அமெரிக்காவில் உள்ள மேரிலேண்டில் ரொபர்ட் பெர்னாட் ஜுவெல்லரி (Robert Bernard Jewelers) என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருபவர் ஜோர்ஜ் கவுப்மேன் (George Kaufmann). இவரது வளர்ப்பு நாயான ஸொல்லி (Sollie) எப்போதும் இவருடன் நகைக்கடையிலேயே இருக்கும்.
வைர வியாபார பங்காளி ஒருவர் 3 கரட் வைரமொன்றை மேசையில் வைத்து ஜோர்ஜிடம் காட்டிக்கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக மேசை சுழலவே வைரம் தரையில் விழுந்தது. அப்போது அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஸொல்லி, உடனே லபக் என எடுத்து விழுங்கிவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோர்ஜும் அவரது பங்காளியும் வைரத்தை எப்படியாவது வெளியே எடுக்கவேண்டும் என நினைத்தனர். ஜோர்ஜ் மிருகவைத்தியரிடம் ஸொல்லியை அழைத்துச் சென்றார்.
ஆனால் டாக்டர்கள் ஒன்றும் செய்ய முடியாது. இயற்கையாக மலம் மூலம் வெளியே வந்து விடும் என்று கூறி விட்டார்கள். அதன்படி 3 நாள் கழித்து இயற்கையாகவே வைரம் வெளியே வந்துவிட்டது.
அதன் பிறகுதான் ஜோர்ஜும் அவரது பங்காளியும் நிம்மதி அடைந்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக