சனி, 18 ஏப்ரல், 2015

சவூ­தியில் 4 வயது சிறு­வனை கொன்ற குற்­றச்­சாட்டில் இந்­தோ­னே­சிய பணி­ப்பெண்­ணுக்கு மர­ண­தண்­டனை

சவூதி அரே­பி­யாவில் இரு நாட்கள் இடை வெளியில் இரண்­டா­வது வீட்­டுப்­பணிப் பெண்­ணொ­ரு­வ­ருக்கு வியா­ழக்­கி­ழமை தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.



கர்னி பின்தி மெடி தார்ஸிம் (37 வயது) என்ற மேற்­படி பெண் 2012 ஆம் ஆண்டு யன்பு நகரில் தனது பரா­ம­ரிப்பின் கீழி­ருந்த 4 வயது சிறு­வனை கத்­தியால் குத்தி கொன்­ற­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

அவ­ருக்கு மேற்கு சவூதி அரே­பிய நகரில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
Siti Zainab Lubis

மேற்­படி மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­திற்கு இரு நாட்­க­ளுக்கு முன் தனது எஜ­மானரைக் கொன்ற குற்­றச்­சாட்டில் சிதி ஸெயினப் என்ற வீட்டுப் பணிப்­பெண்­ணுக்கு தலையை துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

எது­வித முன் னறி­விப்பும் இன்றி இடம் பெற்ற மேற்­படி இரு மர­ண­தண்டனை நிறை­வேற்­றங்கள் தொடர்­பிலும் ஆஜராகி விளக்கமளிக்க ஜகர்த்தாவிலுள்ள சவூதி அரேபிய தூதுவரை இந்தோனேசிய அரசாங் கம் கோரியுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல