சனி, 18 ஏப்ரல், 2015

துருக்­கி­யி­லி­ருந்து இத்­தாலி செல்ல முற்­பட்ட யாழ்.இளைஞன் கைது

போலி விசாவை பயன்­ப­டுத்தி துருக்­கி­யி­லி­ருந்து தரை­வ­ழி­யூ­டாக இத்­தா­லிக்கு செல்­வ­தற்கு முயற்­சித்­த­தாக கூறப்­படும் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்­டுள்ள நிலையில் அவர் நேற்று வெள்­ளிக்­கி­ழமை கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.



யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த 28 வய­தான மேற்­படி இளைஞன் தமிழ்-, சிங்­கள புத்­தாண்டு தின­மான கடந்த 14ஆம் திகதி துருக்­கிக்கு சென்­றுள்ளார்.

துருக்கி விமான நிலை­யத்தில் நின்­றி­ருந்த இளைஞன் மீது சந்­தே­கம்­கொண்ட அந்­நாட்டு பாது­காப்பு அதி­கா­ரிகள் இளை­ஞ­னது விசாவை சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதன்­போது இளை­ஞ­னி­ட­மி­ருந்த விசா போலி­யா­னது என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. அத­னை­ய­டுத்தே குறித்த இளை­ஞனை இலங்­கைக்கு திருப்பி அனுப்­பி­யுள்­ளனர்.

சந்­தே­க­நபர், இந்­நாட்டில் இருக்­கின்ற இலங்கை பிரஜை ஒரு­வ­ருக்கு மூன்று இலட்சம் ரூபாவை கொடுத்து இத்­தா­லிக்கு செல்­வ­தற்­கான போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக வும் கூறப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல