சனி, 20 பிப்ரவரி, 2010

என்ன அழகடி கண்ணே

என் உம்மாவைப் போலத்தான்

உன்னையும் அதிகம் பிரியப்படுகிறேன்

உன் அழகிய பூமுகம்

எப்போதுமே ஒரு வாசம்தான்.


மண் அழைதல் பிட்டுச் சுடுதல்,

மண் சோறாக்கல்

எல்லாமே, உனக்கு

கை வந்த கலை

என் மாமியாரைப் போல.


தெத்திக்கோடு தெத்துதற்கும்

குண்டு விளையாடுவதற்கும்

வண்ணத்துப் பூச்சி பிடிப்பதற்கும்

தம்பி யொன்று

நாளைக்கே பெற்றுத்தர வேண்டுமென்றாய்.


வீதியில் கிடக்கும்

மழைத் தண்ணிக்குள்

உன் கால்களை

அமிழ்த்திச் சொல்வாய்

நல்லா இருக் கென்று


பட்டமொன்றும் கட்டிக் கேட்டிருந்தாய்

கூடவே

மீன் தொட்டி யொன்றுக்கும்

ஊஞ்ச லொன்றுக்கும் சொன்னாய்


என் அழகடி கண்ணே

மீறவா முடியும்

இதுதானடி இயற்கை

என் உம்மாவைப் போலத்தான்

உன்னையும்

அதிகம் பிரியப்படுகிறேன் என்றும்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல