சனி, 20 மார்ச், 2010

11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர்

கொல்லப்பட்ட சிறுவன் Li Xuetang
11 வயது சிறுவன் ஒருவனைக் கொன்று அவனது மூளையை உண்ட ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தென் மேற்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது. யுனான் மாகாணத்திலுள்ள கிஸியன் கிராமத்தைச் சேர்ந்த வாங் சயொக்ஸு (Wang Chaoxu, 29)என்ற மேற்படி நபர், மண்புழுக்களுடன் மனித மூளையை சேர்த்து உண்பதன் மூலம் தனது வலிப்பு நோயை (epilepsy) குணப்படுத்த முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தாய் Yu Chaohu

இரவு நேர உணவு வேளையின் போது சிறுவனான லி ஸுயடாங் (Li Xuetang) காணாமல் போயுள்ளதை அறிந்த அவனது தாய் யு சயோஹு (Yu Chaohu), கிராமம் முழுவதும் அவனைத் தேடியுள்ளார். உள்ளூர் வானொலிச் சேவையிலும் சிறுவன் காணாமல் போனது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில், மேற்படி சிறுவனை ஒருவர் கழுத்தில் பிடித்து இழுத்துச் செல்வதைக் கண்டதாக வாங் வென்ஸ்ஹொங் (Wang Wenzhong) என்ற கிராம தலைவர் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்தைச் சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.

சிறுவனின் வீட்டிலிருந்து 3 மைல் தொலைவில் அயல் கிராம வயலிலுள்ள பாறைகளில் சந்தேகத்துக்கிட மான இரத்தத் துளிகள் அவதானிக்கப்பட்டதையடுத்து அவ்வயலில் புதைக்கப்பட்டி ருந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. சிறுவனின் தலையின் மேல் பகுதி வெட்டி உரிக்கப்பட்டு அவனது மூளையின் ஒரு பகுதி அகற்றப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வாங் சயொக்ஸு கைது செய்யப்பட்டான்.

வாங் சயொக்ஸு, மருத்துவத் தாதியொருவரை திருமணம் செய்திருந்தார். எனினும், வலிப்பு நோயால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது அவர் இருப்பதை அறிந்த மேற்படி மருத்துவ தாதி அவரை விட்டு பிரிந்து சென் றுள்ளார்.

அதே சமயம் சம்பவ தினம் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறு மியொருவரும் வாங் சயொக்ஸுவால் படு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேற்படி சிறுமி தலையில் கத்திக் காயத்துடன் பொது மலசலகூடமொன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல