ஞாயிறு, 8 மே, 2016

குழந்­தை­க­ளுக்கு ஏன் இந்தக் குறை­பாடு..?

ஆரோக்­கி­ய­மான பெற்­றோ­ருக்கு குறை­பாட்­டுடன் குழந்தை பிறப்­ப­தையும், குறை­பா­டுள்ள பெற்­றோ­ருக்கு ஆரோக்­கி­ய­மான குழந்­தைகள் பிறப்­ப­தையும் பார்க்­கிறோம். இந்த விநோதம் ஏன் என்றால், ‘மர­ப­ணுக்கள் ஏற்­ப­டுத்தும் குழப்பம்’ என்­கிறார் சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்தின் மர­பணுத் துறைப் பேரா­சி­ரியர் சந்­திரா ஆர்.சாமுவேல்.


‘‘மனித உடலில் உள்ள ஒவ்­வொரு உயி­ர­ணு­விலும் 46 குரோ­மோ­சோம்கள் உள்­ளன. இவற்றில் 44 ஆட்­டோ­சோம்கள் எனவும் மீதம் உள்ள 2 குரோ­மோ­சோம்­களை பாலின குரோ­மோ­சோம்கள் எனவும் குறிப்­பி­டு­கிறோம். அதா­வது, 44 குரோ­மோ­சோம்­க­ளுடன் XY இருந்தால் அது ஆண் குழந்­தை­யா­கவும், XX இருந்தால் பெண் குழந்­தை­யா­கவும் பிறக்கும்.

இந்த எண்­ணிக்­கையில் ஏதேனும் மாற்றம் ஏற்­ப­டும்­போ­துதான் குழந்­தைகள் குறை­பாட்­டுடன் பிறக்­கின்­றன. உதா­ர­ண­மாக, குரோ­மோசோம் 21இல் இரண்­டுக்குப் பதி­லாக மூன்­றாக இருந்தால் குழந்­தையின் மூளை வளர்ச்சி பாதிக்­கப்­படும். இதையே `டவுன் சிண்ட்ரோம்’ என்­கிறோம்.

குரோ­மோசோம் 18இல் இரண்­டுக்குப் பதி­லாக மூன்று இருந்தால் அதை `எட்வர்ட் சிண்ட்ரோம்’ என்று குறிப்­பி­டு­வார்கள். இவர்­க­ளிடம் அறி­வு­சார்ந்த குறை­பாடு மற்றும் உடல் உறுப்­புகள் வளர்ச்சி குன்­றிய நிலை காணப்­படும். குரோ­மோ­சோம்கள் எண்­ணிக்­கையின் மாற்றம் கார­ண­மாக மட்­டு­மல்ல...

குரோ­மோ­சோம்­களின் அமைப்பில் உள்ள மாற்றம் கார­ண­மா­கவும் பாதிப்­புகள் ஏற்­ப­டலாம்’’ என்­கிறார் சந்­திரா.

மர­பணு குறை­பா­டு­களால் குழந்­தைகள் பாதிக்­கப்­ப­டாமல் முன்­னரே கண்­டு­பி­டிக்க முடி­யாதா? என மர­பணுத் துறையின் பேரா­சி­ரி­யை­யான ஸ்ரீகு­மாரி சைல­ப­தி­யிடம் கேட்டோம்.‘‘பிற­வி­யி­லேயே கேட்கும் திறன் இல்­லாத குழந்­தை­க­ளுக்குப் பேசும் ஆற்­றலும் இருக்­காது. இந்த குறை­பாடு 50 சத­வி­கிதம் மர­பியல் கார­ண­மா­கவும் 50 சத­வி­கிதம் சுற்­றுச்­சூழல் கார­ண­மா­கவும் ஏற்­ப­டு­கி­றது. காது கேளா­மைக்கு மட்டும் இது­வரை நூற்­றுக்கும் மேற்­பட்ட மர­ப­ணுக்கள் காரணம் என ஆராய்ச்­சிகள் தெரி­விக்­கின்­றன.

இது பற்­றிய ஆராய்ச்­சியை எங்கள் குழு கடந்த 10 வரு­டங்­க­ளாக மேற்­கொண்டு வரு­கி­றது. இந்த பரி­சோ­தனை மூலம் அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு ஏற்­படும் மர­பணு மாற்­றங்­களைக் கணிக்க முடியும். பிரச்சினை இருந்தால் தீர்வும் இருக்கும் என்­பது பொது­வான விதி. மர­ப­ணுக்கள் கார­ண­மாக பல பிரச்சி­னைகள் இருந்­தாலும் அவற்றை முன்­னரே கண்­ட­றியும் பரி­சோ­தனை முறை­களும் உள்­ளன.

இவற்றில், Karyotyping Test முக்­கி­ய­மா­ன­தாகும். குழந்தை கருவில் இருக்கும் 10ஆவது வாரத்தில் அல்­லது 16ஆவது வாரத்தில் தாயின் பனிக்­கு­டத்தில் இருந்து சிறி­த­ளவு நீரை எடுத்து பரி­சோ­திக்கும் முறை இது.

இந்தப் பரி­சோ­தனை மூலம் குரோ­மோ­சோம்­களின் மாற்­றத்தைக் கண்­ட­றிந்து, குழந்தை குறை­பாட்­டுடன் பிறப்­பதைத் தவிர்க்­கலாம்’’ என்று நம்­பிக்கை தரு­கிறார் ஸ்ரீகு­மாரி. குறை­பா­டுள்ள குழந்­தைகள் பிறப்­பதைத் தடுக்க சில எளிய வழி­மு­றை­களை முன்­வைக்­கிறார் சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்தின் மர­ப­ணுத்­துறைத் தலைவர் டாக்டர் மாலதி. ‘‘வய­தா­ன­வர்­க­ளுக்கு ஏற்­ப­டு­கிற புற்­றுநோய், கண்­புரை, இதய நோய்கள் போன்­றவை மர­பணு குறை­பாடு கார­ண­மாக குழந்­தைப்­ப­ரு­வத்­தி­லேயே வரு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன. இதைத் தவிர்க்க சொந்­தத்தில் திரு­மணம் செய்து கொள்­வதைத் தவிர்க்க வேண்டும். தாம­த­மாகத் திரு­மணம் செய்­வ­தையும் தவிர்ப்­பது நல்­லது.

35 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்கிற பெண்களுக்கு டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். முக்கியமாக, முதல் குழந்தைக்கு பாதிப்பு இருந்தால் இரண்டாவது குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே Karyotyping test மூலம் பரிசோதித்துக் கொள்வது அவசியம்’’ என்கிறார் மாலதி.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல