செவ்வாய், 16 மார்ச், 2010

பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்

ஈராக்கில் குண்டுத் தாக்குதல் ஒன்றில் குருடான பிரித்தானிய படை வீரர் ஒருவர், நாக்கில் பொரு த்தப்பட்ட அதி நவீன தொழில் நுட்பக் கருவி மூலம் பார்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளார்.

வால்டன் நகரைச் சேர்ந்த கிரெய்க் லண்ட் பேர்க் (24 வயது) என்ற இந்த இளைஞருக்கு மேற்படி நாக்கில் பொருத்தப்பட்ட உபகரணத்தின் மூலம் சொற்களை வாசிக்கவும், உருவங்களை அடையாளங் காணவும் எதுவித உதவியுமின்றி நடக்கவும் முடிகிறது. மூக்குக் கண்ணாடியுடன் இணைக்கப்பட்ட சிறிய வீடியோ புகைப்படக் கருவி மற்றும் நாக்கில் பொருத்தப்படக் கூடிய பிளாஸ்ரிக் கருவி என்பன வற்றை இந்த “பிறைன்போர்ட்' என்ற உபகரணம் உள்ளடக்கியுள்ளது.

வீடியோ புகைப்படக் கருவி மூலம் பெறப்படும் காட்சிப்புல பிரதி மைகளை பிளாஸ்டிக் கருவி தொடர் மின்சார அதிர்வலைகளாக மாற்றுகிறது.

9 வோல்ட் பற்றறி மூலம் இயங்கும் இந்தக் கருவியானது இரு பரிமாண கறுப்பு வெள்ளைக் காட்சித் தோற்றமொன்றை நாக்கில் அடையாளப்படுத்தி உணரச் செய்கிறது.

இக்கருவியை கையாள்வதற்கான பயிற்சியை பெறும் ஒருவர், நாக்கில் பிரதிபலிக்கப்படும் அழுத்த தோற்றப்பாடுகளுக்கு இணங்க எதிரேயுள்ள பொருட்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல