இவ்வாறு கலங்கள் கட்டுப்பாடின்றிப் பெருகுவதால் புற்றுநோய் உடலில் பல்வேறுபட்ட பகுதிகளிலும் ஏற்படுகின்றன.
விஞ்ஞானம் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்ற நிலையிலும் சுவாசப்பை தவிர்ந்த ஏனைய புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான உண்மைக் காரணங்கள் எவை என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களால் திட்டவட்டமாகக் கூற முடியாதிருக்கின்றது.
மார்பு மற்றும் கருப்பை வாசல் புற்றுநோய்கள் என்பனவே பெண்களை அதிகளவில் தாக்குகின்றன.
அதிலும் மார்பகப் புற்றுநோயை உரிய காலத்தில் உரிய பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் தடுக்கலாம்.
மார்கத்தின் சுரப்பிச்சோனைகளிலும், பாலகான்களிலும் புற்று அதிகளவில் ஏற்படுகின்றது.
பொதுவாகவே எந்தப் புற்றுநோயாயினும் அது ஏற்படுவதற்கான காரணத்தைத் திட்டவட்டமாக கூற முடியாவிட்டால் புற்றுநோய் ஏற்படக் கூடிய ஆபத்துடையவர்களாக சிலர் இனம் காணப்படுகின்றனர்.
அவ்வாறு மார்பகப் புற்றுநோய் ஏற்படக் கூடிய ஆபத்துடையவர்களாக,
மிக இளவயதில் பருவமடைந்தவர்கள்
30 வயதின் பின் முதலில் கர்ப்பந்தரித்தவர்கள்
50 வயது தாண்டிய பின்னரும் மாதப்போக்கு நிற்காதவர்கள்
குழந்தை பேரில்லாதவர்கள்
மிகவும் உடற்பருமன் உள்ளவர்கள்
ஆகியோர் மார்பக புற்றுநோய் அதிகளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இதுவொரு பரம்பரை நோயல்ல.
ஆனாலும் தாய் அல்லது சகோதரிக்கு ஏற்பட்டால் குறித்த நபருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளுண்டு.
மார்பகக் புற்றுநோய்க்கான அறிகுறிகள்:
மார்பகத்தின் கட்டி, திணிவு ஏற்படல்
மார்பகத்தின் மேற்பரப்பில் சிறு குழிவுகள் ஏற்படல்
கக்கப் பகுதியில் சிறுகாய் (கட்டி) உருவாகுதல்
பாலூட்டும் தாய் மார்களிடம்) மார்பகத்தின் காம்பிலிருந்து குருதி,சீழ் போன்றவை மஞ்சள் திரவம் கசிதல் அல்லது வலிஏற்படல்
மார்பகக் காம்பு உள்நோக்கித் திரும்புதல் காம்பு மார்பகம் என்பவற்றில் அரிப்பு அல்லது செந்நிறமாகக் காட்சியளித்தல்.
மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கக் கூடிய வழிமுறைகள்
20 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுயபரிசோதனை செய்தல். ஐந்து வருடத்துக்கு ஒருமுறை வைத்தியரை நாடுதல்
30 – 40 வயது உட்பட்டவர்கள் 3 அல்லது 4 வருடத்திற்கு ஒருமுறை வைத்தியரை நாடுதல்
40 வயது பின் ஒவ்வொரு வருடமும் வைத்தியரை நாட வேண்டும்.
உரிய நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே இனம்கண்டு உரிய சிகிச்சைகளைப் பெறுவதன் மூலம் வாழ்வை வளமாக்கிக் கொள்வோம்.
ரோஸி, திப்பிட்டிய



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக