கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது ஈட்டியார் எஸ்டேட். இங்கு தொழிலாளியாக வேலை செய்து வருபவர் கிருஷ்ணன். இவரது மகன் பிரேம்குமார், அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவன், தன் இரண்டு காதுகளையும் காதுக்குள் சொருகிய நிலையில் சக மாணவர்களை அசர வைக்கிறார்.
இரவு நேரத்தில் இரண்டு காது களையும் மூடிய நிலையில் தூங்கிவிட்டு, காலையில் எழும் போது காதுகள் தானாக திறந்துவிடுகிறது. சிறுவன் எப்போது வேண்டுமானாலும் காதை காதுக்குள் சொருகி வைத்துவிட்டு, தன் படிப்பை முழு கவனத் துடன் படிக்கிறான். மற்ற மாணவர்களிடம் இருந்து தனித்திறமை கொண்ட இந்த மாணவனின் செயலை சக மாணவர்கள் மட்டு மின்றி, அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் பொழுது போக்காக வேடிக்கை பார்க்கின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக