இளமையில் வழுக்கைத் தலை ஏற்படும் ஆண்களுக்கு விதைப்பை சுரப்பியில் புற்று நோய் ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளமை தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக வாஷிங்டன் மருத்துவ பல்க லைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
40 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட 2000 ஆண்களை ஆய்வுக்குட்படுத்தியே விஞ்ஞானிகள் இந்த ஆய்வு முடிவு களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாலியல் ஹோர்மோனான தெஸ்டொஸ் தெரோன் உயர் மட்டத்தில் உள்ள ஆண்களுக்கே இளமையில் தலையில் வழுக்கை ஏற்படுவதாக தெரிவிக்கும் விஞ்ஞானிகள், மேற்படி ஹோர்மோன்கள் உடலில் உயர் மட்டத்தில் காணப்படுவது உடலில் புற்று நோய் போன்ற வளர்ச்சிகள் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக கூறுகின்றனர்.
தமது உச்சந்தலையில் வழுக்கையை கொண்டுள்ள ஆண்களுக்கு விதைப்பைச் சுரப்பி புற்று நோய் ஏற்படும் அபாயம் 29 சதவீதத்திலிருந்து 45 சதவீதம் குறைவாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
வழமையாக விதைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட் டவர்களுக்கு பாலியல் ஹோர் மோனான தெஸ்டொஸ் தெரோனின் அளவைக் குறைக்கவே மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்ட பின், மேற்படி ஹோர்மோன் அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த புதிய ஆய்வில் இளமையில் வழுக்கை மேற்படி நோயிலிருந்து பாதுகாப்பைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக