சனி, 10 ஜனவரி, 2015

பாகிஸ்தானிய அரசியல்வாதியான இம்ரான் கான் திருமணம்

பாகிஸ்­தா­னிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் அர­சியல்வாதி­யு­மான இம்ரான் கான் தனது காத­லி­யான ரெஹாம் கானை வியா­ழக்­கி­ழமை திரு­மணம் செய்­துள்ளார்.



இம்ரான்கானுக்கும் பிபிசி ஊட­கத்தின் முன்னாள் கால­நிலை செய்தி அறி­விப்­பா­ள­ரான ரெஹாம் கானுக்கும் இஸ்­லா­மா­பாத்­தி­லுள்ள இம்ரான் கானி­னது வீட்டில் இஸ்­லா­மிய சட்­டத்தின் கீழ் எளி­மை­யான முறையில் திரு­மணம் இடம்­பெற்­றது.

இந்த திரு­ம­ணத்தில் கலந்து கொள்­வ­தற்கு இம்ரான்கானின் குடும்ப உறுப்­பினர் எவ­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

ஏற்­க­னவே திரு­மணம் செய்து விவா­க­ரத்துப் பெற்ற ரெஹாம் கானுக்கு 3 பிள்­ளைகள் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த மாதம் பெஷாவர் நக­ரி­லுள்ள பாட­சா­லையில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த 132 சிறு­வர்கள் உட்­பட 145 பேரை கௌர­வப்­ப­டுத்தும் வகையில் தனது திரு­ம­ணத்தை இம்ரான் கான் எளி­மை­யாக நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

இம்ரான் கான் தனது முதல் மனைவி யிட­மி­ருந்து 2004 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றிருந்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல