புங்குடுதீவு, வித்தியா என்ற மாணவி கூட்டு வன்புணர்வில் படுகொலை செய்யப் பட்டு ஒரு வருடத்தை அண்மித்த நிலையி லும் விசாரணைகள் இன்றுவரை தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.
அரசியல்வாதிகளினதும், மாற்று சக்திகளினதும் துண்டுதல்களால் மாத்திரமே போராட முயற்சித்த எமது சமூகம் இந்தக் கொடூர படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து இனம், மதம் பாராமல் நாடளாவிய ரீதியில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டங்களையும் கண்டன ஊர்வலங்களையும் முன்னெடுத்திருந்தது.
படுகொலை அரங்கேறி சில நாட்கள் கடந்த நிலையில் "வித்தியாவிற்கு நீதி வழங்கு" எனக்கோரி பல்லாயிரக் கணக்கானோர் வீதியில் குதித்தனர்.
இவ்வாறு நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மக்கள் வித்தியாவின் கொலைக்கு நீதிகோரியும் மீண்டும் அவ்வாறு வன்புணர் வுக் கொலைகள் அரங்கேறாமல் தவிர்க்க நீதித்துறை உச்சபட்ச தண்டனையை வித்தி யாவின் படுகொலையாளிகளுக்கு வழங்க வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவி வித்தியா?
புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரம் வல்லன் பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் என்பவரின் மகளே வித்தியா. வித்தியாவிற்கு இரண்டு சகோதரர்கள்.
இவர் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். வித்தியாவை யாழிலுள்ள பாடசாலையில் சேர்ப்பதற்கு தாய் விரும்பியபோதும் படிப்பி லும் பண்பிலும் சிறப்பாக விளங்கிய வித்தியாவை குறித்த பாடசாலைச் சமூகம் இழக்க விரும்பாததால் அதிபரின் வேண்டுகோளு க்கு அமைய தொடர்ந்து அங்கேயே உயர்தரத்தையும் கற்று வந்தார்.
வித்தியாவின் எதிர்கால இலட்சியம் சிறந்த ஊடகவியலாளராக உருவாகி மக்களுக்கு சேவையாற்றுவதாகும். இதற்காக அவள் தன்னை பல்துறைகளிலும் வளர்த்துக் கொண்டுள்ளாள்.எதிர்கால இலட்சிய நோக்கத்தோடு சமூகத்தில் மிளிரவிருந்த வித்தியாவை காமுகர்கள் வேட்டையாடி சிதைத்தனர்.
வித்தியாவுக்கு நடந்தது என்ன?
கடந்த ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் வழமை போலவே "அம்மா நான் பள்ளிக்கூடம் போட்டுவாறன்" என வித்தியா தனது தாயிடம் கூறிவிட்டு தான் செல்லமாக வளர்க்கும் நாயின் தலை யில் கைகளால் தடவிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டாள்.
காலையில் வீட்டைவிட்டு சென்ற மகள் மாலையாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தாரிடையே பயம் பற்றிக் கொண்டது. நாளிகைகள் கடக்கக் கடக்க வித்தியாவைத் தேடி தாயொரு பக்கமும் தமையன் ஒரு பக்கமுமாக தேட ஆரம்பித்தனர். எனினும் வித்தியா அவர்களின் கண்களில் தென்படவில்லை. இதனையடுத்து தாயும் தமையனும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதியச் சென்றிருந்தனர்.
அங்கிருந்த பொலிஸாரிடம் தனது மகளான வித்தியாவை காணவில்லை என கூற 'உங்கள் மகள் காதலனோடு சென்றிருப்பார்' என பொலிஸாரிடமிருந்து ஏளனமாக பதில் கிடைத்தது.
பொலிஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்ப நேரமானதால் மறுநாள் அதிகாலை மீண்டும் மகளை தேடுவதில் தாய், தமையன் ஈடுபட்டனர். இவ்வாறு தமையன் தேடிச்செல்லும் போது புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் இருந்து செல்லும் சிறு வீதியொன்றின் (கண்ணகி அம்மன் கோவில்) பகுதிக்கு ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஆள் நடமாற்றம் அற்ற பற்றைப் பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டின் பின்புறம் இருந்து சப்பாத்து ஒன்றை வித்தியாவினால் செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் எடுத்து வந்துள்ளது.
இதனை அவதானித்த வித்தியாவின் தமையன் நாயைப் பின் தொடர்ந்து அப் பகுதியை சென்று பார்த்துள்ளார். இதன்போது ஆடைகள் களையப்பட்ட நிலையில் கைகள் இரண்டும் கழுத்துப் பட்டியால் இழுத்து கட்டப்பட்டு கால்கள் இரண்டும் இடுப்பு பட்டி யால் அருகில் இருந்த மரங்களோடு கட்டப்பட்டு வாய்க்குள் துணிகள் அடைக்கப்பட்ட நிலையில் வித்தியா சடலமாக காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் கைது
மாணவி வித்தியா படுகொலை என்ற செய்தி காட்டுத் தீ போல் எங்கும் பரவ சட லம் இருக்கும் இடத்திற்கு விரைந்தனர் பொ லிஸார். இதன்போது தடயங்களை அழிக்கும் வகையில் மழையும் பெய்துகொண்டிருந்தது.
பொலிஸாரின் தடயவியல் நிபுணர்கள் சான்றுப் பொருட்களை எடுத்ததன்
பின்னர் வித்தியாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சடலத்தின் நிலை கண்டு வன்புணர்வு என ஊகித்துக் கொண்ட பொலிஸார் காமுகர்களைக் கண்டு பிடிப்பதற்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதற்கமைய சடலம் மீட்கப்பட்ட 14ஆம் திகதியான அன்றைய தினம் மாலை வித்தி யாவின் தாயார் வழங்கிய தகவலின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் இருவர் என மொத்தமாக மூவர் குறித்த தினம் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்களாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் குறித்த மூவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படை யில் சடலம் மீட்கப்பட்டு ௩ நாட்கள் கடந்த நிலையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட் டனர்.
இவ்வாறு பொலிஸார் தேடுதல் வேட்டையை மேற்கொண்டிருக்க, அப்பகுதி மக்கள் ஒரு நபர் மீது சந்தேகம் கொண்டு அவரை கட்டி வைத்துத் தாக்கியிருந்தனர். அவ்வாறு கட்டி வைத்துத் தாக்கப்பட்டவர் சுவிஸ் குமார் என அழைக்கப்படும் ராஜசிங்கம் சசிக்குமார் என்பவர் ஆவார். இவர்
பின்னாளில் வித்தியா படுகொலை வழக் கின் ஒன்பதாவது சந்தேக நபராக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படுகொலையால் ஏற்பட்ட அதிர்வலைகள்
வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்ப வம் குடாநாடு முழுவதும் பரவியது. இந்நிலையில் யாருடைய தூண்டுதல்களும் இன்றி சுயமாக ஒன்று திரண்ட மக்கள் கண்ட ஆர்ப்பாட்டத்தை யாழ். நகரில் முன்னெடுத்தனர். இதில் கலந்து கொள்ள யாழ். மாவட்டத்தில் அனைத்துப் பகுதியிலிருந்தும் மக்கள் திரண்டு வந்தனர்.
கண்டனத்தில் ஈடுபட்டவரின் கோஷங்களாக, படுகொலையாளிகளை எம் முன்னே நிறுத்து நாம் அவர்களுக்கு தண்டனை வழங்குகின்றோம், விரைவில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குங்கள், மீண்டும் இத்தகைய குற்றங்கள் அரங்கேறுவது, தடுத்து நிறுத்தப்படவேண்டும் என காணப்பட்டிருந்தன. இவ்வாறு நீதிகோரிய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இன, மத, மொழி பாராமல் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் ஒன்று திரண்ட மக்கள் வித்தியா என்ற மாணவிக்கு நீதி வழங்குங்கள் என ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, யாழ். நகரில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது யாழ். நீதிமன்ற கட்டட தொகுதி தாக்கப்பட்டதுடன் பொலிஸார் மீதும் இளைஞர் குழு ஒன்றி னால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத் தாக்குதலில் 4 பொலிஸார் காயமடைந்திருந்ததுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், குறித்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் 127 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பல மாதங்களின் பின்னர் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வித்தியா படுகொலையில் அதிர்ச்சி நாடளாவிய ரீதியில் பேசப்பட, நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழிற்கு விஜயம் மேற்கொண்டு வித்தியாவின் குடு ம்பத்தாரை சந்தித்து அனுதாபம் தெரிவித் திருந்தார். இதன்போது குற்றவாளிகளுக்கு விஷேட நீதிமன்றம் அமைத்து அதனூடாக தீர்ப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக நாட்டின் பிரதம நீதியரசர், சட்டமா அதிபர் ஆகியோரும் யாழ்ப்பாணத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடரும் வழக்கு விசாரணையும் அதன் திருப்பங்களும்
வித்தியா படுகொலை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஊர்காவற்துறை பொலிஸாரிடமிருந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, இவ் வழக்கு தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படுகொலை தொடர்பில் ஆதாரங் களை சேகரிக்கும் பொருட்டு கொலை நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட சான் றுப் பொருட்கள் விசாரணைகளை மேற் கொள்வதற்காக ஜின்ரெக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் வழக்கில் சில திருப்பங்களும் ஏற்பட்டன.
இதன்படி குறித்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் பத்தாவது சந்தேக நபராக கடந்த நவம்பர் மாதமளவில் யாழ்ப்பாணம் சுழிபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் வித்தியாவின் வீட்டிற்கு அண்மையிலுள்ள குளமொன்று திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் இவரிடம் வித்தியாவின் புகைப்படங்கள் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான சில தகவல்கள் இருந்தன என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பத்து சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் தலைமையில் இடம்பெற்று வந்த நிலையில் அவரின் இடமாற்றத்தின் காரணமாக இவ் வருடம் ஜனவரி மாதத்திலிருந்து இவ் வழக்கானது நீதிவான் வை.எம்.எம்.றியால் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த வழக்கு விசாரணை நீண்டு செல்வதால் நீதிமன்ற செயற்பாட்டில் மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளதால் அதனை தவிர்க்கும் வகையில் குறித்த வழக்கு தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவிக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இவ் உத்தரவையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் கடந்த மூன்றாம் மாதம் நான்காம் திகதியன்று முதற்கட்ட விசாரணை அறிக்கையொன்றை சமர்பித்திருந்தனர். அந்த அறிக்கையில் வித்தியாவின் படுகொலைக்கு ஒரு தலைக் காதலும் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணமுமே காரணம் எனவும் இப்படுகொலைத் திட்டத்திற்கு பிரதான சூத்திரதாரியாக ஒன்பதாவது சந்தேக நபரான சசிக்குமார் (சுவிஸ்குமார்) விளங்கியிருந்ததுடன், அவருக்கு உடந்தையாக ஆறு சந்தேக நபர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இருப்பதாகவும் அவரே இச் செயலை செய்தவர்களுக்கு போதைப் பொருட்களை பெற்றுக்கொடுத்தவர் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் போது மன்றில் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பதினொராவது நபர் உட்பட மேலும் ஒரு நபர் தொடர்பு பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டில் மொத்தமாக பன்னிரண்டு சந்தேக நபர்கள் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த வழக்கு விசாரணையில் சந்தேக நபர்களில் ஒன்பதாவது சந்தேக நபரான சசிக்குமார் எவ்வாறு தப்பித்து சென்றார் என்பது தொடர்பில் விசாரணை அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு நீதிவான் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குற்றப்புலனாய்வு அதிகாரி நீதிவான் குறிப்பிடாத ஒருவரது பெயரை குறிப்பிட்டு அவரை நீதிவான் கைது செய்ய உத்தவிட்டதாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கூறியுள்ளார். இதனால் மறு வழக்கு தவணையின் போது கூறித்த குற்றப்புலனாய்வு அதிகாரியை நீதிவான் மிகக் கடுமையாக எச்சரித்ததுடன், நீதிமன்ற விடயங்கள் தொடர்பில் கவனமாக செயற்பட வேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்தியிருந்தார்.
படுகொலை சம்பவம் தொடர்பாக சமர்பிக்கப்படாத அறிக்கைள்
கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒருவருட காலமாக நீதிமன் றில் இடம்பெற்று வருகின்ற போதும் வழக் கிற்கு ஆதாரமாக குற்றப்புலனாய்வு பிரி வால் சேகரிக்கப்பட்ட தடயங்கள் தொடர் பான அறிக்கைகள் எதுவும் மன்றில் சமர்பிக் கப்படவில்லை.
குறிப்பாக, வித்தியாவின் சடலம் இருந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட இரத்த கறையுடனான உள்ளாடை தொடர்பான விசாரணை அறிக்கை, ஜின்ரெக் நிறுவனத் திடம் ஒப்படைக்கப்பட்ட வித்தியாவின் கண்ணில் இருந்து பெறப்பட்ட விந்தணு தொடர்பான அறிக்கை, சட்ட வைத்திய அதிகாரியினுடைய உடற்கூட்டு பரிசோதனை அறிக்கை, சடலம் மீட்கப்பட்ட இடத்திலி ருந்து பெறப்பட்ட ஏனைய தடயங்கள் தொட ர்பான அறிக்கை, வித்தியாவின் தாயிடம் பெறப்பட்ட இரத்த மாதிரி தொடர்பான அறி க்கை போன்ற அறிக்கைகள் எதுவும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.
இந்நிலையில் வித்தியாவின் மரபணு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜின்ரெக் நிறுவன அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டிருந்ததற்கமைய அந் நிறுவன அதிகாரி, மரபணு அறிக்கை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான பண த்தை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமக்கு தரவில்லையெனவும் அதன் காரணமாகவே அறிக்கை சமர்பிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கடிதம் மூலம் நீதிவானுக்கு தெரியப்படுத்தியிருந்தார். அத்துடன் பணத்தை செலுத்துகின்ற போது மரபணு அறிக்கை எதிர்வரும் வழக்கு தவணையில் மன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தினூடாக நீதிபதிக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, குறித்த மாணவியின் படுகொலை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒருவருட காலமாக நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவர்களை நீதிவான் நீதிமன்றில் தடுத்து வைத்திருப்பதற்கு மேல் நீதிமன்றின் அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது.
இது தொடர்பாக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றில் விஷேட மனு ஒன்றை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இக்காலத்தை நீடிப்பது தொடர்பாக விசாரணையினை மேற் கொள்வதற்காக சந்தேக நபர்களில் முதல் ஒன்பது பேரை எதிர்வரும் புதன் கிழமையன்று யாழ். மேல் நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிபதி பணித்துள்ளார். இதேவேளை, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு முடிவுறும் தறுவாயில் பிணைச் சட்டத்தின் 17ஆவது உறுப்புரையின் பிரகாரம் விளக்கமறியல் காலத்தை மேலும் நீடிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதிகரித்து செல்கிறது பாலியல் வன்புணர்வுகள்
வித்தியா படுகொலை அரங்கேறியதன் விளைவு நாட்டில் பாரிய அதிர்வலையை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்த அதிர்வலையின் வடுக்கள் காயமுன்னர் மீண்டும் பல வன்புணர்வுச் சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றன. குறிப்பாக தென்பகுதியைச் சேர்ந்த சேயா என்ற சிறுமி ஒருவர் காமுகனால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தாள். தொடர்சியாக இந்த வருட ஆரம்பத்தில் வவுனியாவைச் சேர்ந்த 13 வயதான ஹரிஸ்ணவி என்ற மாணவி வீட்டில் இருக்கும்போது மர்மான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவ் இரு சம்பவங்களும் வித்தியாவின் படுகொலைக்கு பின்னர் இடம்பெற்ற பாரிய சம்பவங்களாக காணப்பட்டதுடன் இதில் சேயா கொலை தொடர்பான குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தபோதும் வித்தியா, ஹரிஸ்ணவி ஆகிய மாணவிகளின் படுகொலைக்கான விசாரணைகள் இன்று வரை தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
இதேவேளை, பெண்கள், சிறுவர்களுக் எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங் கள் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றன. நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பில் வெளியான தகவலுக்கமைய கடந்த 2007ஆம் ஆண்டு ஆயிரத்து 397 சம்பவங்களும், 2008 ஆம் ஆண்டு ஆயிரத்து 582 சம்பவங்களும், 2009 ஆம் ஆண்டு ஆயிரத்து 624 சம்பவங்களும், 2010 ஆம் ஆண்டு ஆயிரத்து 854 சம்பவங்களும், 2011ஆம் ஆண்டு ஆயிரத்து 871 சம்பவங்களும், 2012 ஆம் ஆண்டு ஆயிரத்து 463 சம்பவங்களும் 2014ஆம் ஆண்டு ௨ ஆயிரத்து 8 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதே போன்று 2015ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஆயிரத்து 854 பாலியல் வன்புணர்வு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் 18 வயதுக்கு குறைந்தவர்கள் மீதே மேற்கொள் ளப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு 90 நிமிடத் திற்கும் ஒருவர் என்ற வீதத்தில் பாலியல் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவற்றில் பெரும்பாலானவை உறவு முறை சார்ந்தவர்களாலேயே இடம்பெறுவதாகவும் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015 ஆம் ஆண்டு பதிவாகியுள்ள ஆயிர த்து 854 சம்பவங்களில் ஆயிரத்து 501 சம்ப வங்கள் சிறுமிகள் மீதான துஷ்பிரயோகங்களாகும். இதேவேளை கடந்த மாதம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ்.மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா. யாழ். மாவட்டம் உட்பட வடக்கில் இரண்டு நாட்களுக்கு ஒருவர் வீதம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
1995ஆம் ஆண்டு தண்டனை சட்டக் கோவையின் திருத்தத்தின் பிரகாரம் 16 வய தின் கீழான சிறுமி ஒருவரை அவரது விருப் பத்துடனேயே துஷ்பிரயோகம் செய்வதும் பாலியல் பலாத்காரமாகவே கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக் கது.
இதேவேளை, சிறுவர் பெண்களுக்கு எதி ரான சம்பவங்களை கட்டுபடுத்துவது தொட ர்பில் பல விடயங்களை பெண்கள் சிறுவர் அமைப்புகளும் பொலிஸாரும் பல்வேறு வழி
முறைகளை தெரிவித்து வருகின்றன.பிள்ளைகள் ஒரு வயது மட்டத்தை அடையும் போது அவர்களுக்கு பாலியல் கல்வியை வழங்குவதனூடாகவும் தொடுகைகள் தொட ர்பான துஷ்பிரயோகங்கள் பற்றி தெளிவான விளக்கங்களை அளிப்பதன் ஊடாக இவற்றை தவிர்க்கலாம் என அவர்கள் குறிப் பிடுகின்றனர்.
மேலும், குறித்த விடயங்கள் தொடர்பாக பாடசாலை மட்டங்களில் மாணவர்களி டையே விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாகவும் இவற்றை கட்டுப்படுத்தலாம் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தகைய கருத்துக்கள் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு பொருத்தமானதாக அமைந்தாலும் காமுகர்களின் கைப்பிடிக்குள் அகப்பட்டு மீண்டெழ முடியாது சிதைக்கப்படும் சிறுமிகளின் படுகொலைகளை கட்டுப்படுத்துவது காமுகர்களுக்கு வழங்கப்படும் அதிஉச்ச தண்டனை கள் மூலமேயாகும்.
அத்துடன், மீண்டும் இந்த வன்செயல்கள் நாட்டில் அரங்கேறாத வகையில் வழக்குகள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு காமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு தண் டனைக்குள் உள்வாங்கப்பட வேண்டும். அதற்கேற்றாற்போல் நாட்டின் சட்டங்களை மாற்றியமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பி னர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரி.விரூஷன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக