வியாழன், 28 ஜனவரி, 2010

எக்ஸெல் தொகுப்பில் தேதி பார்மட் இஷ்டம் போல கிடைக்க

எக்ஸெல் தொகுப்பில் 21–11 என டைப் செய்தால் அது 21 November என மாறிவிடுகிறது. அதற்குப் பதிலாக நான் டைப் செய்த பார்மட்டிலேயே (Format) இருக்க வேண்டும் என்றால் எங்கு மாற்றம் செய்திட வேண்டும்?

"21–11'' என மேற்கோள் குறிக்குள் அதனை டைப் செய்யுங்கள். மீண்டும் சொல்கிறேன், அடைப்புக் குறிக்குள் இவை இருக்க வேண்டும். பின் அது மாறாது.


எக்ஸெல் ஹைலைட்டிங்

எக்ஸெல் வேர்க் ஷீட்டில் நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திட விரும்புகிறீர்களா! இதோ இந்த சுருக்கு வழிகளைப் பாருங்கள். மவுஸ் இல்லாமல் இரண்டு கீகளைப் பயன்படுத்தி நெட்டு வரிசையையும் படுக்கை வரிசையையும் ஹைலைட் செய்திடலாம். Ctrl + Spacebar அழுத்தினால் நீங்கள் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் ஹைலைட் ஆகும். Shift + Spacebar கீகளை அழுத்தினால் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் இருக்கும் நெட்டு வரிசை ஹைலைட் ஆகும். பல வரிசைகளை இணைத்து ஹைலைட் செய்திட ஷிப்ட் மற்றும் ஆரோ (Shift + Arrow) கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.


வேர்க் புக் (work book) / வேர்க் ஷீட்(work sheet) என்ன வேறுபாடு?

முதலில் இரண்டு சொற்கள் குறிப்பிடுவதில் வேறுபாடு நிச்சயம் இருக்கிறது. ர்க் வேர்புக் என்பது எம்.எஸ். எக்ஸெல் தொகுப்பில் நீங்கள் உங்களுடைய தகவல்களைப் பதிந்து வைக்கும் பைலுக்கு பெயர். வேர்க் ஷீட் அல்லது ஸ்ப்ரெட் ஷீட் (spread sheet) என்பது செல்கள் அடங்கிய ஒரு ஷீட் ஆகும்.

இதில் நீங்கள் தகவல்களைப் பதிந்து வைக்கிறீர்கள். பதியப்படும் டேட்டாக்களை உங்கள் தேவைக்கேற்பப் பிரித்து கணக்குப் போட்டு பார்க்கிறீர்கள். ஒரு வேர்க் புக்கில் பல வேர்க் ஷீட்கள் இருக்கலாம். எனவே வேர்க்புக் என்பது பல வேர்க் ஷீட்கள் அடங்கிய தொகுதி. பொதுவாக ஒரு வேர்க்புக் ஒரு பொருளைப் பற்றியதாக இருக்கும். எடுத்துக் காட்டாக வீட்டு பட்ஜெட் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் ஒரு வேர்க்ஷீட்டில் உங்கள் செலவுகளை எழுதலாம்; இன்னொன்றில் உங்கள் மக்கள் கல்விச் செலவு குறித்து எழுதலாம்; இப்படி சார்ந்த தனி தகவல்கள் வேர்க் ஷீட்டில் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல