­தி­ய­மா­வ­தில்லை.

போஷாக்­கின்மை குழந்­தை­க­ளுக்குப் பார்வை குறைவு நரம்புத் தொகுதி சீர்­கே­டுகள்,மூளை வளர்ச்சி குறைவு, இன்­னோ­ரன்ன குறை­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது. இதனால் ஏனைய சமூகப் பகு­தி­யி­னரைச் சேர்ந்த குழந்­தைகள் போல் இவர்­களால் இயல்­பாகக் கற்றல் செயற்­பா­டு­களில் ஈடு­பட முடி­வ­தில்லை. கல்­வியில் பின்­தங்­கி­ய­வர்­க­ளாக இச் சமூகப் பகு­தி­யினர் உள்­ள­மைக்கு இது பிர­தான கார­ண­மா­கின்­றது.

இந்தக் குழந்­தை­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை உணர்ந்து மாற்­றத்­திற்­காகத் திட்­ட­மி­டுவோர் யார்? ஒரு வகையில் ஏனைய சமூகப் பகு­தி­யி­ன­ரோடு இவர்­களின் கல்வி நிலையை ஒப்­பிட்டுப் பார்ப்­பதே அபத்­த­மா­னது.

கல்வி கலை கலா­சாரம் இலக்­கியம் வர்த்­தகம் ஆகிய இன்­னோ­ரன்ன துறை­க­ளிலும் ஈடு­பட்டு வளர்ச்சி காண முடி­யாது தமது உழைப்­பை­யெல்லாம் தமது உணவுத் தேவை­க­ளுக்­கா­கவே செல­விட வேண்­டிய நிலை­யி­லுள்ள உடல் உள ஆரோக்­கியம் குன்­றிய நாளுக்கு நாள் கடன் சுமை ஏறி வரு­கின்ற சேமிப்­புக்கு வாய்ப்பு வச­தி­யற்ற ஒரு சமூ­க­மாக இச் சமூகம் ஆக்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

உண்­பதும் உடுப்பதும் உறங்குவதும் என மனித வாழ்வின் மகோன்னதங்கள் எதையும் காணாமலே இவர்கள் வாழ்வு கழிந்து போய் விடுகின்றது.

இந்த நிலையை மாற்றி இவர்கள் நல் வாழ்வு காண முறையான சமூக மாற்றத் திற்குத் திட்டமிட வேண்டுமே தவிர தனி மனிதர்களின் முன்னேற்றம் பயனேதும் கிடைத்துவிடப் போவதில்லை.

ஒரு கால கட்டத்தில் ஒப்பீட்டளவில் கல்வித் துறையில் பின் தங்கியிருந்த நமது சகோதர முஸ்லிம் சமூகம் இன்று முன்னேறிய சமூகமாக மாறியிருப்பதற் கான காரணம் அச்சமூகத்தினரிடையே ஏற்பட்ட தனி மனித முன்னேற்றமல்ல. அவர்கள் சமூக ரீதியாகச் சிந்தித்து செயற் பட்டதே என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

 விண்­மணி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல