சனி, 17 ஏப்ரல், 2010

சாம்பார் வகைகள்

பொன்னாங்கண்ணி சாம்பார்


தேவையானப் பொருட்கள்

•கீரை - ஒரு கட்டு

•வடகம் - ஒரு தேக்கரண்டி

•மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி

•துவரம் பருப்பு - கால் கப்

•பெரிய வெங்காயம் - 2

•எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

•புளி - ஒரு எலுமிச்சை அளவு

•உப்பு - ஒரு மேசைக்கரண்டி

•தேங்காய் துருவல் - அரை கப்

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கீரை அலசி விட்டு போட்டு தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு வேக விடவும்.

தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து 11/2 கப் அளவு புளிக்கரைச்சல் எடுத்துக் கொள்ளவும்.

துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் போட்டு வதக்கிய பிறகு கீரையை சேர்க்கவும்.அதன் பின்னர் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும்.

கடைசியாக புளிக்கரைசல், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.



கத்திரிக்காய் சாம்பார்


தேவையானப் பொருட்கள்

•கத்திரிக்காய் - 5

•வெங்காயம் - ஒன்று

•சாம்பார் பொடி - கால் கப்

•தக்காளி - ஒன்று

•உப்பு - 1 1/2 ஒன்றரை மேசைக்கரண்டி

•கடுகு - அரை தேக்கரண்டி

•வெந்தயம் - அரை தேக்கரண்டி

•துவரம் பருப்பு - கால் கப் + அரை தேக்கரண்டி

•புளி - எலுமிச்சை பழ அளவு

•கறிவேப்பிலை - ஒரு கொத்து

கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெந்தயம், அரை தேக்கரண்டி துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு 10 நொடி வதக்கவும்.

பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

ஒரு நிமிடம் வதக்கிய பிறகு 2 கப் புளித் தண்ணீரை ஊற்றி அதனுடன் உப்பு, சாம்பார் பொடி போட்டு கலக்கி விடவும்.

அதன் பின்னர் கத்திரிக்காயை போட்டு 10 நிமிடம் வேக விடவும்.

கத்திரிக்காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

முருக்கங்காய் மாங்காய் சாம்பார்


.தேவையான பொருட்கள்

•முருக்கங்காய்-2

•மாங்காய்-1

•துவரம் பருப்பு-1 கப்

•சின்ன வெங்காயம்-150 கிராம்

•பச்சை மிளகாய்-3

•தக்காளி-3

•மிளகாய்த்தூள்-2 தே.க

•மஞ்சள்-1/2 தே.க

•பெருங்காயத்தூள்-1/4 தே.க

•புளி எலுமிச்சை அளவு

•கறிவேப்பிலை சிறிதளவு

•உப்புதேவையான அளவு

•எண்ணெய்

•வறுத்து அரைக்க

•காய்ந்தமிளகாய்-6

•சீரகம்-1 தே.க

•மிளகு-1 தே.க

•வெந்தயம்-1 தே.க

•துவரம் பருப்பு-1 தே.க


செய்முறை

•துவரம் பருப்பை மஞ்சள்,உப்பு,பெருங்காயம் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

•அரைக்க கொடுத்த பொருட்களை வறுத்து அரைக்கவும்.

•புளியைக் கரைத்து வைக்கவும்.

•முருக்கங்காய்,மாங்காய்,வெங்காயம்,தக்காளியை நறுக்கி வைக்கவும்.

•ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு, அது வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

•வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

•தக்காளி வதங்கியதும் முருக்கங்காய்,மாங்காயைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

•பின்பு மஞ்சள்,மிளகாய்த்தூள்,உப்பு போட்டு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

•காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து, புளிக்கரைசலையும் விட்டும் கொதிக்கவிடவும்.

•கொதித்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


குறிப்பு:


இது இட்லி, தோசை, சோறு, புட்டுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.




இட்லி சாம்பார்(காய் இல்லாமல்)


.தேவையான பொருட்கள்


•துவரம்பருப்பு -1கப்

•சின்னவெங்காயம் -10

•காய்ந்தமிளகாய் -2

•கறிவேப்பிலை -1கொத்து

•தக்காளி -1

•மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்

•சாம்பார்பொடி -1ஸ்பூன்

•புளிகரைசல் -1/4கப்

•உப்பு -தேவையான அளவு

•கொத்தமல்லிதழை -சிறிது

•தாளிக்க;

•எண்ணை -1ஸ்பூன்

•கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு-1/2ஸ்பூன்

•பெருங்காயம் -1/2ஸ்பூன்

•வெந்தயம் -1/4ஸ்பூன்

செய்முறை


•குக்கரில் பருப்பை வேகவைக்கவும்.

•வெங்காயம் உரித்து முழுதாகவைக்கவும்.தக்காளி நறுக்கி வைக்கவும்.மிளகாயை இரண்டாக கிள்ளி வைக்கவும்.

•வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,வெந்தயம் தாளித்து மிளகாய்,கறிவேப்பிலை போட்டு,உரித்தவெங்காயம் போட்டு வதக்கவும்.

•வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள்பொடி, சாம்பார்பொடி,புளிகரைசல்,பெருங்காயம் சேர்த்து வதக்கி வெந்த பருப்பை போடவும்.

•தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லிதூவி இறக்கவும்.

•சுவையான இட்லி சாம்பார் ரெடி.


குறிப்பு:


காய் எதுவும் இல்லாதபோது இந்த சாம்பார் வைக்கலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல