சனி, 9 ஏப்ரல், 2016

யாழ் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி

வவுனியா, குருமன்காடுப் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம் நேற்று மாலை குருமன்காடு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்தள்ளார்.



45 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு உயிரிழந்த போதும், அவர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை.

இந் நிலையில் புகையிரதம் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டு இறந்தவரின் சடலம், புகையிரத்தில் ஏற்றி வவுனியா புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், புகையிரதம் யாழ்ப்பாணம் நோக்கி சென்றது.

இதேவேளை, இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில், சடலம் வவுனியா பொது வைத்தியாசலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

NewJaffna
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல