"நொச்சியாகம பிரதேசத்தை அண்மித்தவேளை மேற்படி இளைஞனான துசாந்தனை, டயர்களை கழற்றப் பயன்படுத்தப்படும் இரும்பிலான வீல் பிறசரினால் தாக்கியதாகவும் இதனால் அவன் மயக்கமடைந்து விட்டதாகவும் பின்னர் தூக்கிச்சென்று காட்டினுள் வீசியதாகவும் சாரதி கூறினான்"
கொ ள்ளை, வழிப்பறி, கொலை என்பன இன்று நாட்டில் சர்வசாதாரணமாக மாறி விட்டன. பணத்துக்காகவும் இதர சிறிய தேவைகளுக்காகவும் கூட ஈவிரக்கமின்றி கொலைகள் இடம்பெற்று வருகின்றன.
குடும்ப வறுமை காரணமாகவும், பொரு ளாதாரக் கஷ்டங்களின் நிமித்தமும் இளம் வயதினர் ஏதாவது கிடைக்கும் ஒரு தொழிலை செய்து குடும்பத்தைக் காக்கும் நோக்குடன் புறப்படுகின்றனர். அதேவேளை, பணத்தாசை பிடித்த சில கழுகுகளுக்கு அவர்கள் இரையாகவும் நேருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் வட பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒருவனுக்கும் நேர்ந்தது.
தனது குடும்பத்தைக் காப்பாற்றும் நோக்குடன் லொறியொன்றில் வேலைக்குச் சென்ற மல்லாவி, வவுனிக்குளத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞனே திடீரெனக் காணாமல் போயிருந்தான். இந்நிலையில் பெற்றோர் பொலிஸிற்குச் சென்று முறையிட்டதுடன் தமக்கு தெரிந்த அனைவரிடமும் அதுகுறித்து விசாரித்தனர். இறுதியில் கொழும்பிலிருந்தும் சீனி ஏற்றி வந்த பார ஊர்தி ஒன்று காணாமல் போயிருந்தமை தெரிய வந்தது. அந்தப் பார ஊர்தியில் மேற்படி மல்லாவி வவுனிக்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான தியாகலிங்கம் துஷாந்தனும் பயணித்தமை தெரியவந்தது.
இந்நிலையில் துஷாந்தன் எங்கே? சீனி ஏற்றி வந்த அந்த பார ஊர்தி எங்கே? என்று பொலிஸாரும் வர்தகர்களும் குறித்த இளைஞனின் பெற்றோரும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இறுதி யில் அந்தப் பெற்றோருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் துஷாந்தன் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட விடயம்.
யாழ்ப்பாணம் திருநேல்வேலிப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு வந்த பார ஊர்தி காணாமல் போன சம்பவமும் குறித்த இளைஞன் படுகொலை செய்யப்பட்ட விடயமும் காட்டுத் தீயாய் பரவியது. இது அந்த இளைஞனின் குடும்பத்தை மட்டுமல்ல, வட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் அனைவர் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தவே செய்தது.
முல்லைத்தீவு கொல்லவிளங்குளம் மல்லாவியைச் சேர்ந்த தியாகலிங்கம் துஷாந்தன் (20வயது) தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு கொழும்பிலிருந்து வடபகுதிக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் தனியார் நிறுவனமொன்றில் தன்னை வேலைக்கு அமர்த்திக் கொண்டான்.
இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் வைத்து யாழ்.வர்த்தகர்களினால் கொள்வனவு செய்யப்பட்ட இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான சீனி, கடலை, எண்ணெய் போன்ற ஒரு பெரும் தொகுதி உணவுப் பொருட்கள் யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரும் பொருட்டு குறித்த பொருட்களை இடமாற்றும் ஓர் நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்.காரைநகரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இந்தப் பொருட்களை இடமாற்றும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் இயங்கும் இந்த நிறுவனம் வழமையாக பொருட்களை, யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் ஏற்றி இறக்கி வருகின்றது.
இந்நிலையில் அன்றைய தினம் தங்கள் வசம் பார ஊர்தி ஒன்றும் இல்லாத காரணத்தினால் தனக்கு அறிமுகமான பிறிதொரு நபரின் பார ஊர்தியை வாடகைக்கு அமர்த்தி அதில் பொருட்களை ஏற்றி அனுப்பி வைத்ததாகத் தெரிய வருகிறது.
பெரும்பான்மை இனத்தை சேர்ந்த குறித்த பாரவூர்தியின் சாரதி மற்றும் நடத்துனருடன் தனது நிறுவனத்தின் ஊழியரென குறித்த இளைஞரையும் பொருட்களின் பாதுகாப்பு, கருதி நிறுவன உரிமையாளர் அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கடந்த மாதம் 29ஆம் திகதி பொருட்களை ஏற்றிப் புறப்படும் சமயம் பாரவூர்தியின் டயர் திடீரெனக் காற்றுப்போனமையினால் இரவு அதனை சீர்செய்ய முடியாமல் ஆட்டுப்பட்டித் தெரு பிரதேசத்திலேயே தரித்து நின்று மறுநாள் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30க்கு பின்னரே பாரவூர்தி யாழ். நோக்கி புறப்பட்டுள்ளது. இவ்வாறு புறப்படும் வேளையில் மேற்படி இளைஞன் தனது தொலைபேசியிலிருந்து நிறுவன உரிமையாளருடன் தொடர்புகொண்டு விபரத்தைத் தெரிவித்துள்ளான்.
இதேபோல் பாரவூர்தியின் சாரதி புத்தளத்தை அண்மித்த பிரதேசத்தில் இருந்து இறுதியாக நிறுவன உரிமையாளருடன் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார். அதன் பின்னர் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.
மறுநாள் 1ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் தங்களுடைய பொருட்கள் இன்னும் வந்து சேரவில்லை என்ற தகவலை கொழும்பிலுள்ள குறித்த நிறுவனத்தின் உரிமையாளருக்குத் தெரிவித்தனர். அதேவேளை, குறித்த இளைஞன், சாரதி, நடத்துனர் ஆகியோரிடமிருந்து எந்தவித தகவல்களும் கிடைக்காமையினால் மாலையில் நிறுவன உரிமையாளர் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தார். இதேபோல் யாழ்ப்பாணத்திலுள்ள பொருட்களின் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.
ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் முதலில் இது விபத்தாக அல்லது குற்றச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர். அதேவேளை குறித்த இளைஞனின் குடும்பத்தார், இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் மறுநாளான இரண்டாம் திகதி குறித்த பிரதேச வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையங்கள் அனைத்திலும் தொடர்புகொண்டபோதும் இவைபோன்ற எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை என அறிந்தனர். அப்போதுதான் நிலைமை மோசமடைவதை அவர்கள் உணர்ந்தனர்.
இந்த நிலையில் பொலிஸார் தமது விசாரணைகளை மேலும் முடுக்கிவிட்டதன் பயனாக, குறித்த பாரவூர்தின் சாரதியின் மீது சந்தேகம் வலுவடைந்தது. அதேவேளை, அவன் பயன்படுத்தும் மற்றுமோர் தொலைபேசி இலக்கமும் கிடைத்தது. இதன் மூலம் மூன்றாம் திகதி பல வழிகளிலும் சிந்தித்த பொலிஸார் இறுதியில் ஓர் உத்தியைக் கையாண்டனர். ஓர் ஊடகத்தில் இருந்து உரையாடுவது போல் உரையாடி "தற்பொழுது உங்களுக்கு பெறுமதி மிக்க பரிசில் கிடைத்துள்ளது என்றும் அப்பரிசினை குடும்ப சகிதம் இன்றே வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்றும் சாரதிக்குக் கூறியுள்ளனர். பின்னர் அந்த ஊடக நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். குறித்த சாரதியை இனங்காண்பதற்காக பொருட்கள் இடமாற்று நிறுவனத்தினைச் சேர்ந்த ஒருவரையும் அழைத்து வந்திருந்தனர். இவ்வாறு திட்டமிட்டு பொலிஸார் விரித்த வலையில் சாரதி மனைவி சகிதம் அவ்விடத்திற்கு வந்தபோது மடக்கிப் பிடிக்கப்பட்டான்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சாரதியிடம் 3ஆம் திகதி பல வழிகளிலும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பொருட்களை மீட்பதை விட அந்த பாரவூர்தியில் வந்த இளைஞன் தொடர்பில் அதிக அக்கறை காட்டினர்.
இதை உணர்ந்த சாரதி, இளைஞன் தொடர்பில் உறுதியான பதில் ஏதும் கூறாது முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே வழங்கி வந்தான். இவ்வாறு தொடர்ச்சியாக 3 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் எட்டவில்லை. இறுதியாக இம்மாதம் 7ஆம் திகதி மேற்கொண்ட தீவிர விசாரணையின் பயனாக சாரதி வாய்திறந்தான். அவன் அளித்த வாக்குமூலத்தின் மூலம் இளைஞன் எவ்வாறு கொலை செய்யப்பட்டான் என்ற விடயத்தை அறிந்த பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
அவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று ஆய்வை மேற்கொண்ட பின்னர் பொலிஸார், இளைஞனின் சடலத்தை மீட்பதற்கான அனுமதியை அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதனால் நீதிமன்றத்தால் பெறமுடியாமல் போனது. மறுநாள் 8ஆம் திகதியே அதற்கான உரிய அனுமதியைப் பெற்றனர். மேற்படி விடயங்கள் குறித்து நிறுவன உரிமையாளரினால், இளைஞனனின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு அவர்களுடன் சாரதியையும் அழைத்துக் கொண்டு கடந்த 9ஆம் திகதி காலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர்.
சாரதியினால் அடையாளம் காட்டப்பட்ட பிரதேசமானது, கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வரும் பாதையில் நொச்சியாகம பிரதேசத்தைத் தாண்டி அநுராதபுரம் செல்லும் இடத்தில் 67ஆவது கிலோமீற்றர் பிரதேசத்தில் இடது பக்கக் காட்டில் அமைந்துள்ளது. மேற்படி இனங்காட்டப் பட்ட இடத்தில் பொலிஸார் தேடுதல் நடத் தியபோது பாரவூர்தியில் விரிக்கப்பட்டிருந்த பொலித்தீன் இரத்தக்கறை படிந்த நிலையில் முதலாவது தடயப்பொருளாக மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காட் டினுள் சென்றபோது இளைஞனின் பாதணிகளும் மேலும் சிறிது தூரத்தில் பாரவூர்திகளுக்கு சக்கரங்கள் மாற்றப்பயன்படுத்தப்படும் வீல் பிரசர் எனப்படும் இரும்பும் மீட்கப்பட்டது. தொடர்ந்து 25 மீற்றர் தூரம் சென்றவேளையில் ஓர் 20 வயதை மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் முகமற்ற உடல் காணப்பட்டது.
அந்த உடலில் அணிந்திருந்த ஆடைகளைக் கொண்டு அது தி.துசாந்தனின் உடல்தான் என குறித்த நிறுவன உரிமையாளரினாலும் துஷாந்தனின் சகோதரராலும் அடையாளம் காட்டப்பட்டது. இந்நிலையில் குறித்த பார ஊர்தியின் சாரதியை பொலிஸார் முறையாக விசாரித்ததில் குறித்த சடலம் பொலிஸாரின் உதவியுடன் அன்றைய தினம் 9ஆம் திகதி மீட்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
"தாங்கள் நொச்சியாகம பிரதேசத்தை அண்மித்தவேளை மேற்படி இளைஞனான துசாந்தனை டயர்களை கழற்றப் பயன்படுத்தப்படும் இரும்பிலான வீல் பிறசரி னால் தாக்கியதாகவும் இதனால் அவன் மயக்கமடைந்து விட்டதாகவும் பின்னர் தூக்கிச்சென்று காட்டினுள் வீசியதாகவும் கூறினான்.
தொடர்ந்து சாரதியளித்த வாக்கு மூலத் தில், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திஸ்ஸ மஹராகம பிரதேசத்திற்கு பாரவூர்தியை செலுத்தியதாகவும், அப்பிரதேசத் தில் வீடொன்றை வாடகைக்குப் பெற்று பொருட்களை இறக்கியதுடன் குறித்த சில பொருட்களை தனியாருக்கு கேட்ட விலையில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்தான். இதனையடுத்து பொலிஸார் அங்கு சென்று தேடுதல் நடத்தியபோது குறிப்பிட்ட அளவு பொருட்களை மீட்டதோடு இளைஞனின் தொலைபேசி மற்றும் அடையாள அட்டைகள் என்பவற்றையும் மீட்டனர்.
இவ்வாறு நொச்சியாகம காட்டுப்பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்ட சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பெற்றோர் சடலத்தைப் பொறுப்பேற்று இறுதிக்கிரியைகளை மேற் கொண்டனர். இவ் விடயம் குற்றச்செயலு டன் தொடர்புபட்டமையினால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கின்போது சாட்சியாக உதவக்கூடிய சட்ட ஆவணமான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட் டது.
மேற்படி இளைஞனின் தந்தையார் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் எறிகணைத்தாக்குதலில் இறந்தமையினால் குடும்ப வறுமையைப் போக்கும் முகமாக இள வயதிலேயே தொழில் முயற்சியில் இறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ந.லோகதயாளன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக