அந்தவகையில், கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவமொன்றில் நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்க நபரொருவரை மீன் வெட்டும் கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு அவரது இரு கரங்களையும் எடுத்துச் சென்ற மிகக் கொடூரமான சம்பவம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி மத்திய சந்தை முன்பாக பழவர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவரே இவ்வாறு கோரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நண்பகல் 12 மணிக்கு முச்சக்கர வண்டியொன்றில் அங்கு வந்த சிலர் அந்த வியாபாரியை பிடித்திழுத்து தாம் கொண்டுவந்த கத்தியால் துடிக்கத் துடிக்க வெட்டி கொலை செய்ததுடன் ஆத்திரம் தாங்காது அவரது இரு கரங்களையும் துண்டித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் அங்கு கூடி நின்ற மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும், எவரும் முன்வந்து தட்டிக் கேட்கவோ அதனை தடுத்து நிறுத்தவோ முடியாது போனது மிகவும் துரதி ருஷ்டவசமானதாகும். இச்சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜி.டி. பிரேமச்சந்திரன் என்பவரே படுகொலை செய்யப் பட்டவராவார். இப்படுகொலைக்கான காரணம் உடன் தெரியவராத போதிலும் முச்சக்கர வண்டியில் வந்தவர்களுக்கும் இவருக்கு மிடையே உள்ள குரோதம் இக்கொலைக்கு வழிவகுத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தளவு தூரம் கொடூர மனம் படைத்தவர் கள் இங்கு வாழ்கின்றார்களா என வியக்க வைக்கும் வகையில் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. இருந்தபோதிலும் அவற்றை தடுத்து நிறுத்த முடியாது இருப்பதும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாது போவதும் வன்முறைகள் மேலோங்குவதற்கு காரணமாக அமைகின்றது.
யுத்தம் இடம்பெற்ற கடந்த காலங்களில் திடீர் திடீரென மக்கள் காணமால் போவதும் வாகனங்களில் வந்து கடத்திச் செல்லப்படுவதும் சுட்டுக் கொல்லப்படுவதும், நாட்டில் சர்வசாதாரணமாக தொடர்ந்து வந்தன.
பட்டப்பகலில் இவை நடந்தபோதிலும் அதனை தடுத்து நிறுத்தவோ அன்றேல் தட்டிக் கேட்கவோ மக்கள் எவரும் முன்வர வில்லை. மேலும் இதனை யார் செய்கிறார்கள்? எதற்காக செய்கிறார்கள் என்பதும் தெரியாத நிலையில் மக்கள் மத்தியில் அச்ச உணர்வே மேலோங்கி இருந்தது.
அது மாத்திரமன்றி இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குழுக்களாகவும் ஆயுததாரிகளாகவும் வருவது மக்களை மேலும் பதற்றத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியது. இவ்வாறான சம்பவங்கள் சற்று கட்டுக்கடங்கியுள்ள நிலையில், அதே பாணியில் சிறு சிறு சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெறுவதை காணமுடிகிறது.
சொந்த பகைமை காரணமாக, தங்கள் எதிரிகளை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற வக்கிர உணர்வுடனேயே ஒரு சிலர் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, பகைமை உணர்வு மற்றும் தொழில் போட்டி காரணமாக, தங்கள் எதிரிகளைத் தீர்த்துக் கட்டும் நோக்குடன் சிலர் இவ்வாறான குற்றச்செயலுடன் தொடர்புடைய “ஒப்பந்தகாரர் களை' தேடி அலையும் போக்குகளையும் இந்த நாட்டில் காண முடிகின்றது. இவற்றைக் கருத்திற் கொண்டே அண்மையில் பாதாள உலகக் கோஷ்டியினரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டனர். அத்துடன், பொலிஸாருடன் இடம் பெற்ற மோதல்களின்போது பாதாள உலகத்தைச் சேர்ந்த சிலர் சுட்டுக் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக போதைவஸ்து கடத்தல் மற்றும் ஆயுத விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதுடன், நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்புக்கு மிகுந்த சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் தமது நடவடிக்கைகளை மிகவும் மர்மமாகவே மேற்கொண்டு வருவதால் யார் என்பது குறித்து பகிரங்கமாக தெரியாத நிலையில் அவர்களை இனங்காண்பதும் சட்டத்தின் முன் நிறுத்துவதும் கூடகடினமான காரியமாகவே இருந்து வரு கின்றது.
இலங்கையில் குற்றச்செயல்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமானால் முதலில் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத ஆயுதங்களை மீட்பதற்கும் திரை மறைவில் இயங்கும் சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் சாத்தியமான நடவடிக்கைகளை பாதுகாப்புக்கு பொறுப் பானவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்புத் தரப்பினருக்கு சவால்விடும் வகையில் இச்சக்திகள் இயங்குவதுடன் மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டுக்கு அவப் பெயரை தேடித்தரும் வகையிலும், தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, இவ்வாறான சக்திகளை தேடிக் கண்டுபிடித்து உரிய தண்டனை கொடுக்க சம்பந்தப்பட்ட வர்கள் முன்வர வேண்டும்.
அதேபோன்று இவ்வாறான சட்டவிரோத சம்பவங்கள் தத்தமது வாசல் வரும் வரை காத்திராமல் அவற்றை தடுத்து நிறுத்த பொது மக்களும் முன்வர வேண்டும். இன்றேல் இவ்வாறான தீய சக்திகளின் கண்டித்தனமான நடவடிக்கைகள் அதிகரிப்பதுடன் அவர்களின் கரங்களே மேலோங்குவதாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
வீரகேசரி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக