செவ்வாய், 16 மார்ச், 2010

இழந்த செல்வாக்கை தூக்கி நிறுத்த சினிமா! நித்தியானந்தாவின் ஆச்சிரமம் தீவிர முயற்சி

நித்தியானந்தா இழந்த செல்வாக்கை தூக்கி நிறுத்தம் வகையில் அவரின் புகழை பறைசாற்றும் திரைப்படம் ஒன்றை தயாரிக்க அவரது ஆச்சிரமம் முயன்று வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக பல சினிமா பிரபலங்களுடனும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நடிகை ரஞ்சிதாவுடனான வீடியோ காட்சிகளால் பல சர்ச்சைகளை சந்தித்திருக்கும் நித்தியானந்தா இதுவரை நான்கைந்து பேட்டிகளை கொடுத்து விட்டாலும், பத்திரிகையாளர்கள் முன் தோன்றி விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. அதேபோல சாமியாருடன் நெருக்கமாக இருந்த நடிகை ரஞ்சிதாவும் இந்த விவகாரம் குறித்து பேச பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் தற்போது நித்தியானந்தாவை பற்றிய புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அது நித்தியானந்தாவை பற்றிய திரைப்படம் ஒன்று எடுக்கப் படவுள்ளது என்பதே. சர்ச்சைக்குரிய வீடியோவால் ஒரே நாளில் பல பக்தர்களின் மனதில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவரின் புகழை தூக்கி நிறுத்தும் முயற்சியாகவே இது மேற்கொள்ளப்படவிருக்கிறது.

நித்தியானந்தாவின் ஆச்சிரமத்தினால் செயற்படுத்தப்படவுள்ள இந்த முயற்சிக்காக பெரிய அளவிலான பணத்தையும் ஒதுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அத்துடன் இது குறித்து அவர்களுடன் தொடர்பில் இருக்கும் சினிமா பிரபலங்களிடமும் இந்த விடயத்தை சொல்லி சரியான இயக்குனரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நித்தியானந்தரின் புகழை பறை சாற்றும் வகையில் உருவாகவிருக்கும் இப்படத்தில், நிஜமாகவே நித்தியானந்தா இடம்பெறும் பிரசங்க, அருளாசி காட்சிகளும் இடம் பெறவிருக்கின்றதாக தெரிவிக்கபடுகிற நிலையில் நித்யானந்தரின் விவகாரத்தை அப்படியே திரைப்படமாக்கவும் இன் னொரு தரப்பு முயன்று வருகிறது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல