சனி, 18 ஏப்ரல், 2015

ஒரே நாளில் இரு தாய்மாருக்கு ஆறு குழந்தைகள் பிரசவம்

மட்டு. வைத்தியசாலையில் சம்பவம்

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் ஒரே நாளில் இரு தாய்மார் ஆறு குழந்­தை­களை பிர­ச­வித்­துள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் மகப்­பேற்று வைத்­திய நிபுணர் டாக்டர் எம்.திருக்­குமார் தெரி­வித்தார்.



மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் வர­லாற்றில் ஒரே நாளில் இரு தாய்மார் ஆறு குழந்­தை­களை பிர­ச­வித்­துள்­ளனர்.

கிரானை சேர்ந்த டினோ­ரஞ்சி முத்­துக்­கி­ருஷ்ணன் என்ற தாய் மூன்று பிள்­ளை­க­ளையும் தன்­னா­மு­னையை சேர்ந்த மேகா­னந்தி சுதா­கரன் என்ற பெண் மூன்று குழந்­தை­க­ளையும் பிர­ச­வித்­துள்­ளனர்.

இந்த சிசுக்கள் போதனா வைத்­தி­ய­சா­லையின் சிசுக்கள் விசேட சிகிச்சை பிரிவு, சிசுக்கள் அதி­தீ­விர சிகிச்சை பிரி­வு­களில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஆறு குழந்­தை­களும் ஆரோக்­கி­ய­மான நிலையில் உள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் சிறு­பிள்ளை வைத்­திய நிபுணர் டாக்டர் திரு­மதி சித்­திரா கடம்­ப­நாதன் தெரி­வித்தார்.

இதே­வேளை குறித்த குழந்­தை­களை பிர­ச­வித்­த­வரில் ஒரு­வ­ரான தன்­னா­மு­னையை சேர்ந்த மேகா­னந்தி சுதா­க­ரனின் குடும்பம் மிகவும் வறு­மை­யான நிலையில் உள்­ளதால் அவ­ருக்கு உதவ பரோ­ப­கா­ரிகள் முன்­வ­ர­வேண்டும் என மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் மகப்­பேற்று வைத்­திய நிபுணர் டாக்டர் எம்.திருக்­குமார் தெரி­வித்தார்.

குறித்த தாயின் கண­வரும் பாரி­ச­வாத நோயினால் பீடிக்­கப்­பட்­டுள்­ள­தனால் குறித்த தாய் மூன்று பிள்­ளை­க­ளையும் வளர்ப்­ப­தற்கு மிகுந்த கஷ்­டத்­தினை எதிர்­நோக்கும் நிலை­யி­ருப்­ப­தனால் அவ­ருக்கு உதவ முன்­வ­ரு­மாறு கோரிக்கை விடுத்தார்.

குறித்த பெண் மிகவும் வறு­மை­யான நிலையில் இருப்­ப­தா­கவும் முடி­யு­மா­ன­வர்கள், புலம்­பெ­யர்ந்த மக்கள் உதவ முன்­வ­ர­வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

உதவ விரும்­பு­ப­வர்கள் மேகா­னந்தி சுதா­கரன், மேக­லா­தவர் வீதி, மைலம்­பா­வெளி,மட்­டக்­க­ளப்பு என்னும் விலாசத்துக்கு சென்று நேரடியாகவோ அல்லது மேகானந்தி சிதம்பரப்பிள்ளை, இலங்கை வங்கியின் செங்கலடி கிளை,வங்கி கணக்கிலக்கம் 2930242 என்ற கணக்கிலக்கம் மூலமோ உதவ முடியும்.

(பட்­டி­ருப்பு நிருபர்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல