ஞாயிறு, 21 டிசம்பர், 2014

நீதி கிடைக்கும் வரை ஓயாது தேடி­ய­வர்­களின் வீர வர­லாறு ஒன்று

முயற்­சிகள் ஏது­மின்றி முடங்கி மௌன­மாக நீட்­டிக்­கி­டக்கும் எந்த இனத்­துக்கும் வலி­ய­வந்து நீதி­தே­வதை வரங்கள் ஏதும்­தரப் போவ­தில்லை. உலகில் நடத்­தி­மு­டிக்­கப்­பட்ட இனப்­ப­டு­கொ­லைகள் இனச்­சுத்­தி­க­ரிப்­புகள் அனைத்துக்கும் உரிய நீதி கிடைத்­தி­ருக்­கி­ற­தா­என்றால் இல்லை.



இனப்­ப­டு­கொ­லை­களின் வடுக்­களை தாங்­கிய மக்கள் ஓய்­வின்றி எழுந்து நீதிக்­கான தேடலை ஆரம்­பித்தால் நிச்­சயம் அது கிடைத்தே தீரும். அது இன்றோ நாளையோ,நாளை­ம­று­நாளோ திடீ­ரென நிகழ்ந்து விடக்­கூ­டிய ஒன்­றல்ல.அதற்­கான நீண்ட பய­ணங்கள் ஓய்­வின்றி நிகழ்த்­தப்­ப­டும்­போது அது பல கத­வு­களை திறந்­து­வைக்கும். நீதியின் கதவு உட்­பட.எல்­லா­வ­கை­யான கொடும் கொலை­க­ளையும் செய்­து­மு­டித்து விட்டு நீதியின் கண்ணில் இருந்து தூரச்­சென்று ஒளித்­தி­ருந்த ஒரு போர்க்­குற்­ற­வா­ளியை, ஆண்­டுகள் பல கடந்­த­போதும் தேடிச்­சென்று தூக்­கி­வந்து நீதிக்கு முன்னால் நிறுத்­திய ஒரு தேசிய இனத்தின் உறக்­க­மில்­லாத பயணம் பற்­றி­யது இந்த ஆக்கம்.

உலகின் அண்­மை­ய­கா­லத்தில் மிகப்­பெ­ரிய இனப்­ப­டு­கொ­லை­யாக ஹிட்­லரின் படை­களால் மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொ­லை­களில் 'யூதப்­ப­டு­கொலை' முக்­கி­ய­மா­ன­தாகும். அறு­ப­து­லட்சம் யூத­மக்கள் விஷ­வாயு அறை­க­ளிலும், கொலைக்­க­ளங்­க­ளிலும், கடும்­கு­ளி­ரிலும்,பசி­யாலும் கொலை­செய்­யப்­பட்­டார்கள். இந்த யூதப்­படு கொலையில் முக்­கி­ய­மா­னதும்,மிகவும் கொடூ­ர­மா­னதும் 'அவ்ஸ்விற்ஸ்'(Auschwitz) முகாமில் லட்­சோ­ப­லட்சம் யூதப்­பெண்­க­ளையும்,சிறு­வர்­க­ளையும் விஷ­வாயு அறை­க­ளுக்குள் அடைத்து துடிக்­கத்­து­டிக்­க­கொன்று எரித்­த­தாகும்.

மானு­ட­வ­ர­லாற்றில் எப்­போ­துமே காணப்­ப­டாத இந்த இனப்­ப­டு­கொ­லையை வடி­வ­மைத்து முன்­னின்று நடத்­தி­யவன் 'அடோல்வ்­ஏச்மென்'(Adolf Eichmann) என்ற ஜேர்­ம­னி­ய ­த­ள­பதி. கொஞ்­சம்­கூட தயக்­கமோ,சஞ்­ச­லமோ இன்றி யூதர்­களை ரயில்கள் மூலம்­கொலை முகாம்­க­ளுக்கு அனுப்­பிக்­கொண்­டி­ருந்தான் இவன்.

1942ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அதி­கூ­டிய அமெ­ரிக்க மற்றும் கூட்­டு­ப­டை­களின் ஓன்­றி­ணைந்த பலத்­தின்­முன்­பாக 'ஹிட்­ல­ரின்­க­னவு சாம்­ராஜ்யம் கலைந்து வீழ்ந்­த­வுடன் யூதப்­ப­டு­கொ­லைக்கு பொறுப்­பான 'அடோல்வ் ஏச்மென்' னும் தனது உயிரை காத்­துக்­கொள்ள ஓடி­ஒ­ளியத் தொடங்­கினான். அமெ­ரிக்கா மற்றும் நேச­நாட்டுப் படை­களால் பிடிக்­கப்­பட்ட ஜேர்­ம­னிய தள­ப­திகள் 'நூரன்பேர்க்' நகரில் அமைந்த நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்டு,சுட்டும்,தூக்­க­லிட்டும் மரண தண்­ட­னைக்கு உள்­ளாக்­கப்­பட்­டனர்.

நூரன்பேர்க் நீதி­மன்­றத்தில் பல ஜேர்­ம­னி­ய­த­ள­ப­திகள் ஒப்புதல் வாக்கு மூலங்­க­ளையும் வழங்­கி­னார்கள். அதில் மிக முக்­கி­ய­மாக 'அவ்ஸ்விற்ஸ்' (Auschwitz) முகாமின் பொறுப்­பா­ள­ரான தள­பதி 'ரொடுல்வ் கோய்ஸ்' என்­பவர் இந்த படு­கொ­லை­க­ளுக்­கான முழு உத்­த­ர­வையும் 'அடோவ் ஏச்மென்'தான் தந்­த­தாக வாக்கு மூலம் கொடுத்­ததன் பின்னர் 'அடோவ் ஏச்மென்' யூதப்­ப­டு­கொ­லை­க­ளுக்­காக மிகவும் தேடப்­படும் ஒரு­வ­ரானார்.

முழு ஜேர்­ம­னியும் கூட்­டுப்­ப­டை­க­ளினால் கைப்­பற்­றப்­பட்ட சூழலில் கிரா­மங்­க­ளிலும்,பண்­ணை­க­ளிலும் இந்த கொலை­கார தள­பதி ஒளித்­தி­ருந்தான். ஒரு­வா­றாக 1948இல் இத்­தா­லியை வந்­த­டைந்து அங்­கி­ருந்து 'றிச்­சார்டோ கெலிமன்' என்ற பொய்ப் பெய­ருடன் சிரி­யா­நாட்டின் 'டமாஸ்கஸ்' நகரில் சிறிய ஆயு­தங்­களை இறக்­கு­மதி செய்­ப­வ­னாக இருந்தான்.

ஆனால் யூதர்­க­ளுக்­கான இஸ்­ரேல்­தேசம் உரு­வா­ன­வுடன் யூதப்­ப­டு­கொ­லை­களின் சூத்­தி­ர­தா­ரி­களை தேடி அழிக்­கவும், பிடித்­துக்­கொண்டு இஸ்­ரே­லுக்கு கொண்­டு­வ­ரவும் விசேட இஸ்­ரே­லிய பிரி­வுகள் மோப்பம் பிடிக்கத் தொடங்­கின. விஷ­வாயு அறை­க­ளுக்குள் இலட்­சோ­ப­லட்சம் யூதர்­களை கொன்­ற­ழித்த ' அடோல்வ் ஏச்மென் 'என்­ப­வ­ரையும் அவர்கள் தேடி­ய­லைந்து கொண்­டி­ருந்­தார்கள் .இனி இங்­கி­ருப்­பது அவ்­வ­ளவு பாது­காப்­பா­னது இல்­லை­யென்று புரிந்­து­கொண்டு 1950ஆம் ஆண்டு ஆர்­ஜன்­டீ­னா­வுக்குள் நுழைந்து கொண்டான். அப்­போ­தைய ஆர்­ஜன்ரீனா் அரசு வேறுபொய்ப் பெயர்­களில் தப்­பித்­து­வரும் ஜேர்­ம­னிய தள­ப­தி­க­ளுக்கு ஒரு ஒதுங்­கி­ட­மாக இருந்­தது. அங்கு 'கெலிமென்' என்ற பெயரில் ஒரு தொழி­லா­ளி­யாக இவன் வாழத்­தொ­டங்­கினான்.

1952இல் ஆஸ்­தி­ரி­யாவில் இருந்து தனது மனை­வி­யையும் முன்­று­கு­ழந்­தை­க­ளையும் ஆர்­ஜன்­டீ­னா­வுக்கு வர­வ­ழைத்து குடும்­ப­மாக வாழ­தொ­டங்­கினான். ஆண்­டுகள் பல கடந்­தன. மொத்­தத்தில் எல்­லோரும் இந்த கொலை­கா­ரனை மறந்­து­விட்­டி­ருந்­தனர். ஆனால் வலி­களை சுமந்த யூத­தே­சமும் மக்­களும் இவனை மறக்­கவோ மன்­னிக்­கவோ தயா­ராக இல்லை. எங்கோ ஒரு உலக மூலையில் 'அடோல்வ்­ஏச்மென்' என்ற மானு­ட­எ­திரி பதுங்கி இருப்பான் என்­பது அவர்­க­ளுக்கு நன்கு தெரியும் .தேடிக்­கொண்டே இருந்­தனர். ஒரு நாள்­அ­தற்கு பலனும் கிடைத்­தது. மெத்­த­ன­மாக இவன்­போட்ட கடிதம் ஒன்று ஆஸ்­தி­ரி­யாவின் முத்­திரை சேக­ரிக்கும் ஒரு­வ­ருக்கு கிடைத்­துப்­போக அதை அவர் தனது யூத நண்­ப­ருக்கு காண்­பிக்க 'அடோல்வ் ஏச்­மெனின்' புக­லிடம் ஆர்­ஜன்­டீனா தான் என இஸ்­ரே­லுக்கு தெரி­கி­றது.

பிறகு தாம­திப்­பார்­களா என்ன.? கணக்குத் தீர்க்கும் 'ஒப்­பி­ரேசன் ஏச்மென்' ஆரம்­ப­மா­கி­றது. மொசாட் புல­னாய்வு அதி­கா­ரிகள் ஆர்­ஜன்­டீ­னா­வுக்கு விரை­கி­றார்கள். ஏற்­க­னவே அங்கு இருந்த தக­வல்­க­ளுடன் 'அடோல்வ் ஏச்மென்'னை தேடிச்­ச­லிக்­கி­றார்கள். இறு­தியில் மார்ச்19ஆம் திகதி 1960ஆம் ஆண்டு இவனின் இருப்­பி­டத்தை அடை­யாளம் கண்டு இவ­னையும் காண்­கி­றார்கள்.

ஆனாலும் இவன்தான் அந்த வெறியன் என்று அடை­யாளம் படுத்­த­வேண்­டிய தேவை உள்­ளது. அது­வ­ரைக்கும் அவனின் இடம் முழு­நே­ரமும் இஸ்­ரே­லிய புல­னாய்வு கண்கள் மேய்ந்­து­கொண்டே இருந்­தன. எங்கே போகிறான். என்ன செய்­கிறான். என்­பன அனைத்தும் கண்­கா­ணிப்பில் இருக்­கி­றது.

'அடோல்வ் ஏச்மென்'னை அடை­யாளம் கண்டு முன்று நாட்­களின் பின்னர் மார்ச் 21ஆம்திகதி மாலைப்­பொ­ழுதில் அவன் ஒரு பூச்­செண்­டுடன் வீட்­டுக்கு செல்­கிறான். அவனின் குழந்­தை­களும் மனை­வியும் கூட நல்ல உயர்­தர ஆடை­க­ளுடன் அன்று காத்­து­நிற்­கின்­றனர். வீட்­டு­வா­ச­லில்­வைத்து 'அடோல்வ் ஏச்மென்' தனது மனை­வி­யிடம் அந்த பூச்­செண்டை கொடுத்த பொழுதில் இவன்தான் அந்த கொலை­காரன் என இஸ்ரேல் உறுதி கொள்­கி­றது. ஏனெனில் அந்­தநாள் 'அடோல்வ் ஏச்­மென்னின் திரு­ம­ணநாள் என்று இஸ்­ரே­லிய புல­னாய்வு தக­வல்கள் பதிந்­தி­ருந்­தன. தனது திரு­ம­ண­நாளின் 25ஆவது வருட நிறை­வுக்­காக மனை­விக்கு கொடுத்த பூச்­செண்டு ஒரு மிகப்­பெ­ரிய போர்க்­குற்­ற­வா­ளியை உறு­தி­யாக அடை­யாளம் காண உத­வி­யி­ருந்­தது.

இவன்தான் அவன் என எல்­லா­வ­கை­யிலும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டது. இனிமேல் எப்­ப­டி­யா­வது இஸ்­ரே­லுக்கு கொண்­டு­போ­க­வேண்டும். அப்­போது ஆர்­ஜன்­டீ­னாவில் இஸ்­ரே­லிய புல­னாய்­வா­ளர்கள் இயங்­கு­வதும்,இருப்­பதும் கண்டு பிடிக்­கப்­பட்டால் மரண தண்­ட­னையோ,மிக­நீண்ட சிறை­வா­ச­மோதான் கிடைக்கும். அப்­ப­டி­யா­ன­பொ­ழுதில் அங்கு ஒரு போர்க்­குற்­ற­வா­ளியை கடத்தி இஸ்­ரே­லுக்கு கொண்­டு­வ­ரு­வது என்­பது நினைத்­துக்­கூடப் பார்க்­க­மு­டி­யா­த­தாக இருந்­தது.

ஆனாலும் தமது உற­வுகள் கத­றிய இறு­தி­நேரக் கத­ற­லுக்கு தீர்ப்­பு­எ­ழுதும் துடிப்பும்,ஆன்­ம­வே­கமும் எல்லா யூத­மக்­க­ளி­டமும் நிறைந்தே இருந்­தது. இஸ்­ரேலில் இருந்து பல ஆயிரம் மைல் தூரத்தில் உள்ள ஆர்­ஜன்­டீ­னாவில் கைகளில் துப்­பாக்­கியோ வேறு எந்த ஆயு­தமோ இன்றி அந்த போர்க்­குற்­ற­வா­ளியை கடத்தும் ஆபத்­தான வேலைக்குள் இறங்­கு­கின்­றனர்.

1960ஆம்­ஆண்டு மே11ஆம் நாள் வீட்­டுக்கு அரு­கான பாதையில் நடந்­து­கொண்­டி­ருந்த உலகின் மிக­மோ­ச­மான மானு­ட­வி­ரோதி வெறும்­கை­களால் மடக்­கிப்­பி­டிக்­கப்­பட்டு கடத்­தப்­ப­டு­கின்றான். கைகளும் கால்­களும் கட்­டப்­பட்டு வீடு ஒன்றின் அறையில் கிடத்­தப்­பட்­டி­ருந்த 'அடோல்வ் ஏச்மென்' மே21ஆம் நாள் ஆர்­ஜன்­டீ­னாவின் 'போனஸ் அயர்ஸ்' விமான நிலை­யத்தில் தரித்­தி­ருந்த இஸ்­ரே­லிய விமா­னத்தில் போதை ஏறி மயக்­க­மான விமான பணி­யாளர் என்று கூறப்­பட்டு ஏற்­றப்­ப­டு­கின்றான்.

விமா­ன­நி­லைய கட்­டுப்­பாட்டு அறையின் உத்­த­ர­வு­கி­டைத்து விமானம் மேலெ­ழும்பி ஆர்­ஜன்­டீ­னாவின் வான்­ப­ரப்பை கடந்­த­பின்­னரே இந்த வீர­மி­கு­செ­யலை செய்­த­வர்கள் தங்­க­ளுக்குள் கைகு­லுக்கி கொள்­கின்­றனர்.

மறுநாள் இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்­றத்தில் பிர­தமர் பென்­கூ­ரியன் 'அடோல்வ்­ஏச்மென்' கைது­செய்­யப்­பட்டு இஸ்­ரே­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளதை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கிறார்.

1961ஆம் ஆண்டு ஏப்­ரல்­மாதம் 11ஆம் நாள் 'ஆடோல்வ் ஏச்மென்'னுக்கு மீதான பதி­னைந்து குற்­றச்­சாட்­டுகள் நீதி­மன்­றத்தில் சுமத்­தப்­ப­டு­கின்­றன. கொலை முகாம்­களில் இருந்து தப்­பி­ய­வர்கள் சாட்­சி­யங்­க­ளாக உணர்ச்­சி­யுடன் முன்­வ­ரு­கி­றார்கள்.

1961ஆம் ஆண்டு டிசம்பர்15ஆம் நாள் மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான செயல்­க­ளுக்­கா­க­அ­வ­னுக்கு மர­ண­தண்­டனை வழங்­கப்­ப­டு­கி­றது. 1962ஆம் ஆண்டு மேமாதம் 31ஆம் நாள் மனி­த­குல விரோ­தி­யான அந்த கொலை­கா­ர­னுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது. பல லட்சம் மக்­களை துடிக்­க­து­டிக்க கொன்று பின் அவர்­களின் உடலை எரித்த 'அடோல்வ் எச்மென்' என்ற குற்­ற­வா­ளியின் மரணம் 23:58 க்கு உறு­தி­செய்­யப்­ப­டு­கி­றது.

அதன்பின் அவனின் உடலை எரித்து அந்த சாம்­பலை எடுத்­துக்­கொண்டு ஒரு படகு இஸ்­ரேலின் கரையில் இருந்து வெகு­தூரம் கடந்து செல்­கி­றது. இவனின் எஞ்­சிய சாம்­பல்­கூட யூத­மண்ணை தீண்­டக்­கூ­டாது என்­ப­தற்­காக ஒரு வாளிக்குள் வைத்து இஸ்ரேல் கடல் எல்­லையை கடந்து கடலின் ஆழத்துள் எறி­யப்­ப­டு­கி­றது.

ஒரு மிகச்­சி­றய தேசிய இனம்,தனக்­கான நீதியை தானே தேடிய நிகழ்வு இது. காலமும்,அசையும் வாழ்­வி­யலும் மற்­ற­வர்­களை எல்லாம் மறக்கச் செய்­து­விடும்.் மறக்கச் செய்துவிடும்.

ஆனால் உறவுகளை இழந்தவர்களும், வலிகளை சுமந்தவர் களும் ஒருபோதும் மௌனமாயிருக்கார்.
  
ச.ச.முத்து – லண்டன்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல