செவ்வாய், 16 மார்ச், 2010

தோழனுக்கு ...

குடிப்பதே வெளிச்சமென
குதூகலித்துக் கொள்கிறாய்
குடும்பமது இருளாவதை
புரிந்திட மறுக்கிறாய்

மனைவியும் மழலையும்
உறவென உனக்கிருக்க
மதுபான போத்தலையே
உறவென நினைக்கிறாய்

உன் ஆயுளோடு
உனை நம்பும் குடும்பத்தின்
உவகையையும் அல்லவா
குடித்துத் தள்ளுகிறாய்

அயல்வீட்டான் பார்த்திருக்க
ஆசை மனைவியை
அடித்து உதைப்பதுவா வீரம்
அயல் வீட்டான் வியந்து பார்க்க
அவளை உயர வைத்து
அன்பு அளிப்பதே வீரம்

பள்ளிக்குப் போகும்
சின்னப் பிள்ளையின்
பாடக் கொப்பிக்கு
பணம் இல்லை என்பாய்
பகல் வேளை மதுக்கடையில்
பணம்தன்னை நண்பர்க்கு
அள்ளி இறைப்பாய்

மனைவியின் காதிலே
தோடு இல்லை
மழலையின் காலிலே
செருப்பு இல்லை
எப்படித்தான் சொன்னாலும்
உனக்கு ஏறுது இல்லை

குறிஞ்சி மலையேறி
கொழுந்து பறிக்கும்
மனைவி பணத்தையும்
மதுபான கடைக்கல்லவா
மாற்றம் செய்கிறாய்

குடிகாரத் தோழா
கொஞ்சம் கிட்டவாடா
மதுபானம் என்பது
நீர்வடிவ நெருப்படா
மனைவியும் மழலையும்
உன் இதய இருப்படா
அவர்க்கு மகிழ்ச்சி அளிப்பது
உன் பொறுப்படா நண்பா
மாயையில் இருந்து விடுபடடா
மலைத்தேசம் காணும் சிறப்படா

யோ. புரட்சி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல