செவ்வாய், 16 மார்ச், 2010

உலகிலேயே வயதான நபராக 130 வயது ஜோர்ஜிய பெண்

உலகிலேயே வயதான பெண்மணி ஜோர்ஜியாவில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

பின்தங்கிய மலைப் பிராந்திய கிராமமொன்றில் வாழும் அன்திஸா கிவிசவா (Antisa Khvichava), எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி தனது 130 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளதாக ஜோர்ஜிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கிவிசவாவை உலகின் வயதான நபராக "கின்னஸ்' உலக சாதனை புத்தகத்தில் பதிவுசெய்யும் முகமாக ஜோர்ஜிய அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

"எம்மிடம் கவிசவாவின் வயதை நிரூபிக்கத் தேவையான ஆவணங்கள் உள்ளன'' என ஜோர்ஜிய பொதுப் பதிவு முகவர் நிலையத் தலைவர் ஜிஆ வஷட்ஸே (Gia Vashadze) தெரிவித்தார்.

தஸலென்ஜிகி பிராந்தியத்தில் வசிக்கும் கவிசவா சிறந்த ஆரோக்கிய நிலையில் உள்ளதாகவும், சூதாட்ட விளையாட் டொன்றில் ஈடுபடுவதையும் மதுபானம் அருந்துவதையும் அவர் வழமையாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின் வயதான நபரான இடம் பிடித்துள்ள ஜப்பானைச் சேர்ந்த கமாசினெனுக்கு வயது 114 மட்டுமேயாகும். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல