ஒவ்வொரு பெண்ணும் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயாகும் போது அக்குழந்தையைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் பல்வேறு கற்பனைகளையும் ஆசைகளையும் வளர்த்துக் கொள்கிறாள். அந்தக்குழந்தை ஒரு ஆரோக்கியசாலியாகவும் புத்திசாலியாகவும் வளருவதையே எந்தவொரு தாயும் விரும்புகிறாள்.
எந்தக் குழந்தைக்கும் முதல் உணவு தாய்ப்பால் ஆகும். இது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல போசணைப் பொருட்களையும் சரியான அளவில் வழங்கும்.
தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்கும் குழந்தைகள் நன்கு வளர்வார்கள்.
முதல் பால்
குழந்தை பிறந்து ஒரு மணித்தியாலத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கலாம். பிரசவத்திற்குப் பின் தொடக்க நாட்கள் சிலவற்றிற்கு சுரக்கும் பால் முதல் பால் ஆகும். இலேசான மஞ்சள் நிற ஒட்டும் தன்மையுள்ள திரவமாகும். இது சகல பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டிய உணவாகும்.
* பிள்ளைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச்சக்தியை வழங்கி நோயிலிருந்து பாதுகாப்புப் பெற உதவுகிறது.
* பிள்ளையின் உடல் உறுப்புக்களின் விருத்திக்கு உதவுகின்றது.
* பிள்ளை மஞ்சள் நிறமாவதைத்தடுக்க உதவுகின்றது.
* ஒவ்வாமை அஜீரணம் என்பனவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
* கண் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
தாய்ப்பால் கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
பிள்ளை பால் உறிஞ்சும் போது பால் சுரப்பு ஆரம்பமாகின்றது. பால் வெளியேறும் அளவுக்கேற்ப பால் சுரப்பும் இருக்கும். ஆகையால் அடிக்கடி குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது பால் சுரப்பு அதிகரிக்கும். இரவிலும் பால் கொடுக்க வேண்டும். பால் கொடுக்கும்போது வசதியாக அமர்ந்து ஒரே முலையில் பால் கொடுப்பது சிறந்தது.
அடுத்த முறை பால் கொடுக்கும்போது மற்றைய முலையில் பால் கொடுக்க தொடங்க வேண்டும்.
தொடக்கத்தில் முலையிலிருந்து வெளியேறும் பாலில் நீர்த்தன்மை அதிகமுள்ளதால் பிள்ளையின் தாகம் தீர்க்கப்படும். பின்னைய பாலில் கொழுப்பு அதிகமுள்ளதால் பிள்ளை நன்கு வளர அது உதவுகின்றது.
(சரியான முறையில் பிள்ளைக்கு பால் கிடைப்பதை அது விழுங்கும் முறையிலும் சத்தத்திலும் கன்னங்கள் உப்புவதாலும் அறிந்து கொள்ளலாம்)
* போதுமான அளவு பால் கிடைக்கும்போது பிள்ளைகள் நாளொன்றுக்கு 6--7 தடவைகளுக்கு மேல் சிறுநீர் கழிப்பர். நாளொன்றிற்கு சிறு நீர் கழிக்கும் தடவைகளை கணக்கிடலாம். இதன் மூலம் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் இருப்பதை உறுதி செய்யலாம்.
* தாய்ப்பால் கொடுக்க முன்னர் தாய் சூடான பானமொன்று அருந்துதல் சிறந்தது. வேலைக்குச் செல்லும் தாய்மார் அல்லது பிள்ளையை விட்டு வெளியில் செல்ல வேண்டி ஏற்படும்போது முலையிலிருந்து பாலை எடுத்து அதை கரண்டியிலோ அல்லது கோப்பையிலோ பிள்ளைக்கு பருக்கலாம். எனவே தாய்மார் பாலை கறக்கும் முறை, பருக்கும் முறை மற்றும் அதை பாத்திரத்தில் இட்டு குளிர்சாதனப்பெட்டியில் சேமிக்கும் முறை என்பவற்றை அறிந்திருத்தல் அவசியம்.
ஒரு பக்க முலை வெறுமையாகும் வரை அதிலிருந்து பாலை எடுத்த பின் மற்றைய முலையிலிருந்து பாலை எடுக்கவும். அறை வெப்ப நிலையில் 6 மணித்தியாலமும் குளிர்சாதனப்பெட்டியின் கீழ் தட்டில் 24 மணித்தியாலமும் பால் பழுதடையாது பாதுகாக்கலாம்.
தாய் வேலைக்குப்போன பின் வேலை ஸ்தானத்தில் 3 மணித்தியாலத்திற்கு ஒரு முறை முலையிலிருந்து பாலை வெளியகற்றுவதன் மூலம் முலையில் பால் இறுக்கமடைவதைத்தவிர்ப்பதுடன் பால் சுரப்பையும் தொடர்ச்சியாகப் பேணலாம்.
பிள்ளைக்குப்பால் கொடுக்கும் முறை
பால் குடித்த பின் பிள்ளைக்கு வாயு வெளியேற்றல் மற்றும் நித்திரையாக்கும் முறை என்பனவற்றை அதற்கென சிறப்புப்பயிற்சி பெற்ற தாதியரிடம் உங்கள் பிரசவம் நடைபெற்ற பின் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தை பிறந்து ஆறு மாதம் முடியும்வரை தனித்தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது. ஆனால் குழந்தைக்கு தேவையான அளவு பால் கிடைக்காதவிடத்து தற்போது வைத்திய ஆலோசனையுடன் ஏனைய முறைகளில் (போத்தல்) பாலூட்டல் அறிவுறுத்தப்படுகின்றது.குழந்தைக்குத் தேவைப்படும் ஒவ்வொரு முறையும் பால் கொடுப்பது சிறந்தது. குழந்தையின் பசியை சைகை மூலம் அறிந்து அது அழும்வரை காத்திருக்காமல் பால் கொடுப்பது சிறந்தது.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப்புற்று நோய் சூலகப்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறையும்.
* பிரசவத்திற்கு பின் தாயின் உடல் நிறை குறைவடைதல்
* தாய்க்கும் பிள்ளைக்குமான ஒட்டுறவு அதிகரிக்கும் தாய்க்கு உளரீதியான ஆறுதல் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக