சனி, 18 ஏப்ரல், 2015

இத்­தா­லியை நோக்­கிய சட்­ட­வி­ரோத பய­ணத்தின் போது குடி­யேற்­ற­வா­சி­க­ளி­டையே மத பிரி­வி­னை­வாத மோதல்

 Murders: A fight over religion broke out on a boat carrying 105 migrants from Libya, after which 12 men 'professing the Christian faith' were thrown to their deaths. Pictured: Migrants are transferred to holding centers after disembarking from in Augusta's port, near Siracusa, Sicily

12 கிறிஸ்­தவ பய­ணிகள் கடலில் தூக்கி வீசப்­பட்­டனர்

லிபி­யா­வி­லி­ருந்து இத்­தா­லியை நோக்கி அள­வுக்­க­தி­க­மான சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­க­ளுடன் பய­ணித்த துடுப்பு பட­கொன்­றி­லி­ருந்த 12 கிறிஸ்­தவ குடி­யேற்­ற­வா­சி­களை கடலில் தூக்கி வீசிய குற்­றச்­சாட்டில் அதே படகில் பயணம் செய்த 15 முஸ்லிம் குடி­யேற்­ற­வா­சிகளை கைது­செய்­துள்­ள­தாக இத்­தா­லிய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.



கடலில் வீசப்­பட்ட கானா மற்றும் நைஜீ­ரி­யாவைச் சேர்ந்­த­வர்கள் என நம்­பப்­படும் கிறிஸ்­த­வர்கள் அனை­வரும் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.

மத ரீதி­யான வெறுப்­பு­ணர் வால் தூண்­டப்­பட்டே அந்த குடி­யேற்­ற­வா­சிகள் கடலில் வீசப்­பட்­டுள்­ள­தாக பலெர்மோ பிராந்­திய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
Italian Red Cross operators give first aid to immigrants as they arrive in the Italian port of Messina  yesterday
படகுப் பய­ணத்தின் போது குறிப்­பிட்ட படகில் பய­ணித்த முஸ்லிம் குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கும் கிறிஸ்­தவ குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்­கு­மி­டையே வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­தா­கவும் இத­­னை­ய­டுத்து முஸ்லிம் குடி­யேற்­ற­வா­சிகள் கிறிஸ்­தவ குடி­யேற்­ற­வா­சி­களை தூக்கி கடலில் வீசி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

ஐரோப்­பிய நாடு­க­ளுக்குள் பிர­வே­சிக்கும் முக­மாக மத்­தி­ய­தரைக் கடலைக் கடந்து பய­ணத்தை மேற்­கொண்ட சுமார் 10,000 குடி­யேற்­ற­வா­சிகள் அண்மைய நாட்களில் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தக் குடியேற்றவாசிகள் தொடர்பான நெருக்கடியைக் கையாள்வ தற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை இத்தாலி நாடியுள்ளது.
 This week, Italian coastguards intercepted more than 42 boats attempting to make the crossing to Europe
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல