சனி, 20 பிப்ரவரி, 2010

இரவுகள்

எனக்குத் தெரியும்

என்னைப் போலவே

இரவுகள்தான் உனக்கும்

அதிகம் பிடிக்குமென்று.


ஏனெனில்

நீயும், நானும்

மிக நெருக்கமாய்

இருக்கும் பொழுதுதான்

அதுதானே.


பகல் பொழுதுகளின்

இடைவெளிகள்

மொத்தத்தையும்

இங்கேதான்

நிரப்பிக் கொள்கிறோம்.


இரவுப் பொழுதுகள்

உனக்கும் எனக்கும்

மிக உன்னதமானவை

நீயும் நானும்

கதை பேசி

கொஞ்சி விளையாடும்

தருணம் அதுவல்லவே


இன்னும்

பெருமூச்செறிவதற்கும்

யாது மற்றுத் தூங்குதற்கும்

இரவுகள்தானடி துணை.


இந்த இரவுகளில்

உனக்கும் எனக்கும்

எதுவுமே தேவையில்லை.

எனக்கு நீயும்

உனக்கு நானும்

போதும் மகளே...

பகல் பொழுதின்

இடைவெளிகள் மொத்தத்தையும்

நிரப்பிக் கொள்ள.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல