திங்கள், 3 ஏப்ரல், 2017

நடிகை ‛மைனா நந்தினியின் கணவர் தற்கொலை

சின்னத்திரை புகழ் நடிகை ‛மைனா' நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். ‛வம்சம்', ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நந்தினி. சினிமாவில் பிரபலமானதை விட சின்னத்திரையில் தான் இவர் மிகவும் பிரபலம்.



விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‛சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்தார். அப்போது முதல் ‛மைனா' புகழ் அவரோடு ஒட்டிக்கொள்ள மைனா நந்தினியானார். தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். தற்போது ஜீ தமிழில் குழந்தைகள் நிகழ்ச்சி, டார்லிங் டார்லிங் தொடர் என பிஸியாக இருக்கிறார்.

நந்தினி, கார்த்திக்கிகேயன் என்பவரை கடந்தாண்டு 5-ம் தேதி ஜூன் மாதம், காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன், சென்னையில் சொந்தமாக ஜிம் வைத்துள்ளார், ஜிம் மாஸ்டராகவும் உள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர்.

கார்த்திகேயன் நேற்று இரவு விருகம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருக்கிறார். என்ன காரணமோ தெரியவில்லை, குளிர்பாணத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி ஓராண்டுகள் ஆகாத நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை கலைஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை கலைஞர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. நடிகர் சாய் பிரசாந்த், நடிகை சபர்ணா ஆகியோ கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல