பூமியெங்கும்
தவளைக் கல்யாணம்,
இடிமின்னலால் ஓர்
இசைக்கச்சேரி
கோடையில் ஒப்பாரிவைத்த
கிணற்றடிகளும்
நெல்வயல்களும்
நிரம்பி வழிகையில்
மூகாப்பூச் சூடிய வானம்
இன்றும் ஏன் அழுகிறது!
கானான்கள்
குடை வியாபாரம்
கூரைத் தகடுகளில்
அடைமழை ஆரவாரம்
பள்ளத்தில் வாழ்வோர்
பரிதாபம்
மேடுகளில் வாழ்வோர்
கொடுத்து வைத்தவர்கள்
வாழ்க்கை நிறைய
வண்ணத்துப்பூச்சிகளும்
கொஞ்சம் மழைக்காலமும்
இருக்கட்டும்!!
நியாஸ் முஸாதிக்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக