தலைவலி குணமடைய திருகுவலி ஆரம்பித்தது போன்று வடபகுதி நிலைமைகள் அமைந்துள்ளன. இதனால் மக்கள் சதா அச்சத்தில் உறைந்து போயுள்ளதை காணமுடிகின்றது. இரவு வேளைகளில் திருடர்களின் அட்டகாசமும், இளைஞர் குழுக்களிடையேயான வாள்வெட்டு சம்பவங்களும் வடக்கில் தோன்றியிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கும் பதற்றத்துக்குமான முக்கிய காரணமாகும். வடபகுதியை பொறுத்தமட்டில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகள் குறைந்துள்ளதே தவிர அவர்களின் செயற்பாடுகள் எந்தவகையிலும் குறைவடையவில்லை. இருந்தபோதிலும் இவை அனைத்தையும் மீறி கொள்ளைகளும், வாள்வெட்டுக்களும் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக இந்த வாள்வெட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இளைஞர் குழுக்கள் மற்றும் பாடசாலை உயர் வகுப்பு மாணவர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. இளைஞர்கள் மத்தியில் சிறிதாக உருவெடுக்கும் மோதல்கள், சச்சரவுகள் இறுதியில் வாள்வெட்டில் முடிகின்றன. இதனால் பெற்றோர்கள் சதா மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை, பாதுகாப்பற்ற சூழலும் அச்சமும் மேலோங்கியிருப்பதை சர்வசாதாரணமாகக் காணக்கூடியதாக உள்ளது. இளைஞர் குழுக்கள் பகல்வேளைகளில் மாத்திரமன்றி இரவு வேளைகளிலும் வீடுகளை அடித்து நொறுக்கி உடைமைகளுக்கு சேதம் விளைவித்து பழி தீர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
வடபகுதி கலாசாரம், காலத்துக்கு காலம் எவ்வாறு மோசமடைந்து சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றது என்பதற்கு அங்கு உருவாகியிருக்கும் இத்தகைய சமூக விரோத செயல்களே சாட்சியங்களாக உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியில் வைத்து இனந்தெரியாத இருவர், இரண்டு இளைஞர்களை வாளால் வெட்டி கடும் காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைவதற்கு இந்த இனந்தெரியாத நபர்கள் முயற்சித்த போதிலும் அது முடியாது போனதையடுத்து அந்த வீதியால் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி மீதும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீதும் வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பிரதேசத்தில் மிகுந்த பதற்ற நிலைமை தோன்றியது.
யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள குறித்த பிரதேசத்தில் இவ்வாறு வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பாதுகாப்புக்கு பாரிய சவால் என்பதை பொலிஸார் மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் உணர்ந்துகொள்வது அவசியமாகும். இவ்வாறு அண்மையில் யாழ். நாயன் மார்க்கட்டு பகுதியில் வீடொன்றில் கொள்ளையிட முயன்றவர்களைத் தடுக்க முயன்ற இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முயற்சி முறியடிக்கப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், வீதியில் பயணித்தவர்களைத் தாக்கியும் அவர்களின் உடைமைகளை பறித்தும் சென்றுள்ளனர்.
மேலும், வவுனியா புளியங்குளம் பிள்ளையார் குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் புகுந்த சிலர் குறித்த நபரை சரமாரியாக வாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சையின் பொருட்டு கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அண்மையில் மல்லாகம் நீதிமன்றுக்கு வழக்கு விடயமாக வந்த இளைஞர்கள் இருவர் அதை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வழியில, வீதியில் காத்திருந்த இனந்தெரியாத நபர்களினால் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைய நேரிட்டுள்ளது.
சுதுமலை மானிப்பாயைச் சேர்ந்த மேற்படி இரு இளைஞர்களும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று உடுவில் பகுதியில் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் ஒருவரை மோட்டார் சைக்கிள் மற்றும் வானில் வந்த 7 பேர் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். கதறல் சத்தம் கேட்டு உதவ ஓடிவந்த அயல்வீட்டுக்காரர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இச்சம்பவம் உடுவில் கிழக்கு நாகம்மாள் கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ். தட்டாரத்தெருவில் இடம்பெற்ற சம்பவமொன்றில் அப்பகுதியில் அமைந்துள்ள மரக்காலையொன்றில் நின்ற இளைஞனை மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் சகிதம் வந்த இளைஞர் குழுவினால் நடு வீதியில் வைத்து கலைத்து கலைத்து வெட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், வாள்வெட்டில் சம்பந்தப்பட்ட யாழ். கலட்டி மற்றும் உயர்குலம் ஒழுங்கையைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு மிகக்குறுகிய காலத்தில் வடபகுதியில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைகள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் அண்மையில் தென்பகுதியிலிருந்து யாழ். வந்த பஸ்வண்டியொன்றும் இனந்தெரியாதவர்களினால் தாக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடபகுதியில் யுத்தம் நிலவிய காலகட்டத்தில் குண்டுத் தாக்குதல்கள், ஷெல் வீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் தொடர்பில் மக்களுக்கு அச்சம் மேலோங்கியிருந்ததே தவிர எந்தவிதமான சட்டவிரோத செயல்களும் வாள்வெட்டுக்களும் கொள்ளைச் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதும் இரவுப்பொழுதில் பெண்ணொருவர் தனித்துச் செல்லக்கூடிய அளவுக்கு நிலைமை பாதுகாப்புடன் கட்டுக்கடங்கி இருந்தமையும் மறுக்கமுடியாத உண்மையாகும். இரவு வேளைகளில் மக்கள் வீட்டை பூட்டாமலேயே உறங்கக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. எனினும் யுத்தம் முடிவுக்கு வந்து அதிலிருந்தும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட எத்தனிக்கையில் தற்பொழுது தோன்றியிருக்கும் நிலை வடபகுதி மக்களை சொல்லொணா துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இரவுப்பொழுதில் எந்த சந்தர்ப்பத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற ஓர் பீதி நிறைந்த சூழலே எங்கும் வியாபித்துள்ளது. இவ்வாறான சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் யாழ்.மேல்நீதிமன்ற நீதவான் எம்.இளஞ்செழியன் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதுடன் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். அத்துடன் பாடசாலை மாணவர்கள் இவ்வாறான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் சட்டத்தின் முன் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார். எவ்வாறு இருந்தபோதிலும் வடக்கில் தோன்றியிருக்கும் சமூக விரோத செயல்களும் கலாசார சீரழிவுகளும் வடபகுதி மக்களையும், புத்திஜீவிகளையும் வெகுவாகப் பாதித்துள்ளன. இதனை எவ்வாறு தடுத்தி நிறுத்தி இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்தலாம் என்பதே அவர்களின் ஏக்கமாகவும் காணப்படுகின்றது.
வெளிநாடுகளிலிருந்து உறவினர்களினால் அனுப்பிவைக்கப் படும் பணமும் திரைப்படங்களின் தாக்கமும் மூலைக்கு மூலை வடக்கில் தோன்றியிருக்கும் மதுபானசாலைகளும் போதைவஸ்துப் பாவனையும் வடபகுதி இளைஞர்களின் மனோநிலையை மோசமாக மாற்றியமைத்து, அவர்களை நவீன உலகின் காட்டுமிராண்டிகளாக மாற்றிவருவதாகப் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய நிலை மாறவேண்டுமானால் பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், நலன்விரும்பிகள் மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் ஒருமித்த நிலையில் சமூகவிரோத செயல்களை ஒடுக்க திடசங்கற்பம் பூணவேண்டும்.
அன்றேல் அரசாங்கம் கூறும் பயங்கரவாதத்தை விடவும் மிகவும் மோசமான நிலைமை வடக்கில் உருவாவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாத நிலைமைகளே மிஞ்சும் என்பதை மீண்டும் அழுத்தி உரைக்க விரும்புகின்றோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக